23-05-2020, 04:44 AM
இதயப் பூவும் இளமை வண்டும் -81
முற்றிலுமாக குணமடைந்து விட்டான் சசி. அவனால் இப்போது பழைய மாதிரி நடக்க முடிந்தது. கால் குணமாகி விட்டதால் மீண்டும் வேலைக்குப் போய்க் கொண்டிருந்தான்.. !!
அண்ணாச்சியின் மளிகைக் கடை இப்போது ஒரு உரக் கடையாக மாறியிருந்தது. டீக்கடை ஒரு டிபன் ஸ்டால் ஆகியிருந்தது.. !!
காலை நேரம்.. சசி வேலைக்குப் போனபோது வழியில் பார்த்த சம்சு பேச்சு வாக்கில் கேட்டான்.
”உனக்கொரு விஷயம் தெரியுமா..?”
”என்ன..?” அனேகமாக அது ராமு பற்றியதாகத்தான் இருக்க வேண்டும் எனத் தோண்றியது.
”ராமுக்கு பொண்ணு பாக்றாங்க..” என்றான்.
எதிர் பார்த்ததுதான்.
”பாத்தாச்சா..?”
”ரெண்டு நாள் முன்னகூட ஒரு பொண்ணு இருக்குனு போனான். ஆனா.. ஏனோ ஒத்து வரல..என்னையும் கூப்பிட்டான்.. எனக்கு வேலை இருந்ததால என்னால போக முடியல..”
அப்படியானால் அவனது காதல்..? புவி என்ன ஆனாள்..?
மெதுவாகக் கேட்டான்.
”அப்ப.. அவன் லவ்வு..?”
”அது.. அவ்ளோதான்..” சிரித்தவாறு சிகரெட் எடுத்து சசியிடம் கொடுத்தான் சம்சு.
”வேணான்டா..” என மறுத்தான் சசி.
”ஏன்டா..?”
‘இப்போது குடிப்பதில்லை’ என்று சொன்னால்.. அவனால் ஏற்க முடியாது. காரணம் கேட்பான். இருதயாவுக்காக என்றால் கேலி செய்வான். அதனால்
”இப்பதான்டா குடிச்சேன்..” என்றான்.
சம்சு சிகரெட் பற்ற வைத்தான்.
”அந்த புள்ளைய கழட்டி விட்றுவான்.. அதுக்கு கல்யாண வயசாடா இப்ப..? இன்னும் அது ஸ்கூலே முடிக்கல..” என்று புகை விட்டான்.
கொஞ்சம் கவலைப் பட்டான் சசி.
சம்சு ”பொண்ணு செட்டான உடனே கல்யாணம் பண்ணிருவான்..! வீட்ல ரொம்ப தீவிரமா இருக்காங்க..” என்றான்.
” ஓ.. இது அந்த புள்ளைக்கு தெரியுமா..?” தயக்கத்துடன் கேட்டான் சசி.
”தெரியாதுனு சொன்னான்..”
அதற்கு மேல் அதைப் பற்றி சசி விசாரிக்க விரும்பவில்லை. பொதுவாகச் சில விஷயங்கள் மட்டும் பேசி விட்டுக் கிளம்பி விட்டான். ஆனாலும் சம்சு சொன்னதுதான் அவன் மனதில் உழன்றது.
மறுபடியும் சசியின் மனதில் ஊமைக் காயங்கள் படிந்தன. அவன் என்னதான் மனம் கசந்து புவியை.. அவன் மனதில் இருந்து தூக்கி வீசிவிட்டதாக நினைத்தாலும்.. அவனால் அவளுக்காகக் கவலைப்படாமல் இருக்க முடியவில்லை. கவலைகள் அவன் மனதை ஆக்ரமிக்க.. வைராக்கியமாக அவளது நினைவுகளை அவன் மனதில் இருந்து விரட்டினான்.
‘அவளுக்கு இது.. வேனும்.. நல்லா வேனும்..!’ என சபித்தான் சசி..!!
இரவு.. சசி பாருக்குப் போய் பீர் குடித்து விட்டுத்தான் வீட்டுக்குப் போனான். அவனுக்கு உணவு பறிமாறும்போது குமுதா கேட்டாள்.
”குடிச்சிருக்கியாடா..?”
”ம்..!!” என ஒப்புக் கொண்டான்.
‘நங் ‘கென அவன் தலையில் கொட்டினாள்.
”திருந்தவே மாட்ட.. நீ..”
அவன் எதுவும் பேசவில்லை. மண்டையை மட்டும் தேய்த்து விட்டுக் கொண்டான். அவன் சாப்பிட..
”யாராரு.?” என்று கேட்டாள் குமுதா.
”என்ன..?” அவளைப் பார்த்தான்.
”யாருகூட சேந்து குடிச்ச..?”
”யாருமில்ல.. நா மட்டும்தான்..”
”தனியாவா..?”
”இல்ல.. என் கூட பார்ல நெறைய பேரு.. உக்காந்துருந்தாங்க.. பெரிய பார்.. எப்படியும் ஒரு.. டூ ஹண்ரட் பேராவது இருப்பாங்க..” என சிரிக்காமல் சொன்னான்.
மீண்டும் அவளிடம் ஒரு கொட்டு வாங்கினான்.
”அப்படி தனியா போய் குடிக்கற அளவுக்கு.. உனக்கு என்னதான்டா பிரச்சினை.?”
”அதெல்லாம் ஒன்னுமில்ல.. ஒரு இதுக்கு குடிக்கறதுதான்..”
”எதுக்கு..?”
”சும்மா…”
”உன்ன.. நா சொன்னா நீ கேக்க மாட்ட.. சொல்ற ஆளு.. சொன்னா கேப்ப..” என்றாள்.
”அது யாரு.. சொல்ற ஆளு..?”
”ம்.. இருதயா..”
”ஏய்.. அவ சொன்னா.. கேக்கறதுக்கு.. நாங்க என்ன லவ்வர்ஸா..?”
”இப்படியே சொல்லி.. உன்னை நீயே எமாத்திட்டிரு.. பைத்தியக்காரா.. அவ உன்மேல.. எவ்ளோ அக்கறை காட்றா தெரியுமாடா..? இங்க வந்தான்னா.. அதிகமா உன்னப் பத்தியேதான் பேசறா.. உனக்காக அவ எவ்ளோ பீல் பண்றா தெரியுமா..?”
”ஏய்.. சும்மா என்னை கடுப்பேத்தாத போ.. கொஞ்சம்..! நா இப்ப லவ் பண்ற இதுலல்லாம் இல்லவே இல்ல… முடிஞ்சா.. அவகிட்ட சொல்லி புரிய வெய்..” என்றான் சலிப்பாக.
”ஆமாடா.. உங்க ரெண்டு பேருக்கும் நான்தான் கேனச்சி.. நீயாச்சு.. அவளாச்சு..என்னமோ பண்ணிட்டு போங்க.. எனக்கென்ன வந்துச்சு..? ஆனா லைப்ல.. எல்லா நேரமும்.. நல்ல ஆப்பர்சூனிட்டி கெடைக்காதுடா.. இவ மூலமா.. உனக்கு ஒரு நல்ல லைப் அமையலாம்னு எனக்கு தோணுது..! அதுக்கு மேல.. உன் விருப்பம்..!!”
”ஏய்.. லூசு..! நீயெல்லாம் ஒரு அக்காளா..? தம்பிய நீயே லவ் பண்ணச் சொல்லி.. டார்ச்சர் பண்ற..? அவ நல்ல பொண்ணுதான்.. அதுக்காக..? அதுல எத்தனை பிரச்சினை இருக்குனு யோசிக்கவே மாட்டியா..?”
”பிரச்சினை இல்லேன்னா.. அப்றம் என்ன வெங்காயத்துக்குடா.. அந்த லவ்வு..? லவ்வுன்னாலே பிரச்சினைதான்டா..” என்று எதிர்வாதம் செய்தாள் குமுதா.
”ஸாரி.. எனக்கு கிறிஸ்டியனா மார்ற ஐடியா இல்லை..! என்னை விட்று..!” என்றான்.
”சரி.. அப்ப அவள.. ஒரு இந்துவா மாத்திரலாம்..?”
”அது சுலபமில்ல.. அதும் இல்லாம.. பொறந்த மதத்த புறக்கணிக்கறதும் நல்லதில்ல.. எந்த ஜாதியோ.. எந்த மதமோ.. அது அவங்க தாய் மாதிரி.. அத.. யாரும் மாத்தறதுல எனக்கு உடன் பாடில்ல..”
”அப்படியா..? சரி.. அப்ப நீங்க ரெண்டு பேரும் மாற வேண்டாம்.. அவங்கங்க மதப்படி இருங்க.. என்ன கெட்டுப் போச்சு..?”
”அதெல்லாம் பேச்சுக்கு அழகாருக்கும்.. வாழ்க்கைக்கு நல்லாருக்காது..! ஸோ.. லீவ் இட்.. ப்ளீஸ்..!!” என்றான் சசி.
” அவனவன்.. எவளாவது கெடைக்க மாட்டாளானு அலையறான்.. நீ என்னடான்னா.. வழிய..வழிய.. வர்றவள.. லவ் பண்ண மாட்டேங்கற..! லவ் பண்றதுக்கு முன்னாலயே தேவையில்லாததையெல்லாம் யோசிச்சிட்டிருக்க..? ம்..ஏன்டா அவள புடிக்கலியா..?”
”புடிக்கற விஷயத்துல ரொம்ப புடிக்கும்..! அதான்.. என்னால அவ வாழ்க்கை கெட்ற வேண்டாம்னு பீல் பண்றேன்.!”
அவர்கள் பேசிக் கொண்டிருந்த போதே.. குமுதாவின் கணவன் வந்து விட.. அவர்கள் பேச்சு அதோடு நின்று விட்டது.. !!
குளிர்காலம் முடிந்து விட்டது. கோடை காலத்தின் துவக்கமே மிகவும் உஷ்ணமாக இருந்தது. ஒரு ஞாயிற்றுக் கிழமை.. குமுதா பையனோடு சேர்ந்து.. சுட்டி டிவி பார்த்தவாறு டிவி முன்னால் உட்கார்ந்திருந்தான் சசி.
இருதயா வந்தாள்.
”ஹாய்..!!”
”ஹாய்..! டிபன் ஆச்சா..?” அவளைக் கேட்டான்.
”இப்பதான்.. நீங்க..?”
”ம்..ம்ம்..!”
இருதயா புளூ கலர் சுடிதார் அணிந்திருந்தாள். அவள் மார்பில் துப்பட்டா இல்லை. அதற்கு அவசியமும் இல்லை எனத் தோன்றியது. அவளுக்குப் பின்னால்.. அவளது தம்பியும்.. இன்னொரு பெண்ணும் வந்தனர்.
அந்தப் பெண்.. சசியைப் பார்த்து.. முதன் முதலில் ‘பொட்டைக் கண்ணா..’ எனக் கமெண்ட் அடித்த போது.. உடனிருந்தவள்.
”இது..?” என இழுத்தான் சசி.
”அக்கா..” என்றாள் இருதயா. ”பெரியம்மா பொண்ணு.. மெர்லின்..! தேர்ட் இயர்..!”
”ஓ..! நாபகமிருக்கு.. இங்க வந்த புதுசுல.. மொதத் தடவை என்னை ரெண்டு பேரும் சேந்து ஓட்னீங்களே.. பொட்டை கண்ணா.. கண்ண நோண்டிருவேன்னெல்லாம்..?”என சசி சிரிக்க..
அந்தப் பெண்ணும் சிரித்து..
”ஸாரி..!!” என்றாள்.
”ம்.. பரவால்ல..! அப்றம் எப்படி இருக்கீங்க..?” என்று கேட்டான்.
”ம்.. ஃபைன்..! நீங்க..?”
”பிரமாதம்..”
சிறிது நேரம் அறிமுகப் படலம் நடந்தது. அப்பறம் இருதயா கேட்டாள்.
”ப்ரீயா.. நீங்க..?”
” ம்.. ஏன்..?”
”சினிமா போலாமா.? ப்ளீஸ்..?”
”சினிமாக்கா..?”
”நாங்க போறோம்..! மம்மிதான்.. துணைக்கு உங்கள கூட்டிட்டு போகச் சொன்னாங்க..” என்றாள்.
”உன் மம்மி வரல.?”
”ம்கூம்.. அவங்க வரல..! வாங்க ப்ளீஸ்..” எனக் கெஞ்சலாகக் கூப்பிட்டாள்.
குமுதா சிரித்தவாறு..
”அவனும் வருவான்..! போய்ட்டு வாங்க..!” என்றாள்.
குமுதாவின் பையன்.
”நானும் வருவேன்.!” என்றான்.
உடனே மது.. ”ஆனு..” என்றாள்.
இருதயா.. ”நீங்களும் வாங்கக்கா.. எல்லாரும் போய்ட்டு வரலாம்..! அண்ணா இருக்காரா.? கூட்டிட்டு வாங்க..!” என்று குமுதாவையும் அழைத்தாள்.
”உங்க அண்ணா.. ஊருக்கு போயிருக்காரு..! அப்ப எல்லாரும் போலாங்கறியா..?” என்றாள் குமுதா.
”புறப்படுங்க..!!” என இருதயா சொன்னாள்.
சசி பேசாமல் நின்றிருந்தான். இருதயா கேட்டாள்.
”நீங்க எதுமே பேசல..?”
”என்ன பேசறது.. கெட் ரெடி..!!” என்றான் சசி.. !!
பெண்களோடும்.. குமுதாவின் குழந்தைகளோடும்.. தியேட்டர் போய் சினிமா பார்த்தது மிகவும் ஜாலியாக இருந்தது சசிக்கு.. !!