26-05-2020, 05:54 PM
கார் தேனியை நெருங்கியதும் அங்கிள் டிரைவரிடம் G.Hபோக சொன்னார்.அங்கே போனதும் தான் தெரிந்தது என் அம்மா,அப்பா இறந்தது .அம்மா,அப்பா உடலை பார்த்து கதறி அழுதேன்.அங்கிள் என்னை கட்டி பிடித்து அழுது கொண்டே "சாரிடா,பங்சன் முடிந்து அம்மா,அப்பா வரும் போது கார் ஆக்ஸிடெண்ட் ஆச்சு.என் பங்சனுக்கு வந்த உறவினர் தான் ,ஆக்ஸிடெண்டை பார்த்து எனக்கு தகவல் சொல்லி அம்மா,அப்பாவை ஆஸ்பத்திரில சேர்த்தாங்க,நீ தைரியமாக இருக்கனும் இனிமே.உன் நண்பர்களுக்கு எல்லாம் கால் பண்ணி சொல்லிரு. நீ போய் காரில் இரு .ஆம்புலன்ஸில் பாடிய ஏற்றும் போது கூப்பிறேன் " னு சொன்னார்.நான் என் நண்பர்கள் தீபக்,விவேக்கு கால் பண்ணி சொன்னேன்.மகேஷ் அண்ணாக்கு கால் பண்ணலாமா வேண்டாமா னு யோசித்து மெசேஸ் பண்ணினேன்.அங்கிள் அனைத்து வேலைகளும்பார்த்து கொண்டிருந்தார்.சிறிது நேரம் கழித்து மகேஸ் அண்ணா கால் பண்ணிணார்.மகேஷ் அண்ணாவும்,காவ்யா அண்ணியும் பேசினாங்க.மதுரையில் என் முகவரி கேட்டு அங்கே வரவதாக சொன்னார்கள்.எல்லாம் முடிந்த அம்மா,அப்பாவை ஆம்புலன்ஸில் ஏற்றினார்கள்.நான் நான் அம்மா,அப்பா மேல சாய்ந்து அழுது கொண்டு இருந்தேன்.
மதுரை வந்ததும் மகேஷ் அண்ணாவும்,காவ்யா அண்ணியும் கூட இருந்து அனைத்தையும் செய்தனர்.அப்போ அங்கிள் அப்பாவின் கடன்களை பற்றியும் சொத்தைகளை பற்றியும் சொன்னதும் மெல்ல அனைத்து உறவினர்களும் காரியம் முடிந்ததும் சென்றுவிட்டனர்.
நான் அம்மா,அப்பா படத்திற்கு முன் படுத்து அழுது கொண்ட இருந்தேன்.என் வாழ்க்கை ஒரு நாளில் தலைகீழாக மாறிவிட்டது.அம்மா,அப்பா இருக்கும் போது நடந்த நிகழ்ச்சிகளை அழுது கொண்டே நினைத்தேன்.எப்போ தூங்கினேன் என தெரியவில்லை.