screw driver ஸ்டோரீஸ்
[Image: krr8.jpg]

"செவப்பு அங்கி போத்திருப்பா.. உச்சந்தலைல இருந்து உள்ளங்கால் வரை அங்கிதான்.. நடக்குறாளா மெதக்குறாளா கூட தெரியாது..!! இங்க நிக்கிற மாதிரி இருக்கும்.. கண்ணு மூடி கண்ணு தெறக்குறதுக்குள்ள அங்ங்ங்க நிப்பா..!!"

"காட்டுக்குள்ள உக்காந்து தனியா அழுதுகிட்டு இருந்தா.. கைல ஏதோ கொழந்தை கணக்கா இருந்துச்சு.. அதை கொஞ்சிக்கிட்டே அழுதுகிட்டு இருந்தா..!!"

"சிங்கமலை உச்சில நின்னவ.. சிரிச்சுக்கிட்டே தலைகுப்புற ஆத்துல குதிச்சுட்டாளப்பா..!! என் ரெண்டு கண்ணாலயும் பாத்தேனப்பா..!!"

"தாகமா இருக்கு தண்ணி குடு.. தாகமா இருக்கு தண்ணி குடுன்னு.. பின்னாடியே வந்தா..!! நான் கொடத்தை கீழ போட்டுட்டு திரும்பிகூட பாக்காம ஒரே ஓட்டமா ஓடியாந்துட்டேன்..!!"

இதுபோல.. குறிஞ்சியை கண்ணால் பார்த்த கதைகளும் ஊருக்குள் ஏராளம்.. ஆதிராவும் அந்தக்கதைகளில் பலவற்றை அறிவாள்..!!

ஆதிராவின் பரம்பரையிலும் கூட அந்த மாதிரி சம்பவங்கள் நிறைய நடந்திருக்கிறன.. ஐந்து தலைமுறைகளாக இதுவரை ஏழு பேர் என்ன ஆனார்கள் என்று தெரியாமலே காணாமல் போயிருக்கிறார்கள்.. தாமிரா இப்போது எட்டாவது ஆள்..!! 

இவையெல்லாம் அல்லாமல் ஆதிராவின் கொள்ளுப்பாட்டி இன்னொரு கதை சொல்வாள்.. குறிஞ்சியிடம் போராடி தனது குழந்தையை மீட்டு வந்த கதை.. அதாவது பூவள்ளியின் அப்பா குழந்தையாக இருக்கையில்..!!

"வெள்ளன நாலு அஞ்சு மணி இருக்கும்.. நல்ல உறக்கம் எனக்கு.. திக்குன்னு நெஞ்சுக்குழி அடிச்ச மாதிரி இருந்துச்சு.. திடீர்னு முழிச்சு பாத்தா.. பக்கத்துல புள்ளைய காணோம்.. தூரத்துல குறிஞ்சி போயிட்டு இருந்தா..!!"

"எங்க இருந்துதான் எனக்கு அப்படி ஒரு துணிச்சல் வந்துச்சோ.. நாம செத்தாலும் பரவால, நம்ம புள்ளையை அவளுக்கு காவு குடுக்க கூடாதுன்னு நெனச்சேன்..!!"

"விடாம அவளை வெரட்டிக்கிட்டே போயி.. அவ வீடு வரை போயி மல்லு கட்டி.. புடிவாதமா என் புள்ளையை புடுங்கிட்டு வந்தேன்..!! 

"நாம பயப்பட பயப்படத்தான்டி பேய்க்கு பலம்.. எதுத்து நின்னமுன்னா எந்த பேயா இருந்தாலும் பணிஞ்சுதான் ஆகணும்..!! அப்படி எதுத்து நின்னுதான் உன் தாத்தனை நான் மீட்டுக் கொண்டாந்தேன்..!! அதனால.. பயத்தை விடுங்க மொதல்ல.. பயந்தான் பேயை விட பெரிய சனியன்..!!"

தானும் தாமிராவும் சிறுமிகளாக இருந்தபோது.. தைரியம் ஊட்டுகிற மாதிரி கொள்ளுப்பாட்டி சொன்ன கதை.. ஆதிராவுக்கு இப்போது நினைவுக்கு வந்தது..!! 

கொள்ளுப்பாட்டியின் அந்த போதனைகள் எல்லாம் கடுகளவும் அப்போது ஆதிராவின் புத்தியில் ஏறவில்லை..!! அவளுக்கு ஏனோ துணிச்சல் என்பது.. ஆரம்பம் முதலே தூரத்து உறவாகவே இருந்தது..!! தூங்கும்போது கூட முகம் வரைக்கும் இழுத்துப் போர்த்திக்கொண்டே தூங்குவாள்..!! கையில் டார்ச்சுடன் அவளுடைய போர்வைக்குள் புகும் தாமிரா.. முகத்தை கோணலாக வைத்துக்கொண்டு.. அதை அக்காவுக்கு வெளிச்சமுமிட்டு காட்டியவாறு..

"பே.....!!!!!!!!!!!!!!!!!" என்று பெரிதாக கத்துவாள்.

"ஆஆஆஆஆஆ..!!" என்று பயத்தில் அலறி துடிப்பாள் ஆதிரா.

"பேயி.. பிசாசு..!!!" என்று தங்கையை வண்டை வண்டையாக திட்டுவாள்

"ஹாஹாஹாஹா..!!" 

தாமிரா குலுங்கி குலுங்கி சிரிப்பாள்.. அக்காவை இந்த மாதிரி சீண்டுவதில் ஏனோ அவளுக்கு ஒரு அலாதி ப்ரியம்..!! பருவ வயது வந்த பிறகும் கூட.. பலமுறை அந்த மாதிரி பயந்தும் கூட.. அதே ட்ரிக்குக்கு திரும்ப திரும்ப அலறுவாள் ஆதிரா..!! அவ்வளவுதான் அவளுடைய துணிச்சலும் வீரமும்..!! 
[+] 1 user Likes johnypowas's post
Like Reply


Messages In This Thread
RE: screw driver ஸ்டோரீஸ் - by johnypowas - 24-02-2019, 11:25 AM



Users browsing this thread: 7 Guest(s)