screw driver ஸ்டோரீஸ்
"ஆக்சுவலா.. ஃபர்ஸ்ட் டே நான் லேட்டாத்தான் காலேஜுக்கு போனேன் டாக்டர்..!! நல்லா ஞாபகம் இருக்கு.. கே.ஆர்.எஸ்.ரோட்ல அன்னைக்கு சரியான ட்ராஃபிக் ஜாம்..!! நான் காலேஜ் போறப்போ.. இன்டக்சன் ப்ரோக்ராம் அல்ரெடி ஸ்டார்ட் ஆகியிருந்தது..!! எங்க ப்ரொஃபஸர் ஒருத்தர் தாமரைக்கண்ணன்னு.. அவர்தான் ஸ்பீச் குடுத்துட்டு இருந்தாரு.. அவர்ட்ட மன்னிப்பு கேட்டுட்டு ஹாலுக்குள்ள என்டர் ஆனேன்..!! என்னோட பெஸ்ட் ஃப்ரண்ட் பரிதியை அப்போத்தான் ஃபர்ஸ்ட் டைம் பார்த்தேன்.. அவன் உக்காந்திருந்த பெஞ்ச்லருந்து நகர்ந்து.. எனக்கு இடம்.." சிபி சொல்லிக்கொண்டிருக்கையிலேயே அவனை இடைமறித்த டாக்டர்,

"அன்னைக்கு நீங்க என்ன கலர் ஷர்ட் போட்டிருந்திங்கன்னு ஞாபகம் இருக்கா..??" என்று திடீரென கேட்க, சிபியிடம் படக்கென ஒரு திகைப்பு.

"அ..அது.. அது... அ..அன்னைக்கு.."

என்று பதில் சொல்ல திணறினான்.. அன்று அவன் அணிந்திருந்த சட்டையின் நிறத்தை நினைவுகூர்கிற முயற்சியுடன் நெற்றியை சுருக்கிக்கொண்டான்..!!

"ஹாஹா.. ரொம்ப யோசிக்க வேணாம்..!! இட்ஸ் ஓகே.. விடுங்க..!!"

புன்னகையுடன் சொன்ன டாக்டர்.. சிபியின் கண்களையே சிலவினாடிகள் கூர்மையாக பார்த்தார்..!! சிறிது இடைவெளிக்கு பிறகு மிகத்தெளிவான குரலில் மீண்டும் பேச ஆரம்பித்தார்..!!

"See.. ஞாபக மறதின்றது quite natural.. எல்லாருக்குமே இருக்குறதுதான்..!! லைஃப்ல நடந்த எல்லா சின்ன சின்ன விஷயங்களும், ஒருத்தனுக்கு அப்படியே ஞாபகத்துலயே இருக்க ஆரம்பிச்சா.. அவன் சீக்கிரமே மனநிலை சரியில்லாதவனா மாறிடுவான்..!! தேவை இல்லாத விஷயங்களை அப்பப்போ மறந்துடுறது.. மனசுக்கும் மூளைக்கும் ரொம்ப ரொம்ப நல்லது..!!"

"ம்ம்..!!"

"அம்னீஷியாவும் அந்த மாதிரிதான்.. ஒருவித ஞாபக குறைபாடு..!! என்ன ஒன்னு.. நேச்சுரலா ஏற்படவேண்டிய ஞாபக மறதி.. உங்க வொய்ஃபுக்கு தலைல அடிபட்டதன் மூலமா.. ஆக்சிடண்டலா ஏற்பட்டிருக்கு.. அவ்வளவுதான்..!! இதுல பயப்படுறதுக்குலாம் எதுவும் இல்ல..!!"

"புரியுது டாக்டர்..!!"

"முக்கியமான ஒரு விஷயத்தை நீங்க நல்லா புரிஞ்சுக்கணும்.. மூளைன்றது ரொம்பவே காம்ப்ளிகேட்டட் சமாச்சாரம்..!! நம்மளோட அஞ்சு புலன்கள்ல இருந்து வர்ற உணர்வுகளை ஞாபகங்களா கன்வர்ட் பண்றதா ஆகட்டும்.. அதை நினைவடுக்குகள்ல ஸ்டோர் பண்றதா ஆகட்டும்.. தேவையற்ற நினைவுகளை சப்-கான்ஷியஸ் மைண்ட்க்கு ட்ரான்ஸ்ஃபர் பண்றதா ஆகட்டும்.. தேவைப்படுறப்போ மறுபடியும் அந்த நினைவுகளை ரெகவர் பண்றதா ஆகட்டும்.. It's all a kind of magic..!! எவ்வளவோ ஆராய்ச்சிக்கு அப்புறமும்.. மூளையை யாரும் இன்னும் முழுசா புரிஞ்சுக்க முடியலைன்னுதான் சொல்லியாகணும்..!!" 

"ம்ம்..!!"

"மருந்து மாத்திரையால அம்னீஷியாவை குணப்படுத்த முடியாது.. மன அமைதிதான் அந்த ஞாபகங்களை திரும்ப கொண்டுவர முடியும்..!!"

"ம்ம்..!!"

"கடந்த ஒருவருஷமா நடந்த சம்பவங்கள்தான், உங்க வொய்ஃபோட மெமரில இருந்து அல்மோஸ்ட் சுத்தமா துடைச்சு எடுக்கப்பட்டிருக்கு.. அதுக்கு முந்தி நடந்ததெல்லாம் அவங்களுக்கு நல்லாவே ஞாபகம் இருக்கு..!! மறந்து போன இந்த விஷயங்கள் எல்லாம்.. கண்டிப்பா அவங்களோட சப்-கான்ஷியஸ் மைண்ட்ல இருக்கும்..!! அதை திரும்ப அவங்களுக்கு நினைவுபடுத்த சில தெரபிலாம் இருக்கு.. அது வொர்க்கவுட் ஆகலாம்.. ஆகாமலும் போகலாம்..!! ஆனா.. என்னைக்கேட்டா.. அவங்க இப்போ இருக்குற நிலைமைல அதெல்லாம் தேவை இல்லைன்னுதான் சொல்லுவேன்..!! இப்போதைக்கு அவங்களோட ஒரே தேவை.. கம்ப்ளீட் ரெஸ்ட்தான்.. மனசுக்கும், உடம்புக்கும்..!!"

''பு..புரியுது..!!"

"இந்த மாதிரி ஞாபகங்கள் தொலைஞ்சு போனதுல அவங்க ரொம்பவே கன்ஃப்யூஸ்டா இருக்காங்க..!! என்னன்னு சொல்ல முடியாத மாதிரி ஒரு பயம்.. என்ன நடந்துச்சுன்னு தெரிஞ்சுக்குறதுல ஒரு அவசரம்..!! அந்த மாதிரி அவசரத்துக்கு இடம் குடுக்காம.. அவங்க மனசு அமைதியா இருக்குறது ரொம்ப முக்கியம்..!! நீங்கதான் அதையெல்லாம் நல்லா புரிஞ்சு அவங்களை கவனிச்சிக்கணும்..!!"

"கண்டிப்பா டாக்டர்..!!"

" ஹ்ம்ம்.. உங்களுக்கு மேரேஜ் ஆகி எத்தனை நாளாச்சுன்னு சொன்னிங்க..??"

"நாற்பது நாள் ஆகுது..!!"

"இன்னும்.. ஹனிமூன் அந்த மாதிரிலாம் எங்கயும் தனியா போகல..??"

"இ..இல்ல டாக்டர்.. எங்கயும் போகல..!!"

"Then, this is the right time..!! அவங்களை எங்கயாவது வெளியூர் கூட்டிட்டு போங்க.. மனசுக்கு ப்ளசன்ட்டா இருக்குற மாதிரி ஏதாவது ஒரு இடம்.. அமைதியா பசுமையா ஏதாவது ஒரு சூழல்.. கொஞ்ச நாள் அவங்க அங்க இருக்கட்டும்..!! அவங்களோட சப்-கான்ஷியஸ் மைண்ட்ல இருக்குற விஷயங்கள், கான்ஷியஸ் மைண்ட்க்கு திரும்பவர.. அந்த மாதிரியான மெண்டல் ரெஸ்ட் ரொம்ப ஹெல்ப் பண்ணும்..!! ஒரு பூ மலர்ற மாதிரி அது தானா இயல்பா நடக்கணும்.. 'அதை ஞாபகப் படுத்துறேன்.. இதை ஞாபகப் படுத்துறேன்'னு நீங்களா அவங்களுக்கு ஓவர் ஸ்ட்ரெஸ் குடுக்காதிங்க..!! புரியுதா..??"

"புரியுது டாக்டர்.. I will take care of her..!!"

"குட்..!! வேற ஏதாவது உங்களுக்கு டவுட் இருக்கா..??"

அவ்வளவுதான் தான் பேச நினைத்தது என்பதை.. அந்தக் கேள்வியின் மூலம் உணர்த்தினார் சந்நிதானம்..!! ஆதிராவை அணுகுகிற முறை பற்றி மேலும் தங்களுக்கு இருந்த சந்தேகங்களை கேட்டு தெளிவு பெற்று.. சிபியும் தணிகை நம்பியும் அந்த அறையை விட்டு கிளம்ப.. அதன்பிறகும் சிறிது நேரம் எடுத்துக் கொண்டனர்..!!
[+] 1 user Likes johnypowas's post
Like Reply


Messages In This Thread
RE: screw driver ஸ்டோரீஸ் - by johnypowas - 24-02-2019, 11:23 AM



Users browsing this thread: 7 Guest(s)