அன்பு ஒன்றுதானே அனாதை - நீலியின் கதை
#6
[Image: IMG-20200521-142614.png]

சிஸ்டர் ரூபெல்லாவுக்கு தத்துகொடுக்க தேவையான ஆவணங்களை எழுதுவதே முதல் வேலையாக இருந்தது. அந்த ஆசிரமத்தின் நிர்வாக அதிகாரியான பாஸ்டர் ஜேம்ஸ் ரூபெல்லா கொடுத்த பைல்களை புரட்டி சரிபார்த்தார். இடையே தினம் இரண்டு முறை வந்து கமலாவை பார்த்து பேசிப் போனாள் வேதா. கமலாவின் பேச்சினை நாள் முழுவதும் கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும் என வேதா விரும்பினாள். அதனால் வேலை சீக்கிரம் முடிக்க அழுத்தம் கொடுத்துக்கொண்டே இருந்தாள். இரண்டொரு நாளில் தத்தெடுக்க தேவையான அனைத்து வேலைகளும் முடிந்தன.

அன்று கமலாவை தத்து எடுக்கப் போகும் நாள். "மேடம்.. சார் இன்னும் வரலேங்களா?" என்று விசாரித்தார் பாஸ்டர் ஜேம்ஸ். "வந்துகிட்டே இருக்கார் பாதர். நீங்க நான் கையெழுத்து போட வேண்டிய இடத்தினை காட்டுங்க. கையெழுத்து போட்டிடறேன். அவர் வந்தவுடனே மீதம் செய்யலாம்". வக்கில் எல்லாவற்றையும் படித்து சரிபார்த்திருந்தார். பாதர் ஜேம்ஸ் எல்லா இடங்களையும் காட்டினார். வேதா கையெழுத்துகளை போட்டு முடித்தாள். எல்லோரும் காளிங்கராயர் வருகைக்காக காத்திருந்தனர். கருப்பு நிற வோல்ஸ்வோகன் வண்டி மெதுவாக ஆசிரமத்தினுள் நுழைந்தது. கதவை திறந்து காளிங்கராயர் வெளியே வந்தார். 50 வயசுக்கும் மேல் ஒரு கிழவன் வெள்ளை வேட்டி சட்டை போட்டுக்கொண்டு, பணக்காரத்தனம் காட்ட நிறைய நகை போட்டுக்கொண்டு கேவலமாக இருப்பான் என நினைத்திருந்த சிஸ்டர் ரூபெல்லாவுக்கு ஜிவ்வென இருந்தது. காளியங்கராயர் கருப்பு நிற கோர்ட்சூட் போட்டிருந்தார். ஜிம்மில் இறுகிய உடலும் ஆஜானபகுவான தோற்றமும் கம்பீரமாக இருந்தது. ஸ்டெயிலான தாடியும், நீள முடியை சிறு கொண்டையும் போட்டிருந்தார். வெல்வெட் பிளாக் சுருட்டை புகைத்துக்கொண்டே.. நடந்து வந்தார். சிஸ்டரின் பின்னால் ஒளிந்தவாறு முகத்தை மட்டும் காட்டி நின்று கொண்டிருந்தாள் கமலா. நடக்கும் பொழுதே ஒவ்வொருவராக பார்த்துக்கொண்டு வந்தவர் கமலாவையும் ஒரு செகன்ட் பார்த்தபடி நடந்தார். அனுசரனையாக அனைவரிடமும் பேசினார். பார்மால்டியெல்லாம் முடிந்த பிறகு.. கமலாவின் கைகளை பிடித்தபடி வேதா பின்சீட்டில் அமர்ந்து கொள்ள காளிங்கராயர் முன்பக்கத்தில் உட்காந்து கொள்ள.. பாஸ்டர் ஜேம்ஸ, சிஸ்டர் ரூபெல்லா மற்றும் குழந்தைகள் கமலாவிற்கு கைகளை ஆட்டி மகிழ்ச்சியோடு விடையளித்தனர். வோல்ஸ்வேகன் வாகனம் பறந்தது.

பாஸ்டர் ஜேம்சிடம் ஒரு செக்கினை வக்கில் ஒப்படைத்தார். "இதெல்லாம் எதுக்குங்க சார். எங்க சேவை இறைவனுக்கு". என்றார் பாஸ்டர்.
"பாதர் உங்களோட சேவைக்கு இது தொடக்கம்தான். நீங்க கடவுளுக்கு சேவை செய்யறது போல இது காளிங்கராயருக்கு செய்த சேவை. தக்க மரியாதை அதுக்கு ராயர் தந்திருக்கார். வைச்சுக்கோங்க."
சரியேன வேண்டா வெறுப்பாக வாங்கிக்கொண்டார் பாதர் ஜேம்ஸ். சிறிது நேரத்தில் வளாகமே காலியாக இருந்தது. ஜேம்ஸ் மெயின் கதவை பூட்டிக்கொண்டு ஆபிஸ் அறைக்கு வந்தார். சிஸ்டர் ரூபெல்லா வேலைகளை முடித்துவிட்டு அங்கிருந்தார். பாக்கெட்டிலிருந்த செக்கை எடுத்து ரூபெல்லாவிடம் காட்டி சிரித்தார். "சிஸ்டர் பத்து லட்சம்". "ம்கூம் என்ன இன்னமும் சிஸ்டருனு.‌.. அதெல்லாம் எல்லாம் போயிட்டாங்கள்ள.."
"ஆமான்டி புஜ்ஜூ. எல்லாம் நீ கொடுத்த ஐடியா. இல்லைனா இவ்வளவு பணம் கிடைச்சிருக்குமா?"
"நான் ஐடியா மட்டும் தான் கொடுத்தேன். நீங்க தான் சரியான பார்ட்டியை பிடிச்சீங்க. ஆமா நீங்க ஏன் அவ பேர கமலானு மாத்திட்டிங்க."
"அவளோட பேக்ரவுண்டை பத்தி தெரிஞ்சா தத்து எடுப்பாங்களா? தலை தெரிக்க ஓடிடுவாங்க. காளிங்கராயருக்கு கொஞ்சம் சந்தேகம் வந்திருந்தாலும் பிளான் சொதப்பியிருக்கும். இப்படி பணக்காரங்க வரும் போது நாம லாபம் பார்த்தாதான் உண்டு செல்லக்குட்டி" என சிஸ்டரை பாதர் கொஞ்சினார். செக்கை மேசையில் ஒரு வெயிடின் அடியில் வைத்துவிட்டு..
"புஜ்ஜூ.. இரண்டு மூனுநாளா மஜா பண்ணவே இல்லை. இப்ப அத முடிச்சுட்டுதான்.. மத்தது" என ரூபெல்லாவை இறுக அனைத்து முத்தம் கொடுத்தார் பாதர்.
horseride sagotharan happy
[+] 2 users Like sagotharan's post
Like Reply


Messages In This Thread
RE: அன்பு ஒன்றுதானே அனாதை - நீலியின் கதை - by sagotharan - 21-05-2020, 04:29 PM



Users browsing this thread: 5 Guest(s)