நினைத்தாலே இனிக்கும்(முடிவுற்றது )
#12
அதன் பிறகு உணவு இடைவேளைக்கு பின்புதான் எனக்கு வகுப்பு என்பதால் நான் ஸ்டாப் ரூமிற்கு சென்று அமர்ந்தேன்.நாளை நடத்த வேண்டிய பாடங்களை பற்றி குறிப்பெடுக்க ஆரம்பித்தேன்.பிறகு வேறு சில டீச்சர்களும் வர ஆரம்பித்தனர்.அவர்கள் தாங்களை அறிமுகபடுத்தி கொண்டனர்.

நானும் என்னை அறிமுக படுத்தி கொண்டேன்.பிறகு நான் எந்தெந்த வகுப்பிற்க்கு செல்கிறேன் என விசாரித்தனர்.நான் கூறினேன்.பின்பு நான் செல்லும் வகுப்பில் இருக்கும் மாணவர்களை பற்றி குறிப்பு கொடுத்தனர்.

"11D2 வில் வினோத் நன்றாக படிப்பான் .ஆனால் அவன் கூடவே ஒருத்தன் சுற்றுவானே மாலதி மிஸ் அவன் பெயர் என்ன.

அதற்கு அந்த மாலதி "ம்ம் ஜெய் " என்றாள் .

"ஆங் அவனிடம் கொஞ்சம் ஜாக்கிரதையாக நடந்து கொள்ளுங்கள்"என்றாள் சுதா என்ற பெயருடைய அந்த கணக்கு டீச்சர்.

நான் ஆர்வமாகி"ஏன் டீச்சர் " என்றேன்.

அவள்"10 இல் மாலதி மிஸ் தான் அவன் கிளாஸ் டீச்சர் அவன் செய்த அட்டகாசங்களுக்கு அளவே இல்லை. அவன் கிளாஸில் இல்லை என்றால்.அட்டண்டஸ் கிளாஸ் ரூமில் இருக்காது.

எங்கேயாவது ஊர் சுற்றிவிட்டு "சுதா டீச்சர் அட்டடண்ஸ் போட மறந்துட்டாங்க அதான் நான் போய் போட்டு வாங்கிகொண்டு வந்தேன் "என்பான்.

"என்னை ஹைகிளாஸ் மேத்ஸ் ஸார் கோபி யுடன் இந்த டீச்சர் கோபி ஸார் கிட்ட டவுட் கேட்டுதான் பாடம் நடத்துறாங்க இரண்டு பேரும் கதவ சாத்திக்கிட்டு டிஸ்கஷன் பண்றாங்கனு பாத்ரும் ல எழுதிவச்சிட்டான் .

நான்"அப்புறம் என்னாச்சி" என்றேன்.

என்னாகும் பிரின்ஸிபால் கூப்பிட்டு வார்ன் பண்ணினார் அப்புறம் கோபி ஸார் எங்கூட பேசவே இல்லை "என்றாள்.எனக்கு சிரிப்பாக வந்தது நான்

"அடப்பாவி நீ இவ்வளவு காரியம் பண்ணிருக்கியா !இரு உன்ன வச்சிக்கிறேன்"என்று மனதிற்குள் சொல்லி கொண்டேன்.

பின் மாலதி"நானும் அவன் கிளாஸ் லீடராக இருப்பதால் எல்லாவற்றையும் பொறுத்து கொண்டேன்.

ஆனால் எல்லாவற்றுக்கும் மேலாக அவன் ஒரு காரியம் செய்தான்.சங்கீதா னு ஒரு பொண்ணு நல்லா படிப்பா எல்லாத்திலயும் ஃபஸ்ட் வருவா போன வருடம் ஸ்டேட் ஃபர்ஸ்ட் வருவா என நினைத்து கொண்டிருந்தோம் ஆனால் இவனால் அந்த பொண்ணு தற்கொலை பண்ணிகிட்டு செத்து போய்ட்டா"என்றார்.

அதை கேட்டதும் என் இதயத்தில் இடிஇறங்கியது போல் ஆனது.
Like Reply


Messages In This Thread
RE: நினைத்தாலே இனிக்கும் - by johnypowas - 24-02-2019, 10:43 AM



Users browsing this thread: 2 Guest(s)