24-02-2019, 11:27 AM
"நாலு மூலை நாடக சாலை..
நடுவிலிருக்கும் பாடகசாலை..!!
ஆடும் பெண்கள் பதினாறு..
ஆட்டி வைப்பவர் ரெண்டு பேரு..!!"
படித்து முடித்தவள் தங்கையை நிமிர்ந்து பார்க்க.. அவள் கன்னத்தில் குழிவிழ அழகாக சிரித்தாள்..!! அப்படி சிரித்தவாறே..
"Game or Shame..??" என்று மீண்டும் கத்தினாள்.
"Game..!!!!" ஆதிரா அலறிக்கொண்டே விருட்டென எழுந்து ஓடினாள்.
தங்கையை கடந்து வெளியேறியவள்.. தாத்தாவின் அறைக்கு விரைந்தாள்..!! அங்கிருந்த சொக்கட்டான் விளையாட்டு பொருட்கள் அடங்கிய பெட்டியை திறந்து பார்க்க.. அடுத்த பொம்மை கிடைத்தது..!! அந்தப் பொம்மைக்குள் இன்னொரு துண்டு சீட்டு.. அதில்.. மூன்றாவது பொம்மையை கண்டறிவதற்கான குறிப்பு அடங்கிய ஒரு விடுகதை..!!
இப்படியே ஒவ்வொரு பொம்மையாக கண்டுபிடித்து.. எட்டு பொம்மைகளையும் தன் வசமாக்கிக் கொண்டாள் ஆதிரா..!! அவளை கட்டிக்கொண்டு அக்காவின் வெற்றிக்காக தாமிராவும் பூரித்து போனாள்..!!
அதன் பிறகு.. ஆதிராவும் தாமிராவும் பருவக் குமரிகளாக ஆனபிறகும் கூட.. இந்த மாதிரி நிறைய விளையாடி இருக்கிறார்கள்..!! ஏதோ ஒரு பொருளை இருவரும் விரும்பும்போதோ.. ஏதோ ஒரு விஷயத்திற்காக இருவரும் வாதிடும்போதோ.. இந்த மாதிரி 'Game or Shame..??'-தான்..!! விதவிதமான சூழ்நிலைகள்.. விதவிதமான விளையாட்டுக்கள்..!! எல்லா விளையாட்டுகளிலுமே மாறாத ஒரே விஷயம் என்ன தெரியுமா..?? அது.. ஆதிராவின் வெற்றிதான்..!!
இப்போது நினைத்து பார்க்கையில் ஆதிராவுக்கு ஒரு விஷயம் தெளிவாக புரிந்தது..!! கிட்டத்தட்ட எல்லா விளையாட்டுக்களிலுமே.. ஆதிரா ஜெயிக்க வேண்டும் என்பதற்காக.. அப்போது ஆதிராவின் அறிவுக்கு கூட எட்டாத வகையில்.. தாமிரா சில தந்திரங்கள் புரிந்திருக்கிறாள் என்று..!! அந்த விடுகதைகளின் விடைகளை எல்லாம் அக்கா நன்கறிவாள் என்பது.. தாமிராவுக்கு முன்கூட்டியே தெரிந்திருக்க வேண்டும்..!! அக்காவை சீண்டுவது மட்டுமல்ல.. அவளை ஜெயிக்க வைத்து பார்ப்பதிலும் தாமிராவுக்கு ஒரு அலாதி ப்ரியம்..!!
ஒவ்வொரு போட்டியிலும் வெல்லும்போதும்.. ஆதிரா அடைகிற ஆனந்தத்துக்கு அளவே இருக்காது..!! தாமிரா அந்தப் பொருளை விட்டுக் கொடுத்திருந்தால் கூட.. ஆதிராவுக்கு அந்த அளவு மகிழ்ச்சி இருந்திருக்காது.. தானே கஷ்டப்பட்டு, தானே வென்று, தனதாக்கிக் கொண்ட பொருள் என்று.. அந்தப் பொருளின் மீது இன்னும் அதிகமான பிடித்தமும்.. எனக்கு சொந்தமானது என்ற உரிமையும் அவளுக்கு பிறக்கும்..!! 'என்னதான் இருந்தாலும் இது தங்கை நமக்கு விட்டுக் கொடுத்த பொருள்தானே?' என்ற நினைவு எப்போதும் ஆதிராவுக்குள் எழாது..!! அந்த மாதிரியான தந்திரம் தாமிராவுடையது..!!
ஆதிராவுக்கு தங்கையின் மீதான அன்பு இப்போது உள்ளத்துக்குள் குபுகுபுவென ஊற்றெடுத்து ஓடியது..!! 'எத்தனை அன்பிருக்க வேண்டும் அவளுக்கு என் மேல்..?? இந்த மாதிரி ஒரு தங்கை கிடைக்க நான் என்ன புண்ணியம் செய்திருக்க வேண்டும்..?? இப்படி என்னவானாள் என்று புரியாமல் தொலைந்து போனாளே..??'
ஆதிராவுக்கு இப்போது திடீரென இன்னொரு நினைவு..!! 'என்னிடம் எத்தனை விளையாட்டு வைத்திருக்கிறாள்.. ஆனால்.. அவளுக்கு முதன்முறையாக விளையாட்டு என்று ஒன்றை சொல்லி தந்ததே நான்தானே..??' என்பது மாதிரியான நினைவு..!! அந்த நினைவு இப்போது அவளுடைய மனதில் படமாய் விரிந்தது..!!
"கண்ணாமூச்சி ரே ரே..
கண்டுபுடி ரே ரே..
ஊளமுட்டையெல்லாம் நீ தின்னுட்டு..
நல்ல முட்டையெல்லாம் கொண்டு வா..!!"
பாடி முடித்த ஆதிரா, முகத்தை மூடியிருந்த கைகளை விலக்கி, கண்கள் திறந்து பார்த்தாள்.. உடனே அவளிடம் ஒரு மெலிதான அதிர்ச்சி..!! ஓடி ஒளியாமல், இன்னும் தன் எதிரே நின்று கொண்டிருந்த குட்டித் தங்கையை குழப்பமாக பார்த்தாள்..!!
"என்னாச்சு தாமிரா.. போய் ஒளிஞ்சுக்கோ.. போ..!!"
"எனக்கு கண்ணாமூச்சி பிடிக்கலக்கா..!!" தாமிரா பரிதாபமாக சொன்னாள்.
"பிடிக்கலையா.. ஏன்..??"
"பயமா இருக்கு..!!"
"என்ன பயம்..??"
"நீ என்னை கண்டுபிடிக்கலைன்னா.. அப்புறம் நான் தொலைஞ்சு போயிடுவேனே..??"
மழலைக்குரலில் தாமிரா அவ்வாறு சொன்னபோது.. ஆதிரா படக்கென சிரித்துவிட்டாள்..!!