Fantasy குறும்படம், சில குறும்புகள்... (Completed)
#8
4

"உனக்கு அப்பா பிடிக்குமா? இல்ல அம்மா பிடிக்குமா?"


அப்பா எங்களை விட்டு விலகி போவதற்கு ஒரு மாதம் முன்பு என்னிடம் கேட்டார்.
"ஏன் அப்பா, நீங்க இந்த மாதிரி எல்லாம் கேக்க மாட்டீங்களே?"

"சும்மா தான் சொல்லு"

"ரெண்டு பேரும் தான், நீங்க ரொம்ப அறிவாளி, என் மேல அக்கா மேல எங்க future, படிப்பு, வேலை எல்லாத்துலயும் ரொம்ப அக்கறை உங்களுக்கு, நீங்க ஒரு அப்பாவா இல்லாம ப்ரெண்ட் ஆக இருக்க தான் விரும்புவீங்க, அம்மா உங்க அளவுக்கு அறிவோ, அனுபவமோ, நல்லது கெட்டது தெரியாது, இருந்தாலும் அவங்க ஒரு நல்ல அம்மா, நான் சாபிட்டெனா, சரியா தூங்கினேன் ஆ எல்லாம் பார்த்து பார்த்து செய்வாங்க, சோ எனக்கு ரெண்டு பேரும் பிடிக்கும்"

"சரி, வேற மாதிரி கேக்குறேன், உனக்கு உலகத்திலேயே ரொம்ப பிடிச்ச ஆளு யாரு" அவர் எதற்காக இப்படி கேட்கிறார் என என் 15 வயது மூளைக்கு எதுவும் புரியவில்லை.

"அக்காவ தான் பிடிக்கும்"

"ஏன்?" ஆச்சர்யமாக கேட்டார்.

"ஏன் அப்படின்னா அக்கா அவ எல்லாமா இருக்கா, நீங்க அப்பாவா இருக்கீங்க, அம்மா அம்மாவா இருக்கா, அக்கா ரெண்டு பேராவும் இருக்கா எனக்கு"

சட்டென எழுந்து என் அருகில் வந்த அப்பா நான் அமர்ந்த நிலையில் என்னை அணைத்துக் கொண்டார், என் தலையை கோதினார். எனக்கு என்ன என புரிய வில்லை.

"நான் அடுத்த மாதம் Coimbatore போறேன்" என சொன்னார். அவர் அடிக்கடி போவது தான், அங்கே வீடு, கம்பனி இருந்தது. மாதா மாதம் அப்பா செல்வார், ஏன் புதிதாக சொல்கிறார் என எண்ணினேன்.

ஆனால் அவர் நிரந்தரமாக செல்வதை தான் சொன்னார் என்று அப்புறம் தான் தெரிந்தது.

அம்மா "வயசு வந்த புள்ளைங்கள வச்சிட்டு இப்படி இன்னொரு பொம்பள பின்ன எங்கள அம்போன்னு விட்டு பொரீங்களே" என அழுதாள்.

அப்பா இந்த வீட்டு பத்திரம் என் பெயரிலும், அக்கா பெயரிலும் கூட்டாக, பெருந்துறை நிலம் அம்மா பெயரிலும், கம்பனி இல் அவருக்கு இருந்த 30 சதம் பங்கில் 10 எனக்கும் அக்காவிற்கும் என எல்லாம் தயாராக இருந்தார், அம்மாவிற்கு மாதம் தொகை வரும்படி deposit செய்து இருந்தார்.
அவருக்கு கோயம்புத்தூர் வீடும், 20 சதம் கம்பனி பங்கும் மட்டும், இருவரும் சம்மதித்து பிரிந்தனர்.

"சாரிம்மா, இது உனக்கு பெரிய ஷாக் ஆக இருக்கும், 20 வயசு பொண்ணுக்கு அப்பா அம்மா பிரியரது எவ்ளோ வலின்னு புரியுது, நான் உன் அம்மாவை விட்டு தான் பிரியரேன், உன்னையோ கார்தியையோ இல்ல, "
அக்காவிடம் சொன்னார் ஒரு வித குற்ற உணர்வில்.

"எத்தனை வருசமா அவ கூட பழக்கம் அப்பா?"

"நாலு வருஷம் ஆச்சு" தலை குனிந்து இருந்தார் அப்பா.

"ஏன் முன்னேயே இந்த முடிவு எடுக்கல?"

"இப்போ she is pregnant. "
"முன்ன கூட யோசிச்சேன், ஆனா உன்ன, கார்த்திய நெனச்சு சும்மா இருந்தேன். ஆனா இந்த சூழல்ல அவள விட மனசு வரல, நான் 43 வயசு, ஸ்டில் எனக்கு ஒரு வாழ்க்கை இருக்குன்னு நம்பறேன்.
நீ ஒரு தரம் அவளை மீட் பண்ணினா புரியும்."

அக்கா எதுவும் பேசாமல் இருந்தாள்.

"இங்க பாரு, நான் உன் அம்மாவோட கணவன் இல்ல தான், ஆனா கார்த்திக்கு உனக்கு என்னைக்கும் ஒரு நல்ல அப்பா, மறக்காதே"

அக்கா எதுவும் பேசாமல் இருந்தாள்.

"அவ ரொம்ப நல்லவ, உங்களை எல்லாம் அவளுக்கு தெரியும், சொல்லி இருக்கேன், ஏன் நீங்க ரெண்டு பேரும் எங்களோட இருக்க கூட அவளுக்கு சம்மதம் தான். ஆனா உன் அம்மா நீங்க இல்லாம கஷ்டப் படுவா, அது தான்"

"ஓ" என்றாள் அக்கா ஒரு இகழ்ச்சி உடன்.

"உனக்கு அப்பா சொல்றது நம்ப முடியல புரியுது, ஆனா அது தான் நிஜம். அட் லீஸ்ட் ஒருத்தரை யாவது என்னோட கஸ்டடி ல வச்சுக்க விரும்பினேன், அப்புரம் கார்த்தி கிட்ட பேசி பார்த்ததில் அது தப்புன்னு புரிஞ்சுது, விட்டுட்டேன்"

"அவன் கிட்ட என்ன பேசுநீங்க" என்றாள் அக்கா. என்னையும் பார்த்தாள்.

"இல்ல, ஒன்னும் இல்ல, பொதுவா கேட்டேன், உனக்கு அப்பா பிடிக்குமா, இல்ல அம்மா பிடிக்குமா அப்படி, அவன் சொன்னான் எனக்கு அக்கா தான் பிடிக்கும் அப்படின்னு, அப்போ முடிவு பண்ணினேன் நானும் உங்க அம்மாவும் பிரியுற தப்பு போதும், அக்கா தம்பி உங்களையும் பிரிச்சு தப்பு பண்ண கூடாது"

அக்கா கண்ணீருடன் என்னைப் பார்த்தாள்.


எப்போதும் என் மீது அன்பைப் பொழியும் அவள் அதன் பின்னர் இன்னும் அதிகமாக என்னை நேசிக்க ஆரம்பித்தாள்.

எனது அத்தனை பிறந்த நாளும் அவள் வாங்கித் தரும் ஆடைகளில் தான். எனது சின்ன சின்ன ஆசைகளை நினைவில் வைத்து நிறைவேற்றி, புதிய கேமரா, ஷார்ட் பிலிம் எடுக்க காசு, ஊர் சுற்ற எல்லாம் அம்மாவிற்கு தெரியாமல் நிறைய செலவு செய்தாள்.

யோசிக்கையில் நான் அவளுக்கு எதுவும் செய்ததே இல்லை என்று புரிந்தது. அவளுக்கு நடிக்க ஆர்வம் என்பது இப்போது தான் தெரியும், முன்பே தெரிந்தால் அவளுக்கு ஆகவே கதை எழுதி இயக்கி இருப்பேன்.

அந்த பசங்களின் வயது காரணமான கமென்ட் களுக்காக அக்காவை நடிக்க விடாமல் தடுப்பது தப்பென உணர்ந்தேன். நடிக்கட்டும்.

அன்றே குமார் ஸ்கிரிப்ட் மாதிரி ஒன்று trial version அக்காவிற்கு அனுப்பி இருந்தான். உண்மையாகவே ஓரளவு நன்றாக இருந்தது.

ஒரு கன்னத்து முத்தம் காட்சி, இரண்டு மூன்று இடங்களில் கட்டிப் பிடித்தபடி, அணைத்தபடி இருக்கிறார்போல காட்சி இருந்தன. மற்றபடி தவறான எந்த ஒரு காட்சி, வசனங்கள் இல்லை. ஸ்கிரிப்ட் ஓகே என்று எனக்கு பட்டது.

அந்த வாரமே சனி ஞாயிறு இரண்டு நாட்கள் மட்டும் ஷூட்டிங், பொதுவாக குறும்படங்கள் சில ஒரே நாளில் கூட ஷூட்டிங் எடுத்து இருக்கிறோம், finishing தான் கொஞ்சம் நாட்கள் ஆகும்.

இரண்டு நாளில் ஷூட் செய்தாலும் கதைப்படி ஒரு ஐந்தாறு காஸ்ட்யூம் தேவை. காஸ்ட்யூம் எல்லாம் அக்காவின் வழக்கமான உடைகளிலேயே , முதல் நாள் சுடி மட்டும் ஒரு மூன்று நான்கு. ஷார்ட் பிலிம் இல் உடைகளுக்கு எல்லாம் பட்ஜெட் கிடையாது.
இரண்டாம் நாளில் ஜீன்ஸ் மற்றும் ஒரு சாரி.

சனிக் கிழமை காலை அக்கா கிளம்பினாள்,
"ஆல் தி பெஸ்ட்" சொன்னேன். உள்ளுக்குள் நானும் உடன் செல்ல விரும்பினேன், ஆனாலும் என்ன காரணம் சொல்ல முடியும், மேலும் அக்காவை ஜூனியர் பையன் ஒருவன் ரொமான்ஸ் செய்வதை நேரில் பார்க்க என்னால் முடியாது என்று தோணியது.

"நீயும் வந்தா கொஞ்சம் confident ஆக இருக்கும், பட் அது நல்லா இருக்காது இல்ல" என்றாள் அக்கா.

"அக்கா, ஒன்னும் இல்ல, நான் இருக்கிறதா நெனச்சு நடி, தைரியமா நடி, ப்ரேக் ல எனக்கு போன் பண்ணு!"
Like Reply


Messages In This Thread
RE: குறும்படம், சில குறும்புகள்... (Latest) - by omprakash_71 - 28-05-2020, 05:35 PM



Users browsing this thread: 5 Guest(s)