24-02-2019, 12:36 PM
போனையே சிறிது நேரம் வெறித்துப் பார்த்தாள். இது எடுத்து என்ன ஒரு ரெண்டு வருஷம் இருக்குமா? அப்பெல்லாம் போன் எடுப்பதேண்டால் பெயரைப் பதிந்துவிட்டு நீண்டநாள் காத்திருக்கவேண்டும். கிட்டத்தட்ட ஆறுமாதம்.. காத்திருந்து காத்திருந்து ஒருநாள் வந்தேவிட்டது. வந்ததும் முதல் வேலையாய் அவள் புரட்டியது Phone Directory தான்.
*****
தொடரும்..
"T.. T.. T.." ஆ இங்க இருக்கு.. Alexandra tr. கண்டுபிடித்து விட்டாள். சந்தோசத்தில் இலக்கங்களை அழுத்தும் போது விரல்கள் நடுங்கின.
"ரிங் போகுது" இதயம் படக் படக் என்றது.. எடுத்தது அவனது அப்பா..
"ஹலோ.."
"May I Speak to Sudha, Please?" முன்னமே ஒரு பத்துத் தரம் ஒத்திகை பார்த்திருந்தாள்.
"Hold on the line, please" மூச்சு முட்டியது. அம்மாவை முதலே பிளான் பண்ணி கீழ் வீட்டுக்கு அனுப்பியிருந்தாள். அதால இப்போதைக்கு வரமாட்டா.
"ஹலோ.." என்ன ராகமாய் இருக்கும்? "Hello.. Who is on the line?"
"நான் வந்து.. "
"oh my god.. நீங்களா.. கனநாளைக்குப் பிறகு.. என்ன செய்து கொண்டிருக்கிறீங்க?"
"நான் maths படிக்கிறான் நீங்க?"
"நான் bio.. குஹனாதன் sirட தான்."
எல்லாம் ஒரு ஏழெட்டு மாசத்துக்கு முதலே கதைத்தவை தான். அப்போதுதான் சாதரணதரம் முடித்துவிட்டு resultsஇட்காகக் காத்திருந்தனர். அவன் பயோ படிக்கப் போறதா முதலில் சொன்னபோது. ஒ.. அப்ப டாக்டர் தானே.. என்று நக்கலாய்க் கேட்டது ஞாபகம் வந்தது. பிறகு எனக்கு வீட்டிலை வந்து maths சொல்லித்தந்த கருணா sir ஐ அவனுக்குத் தெரியும் என்றபோதுதான் அவன் வீடு எங்கே இருக்கு என்று கேட்டிருந்தாள். முன்னாலுள்ள வீதி என்றபோது, அட, இத்தனை நாளா sir சொல்லிக்கொண்டிருந்த அந்தக் 'கெட்டிக்காரப் பெடியன்' அவன்தான் என்று விளங்கியது. அதனால் கொஞ்சம் மரியாதையும் வந்திருந்தது.
"உங்கட பாட்டு அரங்கேற்றம் நடந்தது எண்டு கேள்விப்பட்டன் அதுதான் விஷ் பண்ணலாமெண்டு.."
"ஒ. அதுவா தேங்க்ஸ்."
"எங்களையெல்லாம் மறந்திட்டீங்கதானே. invite பண்ணேல்லை."
"அப்பிடியெல்லாம் இல்லை. சும்மா ஒரு சின்ன நிகழ்ச்சிதான்."
..........
.........
"ஒ.. இங்க நேற்று ஒரே மழை, ரோட்ல நல்ல வெள்ளம். உங்கை எப்படி?" முன்தெரு.. ஒரு முப்பதுநிமிச நடை தான் இருக்கும்.
"ஒ.. இங்கயும் சரியான மழை தான்.."
............
............
பிறகென்ன..? "சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா, இன்னும் இருக்கா.. என்னமோ மயக்கம்" என்ற ரேஞ்ச்சுக்கு அவள் டூயட் பாடத் தொடங்கி விட்டிருக்க " பொறுங்க. அம்மா கூப்பிடுறா, நான் பிறகு கதைக்கிறன்" என்று வைத்துவிட்டான்.
*****
தொடரும்..