20-05-2020, 05:46 PM
நான் என் பார்வை மாறாமல் பார்த்து கொண்டு இருந்தேன். என் பார்வை யின் தாக்குதல் அவளை நிலை குலைய செய்தது.அவளும் என்னை பார்த்து சின்ன சிரிப்பை உதிர்க்க மேலும் அவள் அங்கு அனைவரிடமும் பேசி கொண்டு இருந்தாள். தனியே வரமாட்டாளா என்று என் மனம் ஏங்கி தவித்தது.அந்த ஒரு நிமிடத்துக்காக காத்து கொண்டு இருந்தேன். எனக்கான நேரம் வரும் என்று நினைத்து கொண்டு இருக்கையில் நேரம் கிடைத்தது. கிடைக்கும் நேரத்தில் நான் அவளிடம் சென்று பேச முயற்சிக்க அவள் பார்வையில் எரித்து கொண்டு இருந்தாள். நான் உடனே அங்கிருந்து செல்ல முற்படும் போது ஒருவன் குடித்து விட்டு வந்து அவளிடம் மோதி னான் பிறகு அவள் அவனை கண்டிக்க அவன் அவளை கட்டி பிடிக்க முயல அப்போது நான் ஒரு ஹிரோ வாக என்ட்ரி ஆகி அவனை அடித்து துரத்தினேன் கடவுள் என்னை கைவிட வில்லை என்று நினைக்க அவள் என்னிடம் சாரி மற்றும் தேங்ஸ் சொல்லி பேச முற்பட நான் அவளிடம் நட்பாக பழகலாம் என்று பேச அவள் ஒரு சின்ன சிரிப்பை உதிர்க்க இதுதான் எனக்கான சான்ஸ் என்று எண்ணி என்னுடைய மொபைல் எண்ணை கொடுக்க அவள் அவளுடைய எண் கொடுக்காமல் சென்றாள். நாங்கள் பேசிக்கொண்டு இருந்ததை ஒருவர் பார்த்து கொண்டு இருந்தாள். அவள் வேறு யாரும் இல்லை என்னுடைய பேராசிரியை இந்திரா.