Fantasy குறும்படம், சில குறும்புகள்... (Completed)
#5
குறும்படம் சில குறும்புகள்...

கார்த்தி, அருமை, பின்னிட்டே, என்னோட அடுத்த படத்துல நீ ஒர்க் பண்ற"

இயக்குனர் வெற்றி என்னிடம் அதை சொன்னபோது இரண்டு நாட்களுக்கு பிறகு வர வேண்டிய புத்தாண்டு அன்றே வந்ததாக உணர்ந்தேன்.

இருப்பினும் என் சூழலை அவரிடம் எப்படி சொல்ல என தயங்கினேன்.

"சார், அது வந்து..."

"என்னய்யா, என்னை விட பெரிய director யாரு கிட்டயாவது அசிஸ்டன்ட் ஆகனும்னு நினைக்குறியா?"

"அய்யோ, அப்படிலாம் இல்ல, சார், இன்னும் studies முடியல, Engineering final year, ஒரு 5 மாசம் இருக்கு சார், அதான்"

"நீ இன்னும் student ?? உன்னோட ஷார்ட் பிலிம் பார்க்கிறப்போ அவ்ளோ maturity இருந்ததே, கிரேட், நோ பிராப்ளம். நீ காலேஜ் முடிஞ்சதும் என்னை வந்து பாரு, என் கூட ஒர்க் பண்ணு, இது என்னோட பெர்சனல் நம்பர், யூ கேன் கால் மீ அண்ட் ஜாயின் மீ"

"Thank you, sir"

பிரபல சேனலில் வந்த அந்த குறும்பட போட்டி இறுதியில் தான் என் அபிமான இயக்குனர்களில் ஒருவரான வெற்றி என்னிடம் சொன்னார். முதல் பரிசு வென்றவனுக்கு கூட இதை அவர் சொல்ல வில்லை. இரண்டாவதாக வந்த என்னிடம்.

வெற்றி சாருக்கு என் படங்களில் பிடித்ததாக அவர் சொன்னது, ஒவ்வொரு படமும் ஒவ்வொரு ஜானரில். கச்சிதமாக தேவையில்லாத ஒரு ஃப்ரேம் கூட இல்லாத அந்த கச்சிதம். முதல் பரிசு வென்ற படைப்பில் இருந்த பிரபல ஆர்டிஸ்ட் களின் performance கூட இருந்த பிற நடுவர்களை கவர வெற்றி சாரின் வாதத்தை மீறி அது முத்லாகவும், என்னுடைய படம் இரண்டாவது ஆக ஆனது.

நான் கார்த்திக், பொறியியல் இறுதி ஆண்டு மாணவன். சினிமா எனது கனவு. பல வருட கனவு.
என் பத்து வயதில் என் அமெரிக்கா மாமா ஒரு கேமரா பரிசு அளித்ததில் ஆரம்பித்தது இந்த கனவு. அவர் கேமரா தந்த அன்றே அக்காவை விதம் விதமாக படம் எடுக்க ஆரம்பித்து, பின் இயற்கை காட்சிகள், சாலையில் சந்திக்கிற சக மனிதர்கள் என எனது கேமரா கண்கள் விரிய ஆரம்பித்தது.
15 ஆம் வயதிலேயே ஒரு இயல்பான கேமரா பார்வை எதிலும் இருந்தது.

என் தந்தைக்கு என் கேமரா மோகம் மகிழ்ச்சி தான் எனினும் என்னிடம் சொன்னார் " அததுக்கு டைம் இருக்கு, இப்போ படிக்கிற டைம், படி"

எனக்கு நன்கு ஞாபகம் இருக்கிறது, எனது 5 அல்லது 6 வயதில் இரவில் தூக்கக் கலக்கத்தில் இருந்த என்னை எழுப்பி அப்பா ஒரு படம் அவருடன் டிவி யில் பார்க்க வைத்தார். ஆரம்பத்தில் அதிகம் ஆர்வம் இல்லாமல் பார்க்க ஆரம்பித்த நான் சிறிது நேரத்தில் அந்த படத்தில் மூழ்க ஆரம்பித்தேன். அது "மூன்றாம் பிறை"

அப்போது இயக்குனர், ஒளிப்பதிவு பற்றி ஒன்றும் தெரியாத வயது. கமல், ஸ்ரீதேவி அவர்களோடு நானும் ஒன்றிப் போய் பார்த்தேன். படம் இறுதியில் கமலின் கதறலில், தனித்து விடப் பட்ட அவலத்தில் ஆறு வயது கூட நிரம்பாத சிறுவன் நான் அழ ஆரம்பித்தேன். உணர்ச்சி வசப்பட்ட அழுகை.

அப்பா என்னை இடுப்பில் தூக்கி தோளில் சாய்த்தபடி முதுகில் தட்டிக் கொடுக்க ஆரம்பித்தார்.

"ஒன்னும் இல்லை, ஒன்னும் இல்லை!" அப்போது எல்லாம் எனக்கு அப்பாவோ அம்மாவோ என்னை குழந்தை போல தூக்கினால் பிடிக்காது, நான் வளர்ந்து விட்டதாக எண்ணிக் கொண்டிருந்தேன். அன்று அப்பா என்னை குழந்தை போல தூக்கி சமாதானம் செய்து கொண்டு இருந்தது எனக்கு உரைக்கவே இல்லை. அப்படி அழுதேன்.

அது தான் என் முதல் அழுகை, பிறருக்காக. அதற்கு முன் நான் அழுதது எல்லாம் என் தேவைக்கு, சிறு குழந்தையில் எனக்கு பசித்தால், பின் எனக்கு வலித்தால், என் அம்மா, அக்கா யாரேனும் அழுதால் உடன் அழுது இருப்பேன். ஆனால் முன் பின் தெரியாத ஒரு நபருக்காக, அதுவும் திரைப் படத்தில் கண்ட கமல் நடித்த ஒரு பாத்திரம் சீனு விற்காக அந்த மனிதனின் வலிக்காக நானும் உடன் அழுதேன்.

அன்று முதல் நான் கமலின் ரசிகன் ஆனேன். அப்பா வும் கூட கமல், பாலு மகேந்திரா இன்னும் சிலரின் தீவிர ரசிகர். என் பத்து வயது வாக்கில் நல்ல படங்களை எனக்கு அப்பா அறிமுகம் செய்தார்.

ஆனால் எனது 15 வயதில் அதிர்ச்சியான நிகழ்வாக என் அப்பா அம்மா பிரிந்தனர், அம்மாவிடம் நானும் அக்காவும் இருக்க நேர்ந்தது. அப்பாவிற்கு வேறு ஒரு குடும்பம் இருப்பதாக தெரிந்து அதிர்ந்தேன்.
பிரிந்தாலும் அப்பா எங்களுக்கு சென்னையில் உள்ள வீடு, பூர்வீக சொத்தில் பங்கு, அக்கா மற்றும் எனது படிப்பு செலவுக்கு போதுமான அளவு பணம் அனைத்தையும் விட்டு தான் சென்றார். ஆனாலும் அப்பா மேல் எதோ ஒரு கோபம், வருத்தம் இருந்தது.

எனினும் அப்பா விடம் பாக்கெட் மணி வாங்குவது போல அம்மாவிடம் வாங்க முடிய வில்லை. எனது கேமரா கனவுகளை ஓரம் கட்டி இருந்தேன். பின்னர் அக்கா, என்னை விட 5 வருடம் மூத்த அக்கா படித்து முடித்து ஒரு நல்ல வேலையில் சேர எனது கேமரா மீண்டும் முன்னை விட அதிக வேகத்தில்...
அக்கா, எனது தேவைகளை அம்மாவிற்கு தெரியாமல் பூர்த்தி செய்தாள்.

என் சினிமா ஆர்வம் அப்படி தான் அப்பாவால் ஆரம்பம் ஆனது, அக்காவால் தொடர்ந்தது. கமல் உடன் , மணிரத்னம், பாலு மகேந்திரா, PC ஸ்ரீராம் இவர்களுடன் பணி புரிவதே என் கனவாக இருந்தது.

அப்போது தான் இந்த குறும்பட போட்டி பற்றி தெரிந்து இதில் கலந்து இப்போது இப்படி...

இதில் கலந்து கொள்ள, குறும்படம் எடுக்க அனைத்துக்கும் அக்கா அவள் தான் ஸ்பான்சர்.

சாரின் வார்த்தை கேட்டதும்

எனது இந்த 22 வருட வாழக்கையில் மிக இனிமையான நாளாக உணர்ந்தேன். வாய்ப்பு அதிகம் அலையாமல் ஒரு நல்ல வாய்ப்பு, அதுவும் வெற்றி மாதிரியான இயக்குனர் அவரே கூப்பிட்டு கொடுத்த வாய்ப்பு. அக்காவிடம் தான் முதலில் சொல்ல எண்ணி phone செய்தேன்.
அக்கா எடுத்தவுடன் கேட்டாள்.

"என்னடா ஆச்சு ஃபைனல் ??"

"செகண்ட் தான்க்கா" என சலிப்புடன் சொல்லி "ஆனா ஸார் நல்லபடியா கமென்ட் கொடுத்தாரு, degree முடிச்சதும் வந்து பார்க்க சொல்லி இருக்கார்"

"இவங்க இப்படி தான் சும்மா ஆறுதல் சொல்வாங்க, ஒன்னும் கவலைப் படாதே, முதல்ல செமஸ்டர் பாரு, முடிஞ்சது க்கு அப்புறம் பார்க்கலாம்"

ஏனோ அக்காவின் வார்த்தைகள் கேட்டதும் சார் உறுதியாக வாய்ப்பு தருவதாக சொன்னதை அக்காவிடம் சொல்ல வில்லை. படிப்பு முடிந்து சாரிடம் சேர்ந்து பின்
[+] 1 user Likes omprakash_71's post
Like Reply


Messages In This Thread
RE: குறும்படம், சில குறும்புகள்... (Latest) - by omprakash_71 - 28-05-2020, 05:34 PM



Users browsing this thread: 5 Guest(s)