Romance ஆண்மை தவறேல் - by Screwdriver
#26
"அதுலாம் எல்லாம் நல்லா சமைப்பேன்.. மொதல்ல நீ யார்னு சொல்லு.."


"சிக்கன் ஐட்டம்லாம் நல்லா பண்ணுவீங்களா..? அதுதான் ரொம்ப முக்கியம்..!!"

"என்னை பத்தியேதான் கேட்பியா..? உன்னை பத்தி எதுவும் சொல்ல மாட்டியா..?"

"என்ன தெரியனும் என்னை பத்தி..?"

"மொதல்ல உன் பேரை சொல்லு.." நந்தினி கேட்டுக்கொண்டிருக்கும்போதே அந்த சிறுமி திடீரென கத்தினாள்.

"ஹை.. ஊஞ்சல்..!!"

கத்திக்கொண்டே ஓடியவள், உத்தரத்திலிருந்து தொங்கிய ஊஞ்சலில் ஏறி அமர்ந்து கொண்டாள். கம்பியை பிடித்துக்கொண்டு காலை கீழே ஊன்றி உந்தித்தள்ளி, சர் சர்ரென ஊஞ்சலாட ஆரம்பித்தாள். 'ஹையா.. எத்தனை நாளாச்சு ஊஞ்சலாடி..' அவள் குதுகலிக்க, நந்தினிக்கு எதுவும் புரியவில்லை. 'யாரிவள்..? திடீரென வந்தாள்.. ஏதேதோ கேள்வி கேட்டாள்.. இப்போது நடுவீட்டில் ஹாயாக ஊஞ்சலாடிக்கொண்டிருக்கிறாள் ..?' நந்தினிக்கு அந்த சிறுமியின் செய்கைகள் வேடிக்கையாகவும், ரசிக்க கூடியதாகவும் இருந்தாலும், அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் குரலில் இப்போது ஒரு போலிக்கோபத்தை கலந்துகொண்டு கேட்டாள்.

"ஹேய்.. உன் மனசுல என்ன நெனச்சுக்கிட்டு இருக்குற..? நான் கேக்குறதுலாம் உனக்கு காதுல விழலையா..?"

"என்ன கேட்டீங்க..?" அந்த சிறுமி சொய்ங் சொய்ங் என்று இங்குமங்கும் ஆடிக்கொண்டே கேட்டாள்.

"உன் பேர் என்னன்னு கேட்டேன்.."

"பேர் என்ன.. என்னை பத்தி எல்லாம் சொல்றேன்.. அதுக்கு முன்னாடி எனக்கு ஒரு காபி போட்டு எடுத்துட்டு வர்றீங்களா..? ப்ளீஸ்.. ரொம்ப டயர்டா இருக்கு..!!"

"ஏய்.. என்ன திமிரா..? இப்போ நீ யார்னு சொல்ல போறியா இல்லையா..?"

"அச்சச்சோ.. கோவமாயிட்டிங்களா..?? கொஞ்சம் ஓவராத்தான் போயிட்டனோ..?? சரி.. சொல்றேன்..!! என் பேர் தமிழரசி..!!"

"ஓஹோ..? நல்ல பேர்தான்..!!"

"தேங்க்ஸ்..!! ஆளானப்பட்ட தமிழுக்கே நீதான் அரசின்னு என் அப்பா அடிக்கடி சொல்லுவாரு.."

"நைஸ்.. நல்ல அப்பா.."

"தமிழுக்கு மட்டும் இல்ல.. இந்த தரணிக்கே நான்தான் அரசி..!! தெரியுமா..?"

"ம்ம்.. இது யாரு சொன்னது.. உன் அம்மாவா..??"

"இல்ல.. அசோக் அங்கிள்..!!"

தமிழரசி கண்களில் மின்னல் மின்ன, கன்னத்தில் குழி விழ, பூரிப்பாக சொன்னாள். அசோக்குடைய பேர் காதில் விழுந்ததுமே என்னவென்று விளங்காத ஒரு உணர்ச்சி மனதுக்குள் ஓடுவதை நந்தினியால் தவிர்க்க முடியவில்லை. அவளுடைய முகமும் இப்போது மலர்ந்து போனது. ஊஞ்சலாடிக்கொண்டிருந்த தமிழரசியிடம், மெல்லிய குரலில் கேட்டாள்.

"அசோக்கா..? அவரை எப்படி உனக்கு தெரியும்..?"

"எப்படியோ தெரியும்.. ஆனா எக்கச்சக்கமா தெரியும்.."

அவர் உனக்கு என்ன வேணும்..?"

"ஹீ இஸ் மை காட்ஃபாதர்..!!"

"ஹாஹா.. காட்ஃபாதரா..?? எப்படி..??"

"ரொம்ப ஈகரா இருக்கோ..? ஓகே.. எனக்கு காபி கெடைச்சா.. உங்களுக்கு காட்ஃபாதர் கதை கெடைக்கும்..!!"

தமிழரசி சொல்லிவிட்டு கண்சிமிட்ட, நந்தினி புன்னகைத்தாள். எதுவும் பேசாமல் திரும்பி கிச்சனுக்கு நடந்தாள். இரண்டே நிமிடங்களில் இரண்டு கப்புகளில் ஆவி பறக்கும் காபியுடன் வந்தாள். ஒரு கப்பை தமிழரசியிடம் நீட்டினாள். ஊஞ்சலில் ஆடுவதை நிறுத்தியிருந்த தமிழரசி 'தேங்க்ஸ்..!!' என்றவாறு கப்பை வாங்கி உறிஞ்சினாள். ஊஞ்சலில் அமர்ந்திருந்த அவளுக்கு எதிரே ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டுக்கொண்டு நந்தினி அமர்ந்தாள். அவளும் காபியை ஒரு மிடறு விழுங்கிவிட்டு கேட்டாள்.

"ம்ம்.. சொல்லு.. அந்த காட்ஃபாதர் கதையை..!!" நந்தினி ஆர்வமாக கேட்க, தமிழரசி முகமெல்லாம் மலர்ச்சியும், குரலெல்லாம் உற்சாகமுமாக ஆரம்பித்தாள்.

"ம்ம்.. சொல்றேன்.. எனக்கு சொந்த ஊர் திருவாரூர் பக்கம்.. எங்க ஊர் எவ்வளவு அழகா இருக்கும் தெரியுமா..? என் அப்பாவும், அம்மாவும் கூட ரொம்ப அழகா இருப்பாங்க..!! ஆனா ஒருநாள்.. களையெடுக்க போறப்போ எங்க அம்மா கரண்ட் வேலில காலை வச்சுட்டாங்க.. காப்பாத்த போன அப்பாவையும் கரண்ட்டு புடிச்சுக்கிச்சு.. அவ்வளவுதான்.. அழகா இருந்தவங்க அப்படியே கருகி போயிட்டாங்க.. ஒரே நாள்ல ரெண்டு பேரும் என்னை தனியா விட்டுட்டு போயிட்டாங்க..!! எங்க மாமா ஒருத்தர் இங்க சென்னைல இருந்தாரு.. 'வாம்மா.. நான் உன்னை வளக்குறேன்'னு கூட்டிட்டு வந்தாரு.. ஆனா கூட்டிட்டு வந்த ரெண்டாவது நாளே என்னை ஒரு பொம்பளைட்ட வித்துட்டாரு..!! அந்த பொம்பளை ரொம்ப மோசம்.. அங்க தடி தடியா எருமை மாடு மாதிரி நெறைய ஆளுக வருவாங்க.. அவங்க கூட அசிங்க அசிங்கமா ஏதேதோ என்னை பண்ண சொல்லுவாங்க.. ஒரு வாரம் நான் அழுதுட்டேதான் இருந்தேன்.. உடம்பெல்லாம் ஒரே வலியா இருக்கும்.. அப்போத்தான் அசோக் அங்கிள் அந்த வீட்டுக்கு வந்தாரா.. ...."

தனது வாழ்வில் நடந்த சோகங்களையும், தான் அனுபவித்த வேதனைகளையும் சிரித்த முகத்துடன் தமிழரசி சொல்லிக்கொண்டே இருக்க, அதைக்கேட்ட நந்தினிக்கு மனதை பிசைந்தது. அவளையுமறியாமல் அவளுடைய இதயத்தில் ஈரமும், கண்களில் நீரும் கசிந்தன. 'இத்தனை நாளாய் என்னுடைய சோகத்தை பெரிதாக கருதினேனே.. இந்த சின்ன வயதில் எவ்வளவு கொடிய, கொடூரமான வலிகளை இந்தப்பெண் அனுபவித்திருக்கிறாள்..?'

அப்புறம் அசோக் தன்னை மீட்டது.. தத்தடுத்துக் கொண்டது.. பள்ளியில் சேர்த்து படிக்க வைத்தது.. தன்னம்பிக்கை கற்றுக் கொடுத்தது.. எல்லாவற்றையும் தமிழரசி சொல்ல சொல்ல.. நந்தினியின் மனதுக்குள் அசோக் பற்றிய நன்மதிப்பு படிப்படியாய் மேலேருவதை உணர முடிந்தது. 'நல்லவன்தான்.. இரக்க குணம் இன்னும் மாறவில்லை அவனிடம்.. மனிதர்களை மதிக்க தெரிந்திருக்கிறது.. ஒரு அனாதை சிறுமிக்கு வாழ்க்கை தந்திருக்கிறான்.. அவள் மனதில் நம்பிக்கையை ஊட்டி புதுப்பெண்ணாக மாற்றியிருக்கிறான்..' நந்தினி அசோக் பற்றி அவ்வாறு சிந்தித்துக்கொண்டிருக்க, தமிழரசி தன் கதையை சொல்லி முடித்தாள்.

"ஸோ.. அசோக் அங்கிள்தான் எனக்கு எல்லாமே..!! காட்.. ஃபாதர்.. காட்ஃபாதர்.. எல்லாமே எனக்கு அவர்தான்..!!" சொல்லிவிட்டு தமிழரசி சிரிக்க,

"ம்ம்.. குட்.. வெரி குட்.." நந்தினி புன்னகைத்தாள்.

"என் பக்கத்துல வாங்களேன்.. உங்களுக்கு ஒன்னு சொல்றேன்.."

"எ..என்ன..?"

"வாங்க சொல்றேன்.."

"என்னன்னு சொல்லு.."

"உங்களைப்பத்தி ஒரு ரகசியம்.. இந்த ரகசியத்தை யாருமே உங்ககிட்ட இதுவரை சொல்லிருக்க மாட்டாங்க.."

"ஹாஹா.. அப்படி என்ன ரகசியம்.. அதுவும் என்னைப் பத்தி..??"

"காதை கொடுங்க.."

நந்தினி தமிழரசியை நெருங்கி, தன் காதை அவள் பக்கமாக திருப்ப, தமிழரசி அவள் காதுக்குள் கிசிகிசுப்பான குரலில் சொன்னாள்.

"நீங்க ரொம்ப ரொம்ப லக்கி.. எங்க அசோக் அங்கிளை கட்டிக்க.. நீங்க ரொம்ப கொடுத்து வச்சிருக்கணும்..!!"

சொல்லிவிட்டு தமிழரசி கன்னத்தில் குழி விழ அழகாக சிரித்தாள். நந்தினி உதட்டில் ஒரு புன்னகையுடன் குழி விழுந்த அந்த கன்னங்கள் ரெண்டையும் பிடித்துக் கொண்டாள். தனது நெற்றியால் தமிழரசியின் நெற்றியில் இதமாக இடித்துக் கொண்டாள்.
[+] 6 users Like Its me's post
Like Reply


Messages In This Thread
RE: ஆண்மை தவறேல் - by Screwdriver - by Its me - 25-05-2020, 12:22 PM



Users browsing this thread: 5 Guest(s)