24-02-2019, 12:35 PM
இல்லைபிள்ளை. நீரும் படிக்கவேனும்தானே. அதுதான் உம்மடை நல்லதுக்கும்தான் சொன்னனான்."
அவரின் வாஞ்சையான பேச்சு அவளது குற்றவுணர்வை இன்னும் அதிகரித்தது. எதுவும் பேசாமல் போனை வைத்துவிட்டாள். அந்தத்தாயின் பாசத்துக்கு முன்னால் தனது காதல் தோற்றுவிட்டதாய் உணர்ந்தாள். இப்படிப்பட்ட ஒரு தாய்க்காக தனது காதலைக்கூட அவன் தியாகம் செய்யத் தயங்கமாட்டான் என்று தோன்றியது.
இப்படித்தான் அப்பாவும், அவளுக்கு நினைவுதெரிந்த நாளிலிருந்து மூச்சுக்கு முன்னூறுதரம் "படிபடி.." எண்டு அதுக்கான அவர் தரப்பு வாதங்களை சொல்லச் சொல்லக் கேட்டுக் மனப்பாடமே ஆகியிருந்தது.
"உனக்கு இப்ப நாங்க சொல்லுறது விளங்காது. பிறகுதான், உன்னோடை படிச்சவை எல்லாம் நல்லா முன்னுக்கு வரேக்க தான், நான் அப்ப படிக்காம விட்டுட்டமே எண்டு வருத்தப் படுவாய்.. உனக்கு நாங்க செஞ்சது போல எனக்கும் எங்க அப்பா அம்மா வசதி செய்து தந்திருந்தா நான் எவ்வளவு சந்தோசமா பெரிய படிப்பெல்லாம் படிச்சிருப்பன்.. நாங்க விட்டதை நீதான் நல்லாப் படிச்சு எங்கட குடும்பத்துக்கே பெருமை சேர்க்க வேணும். எங்களுக்கு வேற யார் இருக்கினம்? உன்னைத்தான் நம்பியிருக்கிறம்." கேட்ட பல்லவியாய் இருந்தாலும், கடைசில அவர் தளுதளுத்த குரல்ல முடிக்கேக்க.. எப்படியாச்சும் படிச்சு பெரியாளா வந்து நாம யார்ன்னு காட்டவேணும் எண்டு ஒரு வேகம் வரும். அதெல்லாம் கொஞ்ச நாளுக்குத்தான். பிறகு வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறிவிடும். "என்னப்பா.. படிச்சு என்னத்தைக் காணப் போறம். எல்லாரும் கடைசில சாகத்தானே போறம்." அவளது வயதுக்கு மீறின பேச்சு விரக்தியின் வெளிப்பாடா அல்லது உண்மையின் தேடல்களுக்கான அறிகுறியா என்று இதுவரை அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை.
"என்ன இருக்கிரீர்தானே லைன்ல.." ஆன்ட்டியின் குரல் அவளை இந்தவுலகத்துக்கு திரும்ப அழைத்து வந்தது. ஆனால் என்ன கதைத்துக்கொண்டிருந்தோம் என்பது மறந்துவிட்டது.
"ஓம் ஆன்ட்டி.. ஆனா நீங்க அப்பிடிச்சொன்னதுதான் எனக்கு கஷ்டமா இருந்தது. ஏனென்டா நான் அவருக்கு போன் பண்ணுவதேயில்லை. அனு மூலமாத்தான்.." நாக்கைக் கடித்துக்கொண்டாள். அவனின் சம்மதத்தை கேட்டு தோழி மூலமாய் தூது விட்டதை போய் அவன் அம்மாவிடமே யாராவது சொல்லுவார்களா?
"ஒ.. அவள் தான் சொன்னதா.. நான் கேட்குறன் என்னண்டு." சே.. என்ன சொல்லப் போய் என்ன ஆகிவிட்டது.
"ஐயோ ஆன்ட்டி வேண்டாம். நான் தப்பா சொல்லிட்டன். ப்ளீஸ் இதோட விட்டிடுங்க. அவளுக்கு எதுவுமே தெரியாது." கெஞ்சினாள்.
"சரிபிள்ளை. நீர் போய் நல்லா படியும். எதெண்டாலும் பிறகு பாப்பம் என்ன?"
அவரின் வாஞ்சையான பேச்சு அவளது குற்றவுணர்வை இன்னும் அதிகரித்தது. எதுவும் பேசாமல் போனை வைத்துவிட்டாள். அந்தத்தாயின் பாசத்துக்கு முன்னால் தனது காதல் தோற்றுவிட்டதாய் உணர்ந்தாள். இப்படிப்பட்ட ஒரு தாய்க்காக தனது காதலைக்கூட அவன் தியாகம் செய்யத் தயங்கமாட்டான் என்று தோன்றியது.