Fantasy இதயப் பூவும் இளமை வண்டும்
Heart 
இதயப் பூவும் இளமை வண்டும் -78


கடுமையான பனி பெய்து கொண்டிருந்தது. சூரியன் மறையும்போதே குளிர் வாட்டத் துவங்கியிருந்தது. மொட்டை மாடியில் நின்று சிகரெட் புகைத்துக் கொண்டிருந்தான் சசி.
மேலே வந்த இருதயா..
”ஹாய்..” என்றாள்.
சட்டென சிகரெட்டைத் தூக்கி வீசி விட்டு அவளைப் பார்த்தான். ஸ்வெட்டர்.. மப்ளர் எல்லாம் போட்டு அவள் குளிரைத் தடுத்திருக்க.. அவளது முகமும்.. கையும்தான் வெளியே தெரிந்தது.
”இன்னும் தம்ம விடலியா..?” என மெல்லிய சிரிப்புடன் கேட்டாள்.
”ஸாரி.. ஸாரி..!!” என்றான்.
”ஸாரி சொல்லவா அன்னிக்கு அப்படி கேட்டீங்க.. உம்..?” அவன் அருகில் வந்து நின்று கைகளைத் தேய்த்துக் கொண்டாள்.
”செம்ம குளிர் இல்ல..?”
”ம்.. ம்ம்"
”இங்க என்ன.. தனிமை வாசமா..?”
” இப்பதான் வந்தேன்..”
”என்னாச்சு உங்களுக்கு..?”
”ஒன்னும் ஆகல..”
” அப்றம் ஏன்.. இப்படி..?”
” எப்படி..?”
”நீங்க ஷேவ் பண்ணி எவ்ளோ நாள் ஆச்சு..?”
முகத்தைத் தடவினான். லேசாக அவன் தாடி நிரடியது.
”அதுக்கு என்ன இப்ப..?”
”இந்த ஔரங்காசிப் தாடி நல்லாவே இல்ல உங்களுக்கு. எப்பவும் ஷேவ் பண்ணிட்டு.. கலகலப்பா இருக்கற சசிதான் எனக்கு புடிக்கும். இப்படி அசட்டையா.. உம்மணா மூஞ்சியா இருக்கற சசிய எனக்கு புடிக்காது..” எனச் சிரித்தவாறு சொன்னாள்.
சசி லேசாகப் புன்னகைத்து விட்டு அமைதியாக நின்றான்.
”நா உங்க பிரெண்டுதான.?” எனக் கேட்டாள் இருதயா.
அவளைப் பார்த்தான்.
”ஏன்..?”
”சாதாரண பிரெண்டா.. இல்ல..  குளோஸ் பிரெண்டா..?”
”என்ன.. இருதயா.. இப்படி கேக்ற..?”
”சொல்லுங்க.. ப்ளீஸ்..”
”உனக்கு எல்லா உரிமையும் இருக்கு.. வேற எப்படி சொல்றதுனு எனக்கு தெரியல.. ஸாரி.. ப்ளீஸ் இப்படி கேக்காத இருதயா..”
”ஓகே.. ஓகே..! சரி.. எனக்கு எல்லா உரிமையும் இருக்கில்ல.. அந்த உரிமைல கேக்கறேன். இப்ப கொஞ்ச நாளா நீங்க நார்மலா இல்ல.. ரொம்ப டல்லா இருக்கீங்க.. என்னாச்சுனு சொல்லுங்க.. ப்ளீஸ்..”
”ப்ச்.. ஒன்னுல்ல.. இருதயா..” என ரோட்டில் போன பஸ்ஸைப் பார்த்தான்.
”பொய் சொல்லாதிங்க சசி.. என்கிட்ட சொல்லுங்க..! உங்க உயிர் தோழியா நெனச்சு..!” என அவன் கையைப் பிடித்தாள். அவள் கை ஜில்லிப்பாக இருந்தது.
”இருந்தாத்தான சொல்ல..?”
”இல்ல.. என்னமோ இருக்கு..! லவ் பெயிலியரா..?”
”சே.. லவ் பண்ணாத்தான பெயிலியர் ஆகறதுக்கு..?” என்றான்.
அவன் விரல்களைக் கோர்த்தாள்.
”என்னை பாத்து சொல்லுங்க..”
”இல்ல இருதயா.. நீ நெனைக்கற மாதிரி எதுவும் இல்ல..”
”ஆக.. என்கிட்ட.. அத பகிர்ந்துக்க தயாரில்ல..?”
” ஐயோ.. சொன்னா கொஞ்சம் நம்பு..”
மெதுவாக..” சரி..விடுங்க..” என்றாள்.
அவன் விரல்களிலிருந்து அவள் விரல்களைப் பிரித்தாள்.
”ஏய்.. ஸாரி..!”
”பரவால்ல விடுங்க..” என விலகிய.. அவள் கையைப் பிடித்தான்.
”வெரி ஸாரி..”
”பரவால்ல….” என்று சிரித்தாள்.
”நீ எதுவும் நெனச்சுக்காத..”
”ஐயோ.. நாந்தான் பரவால்லனு சொல்றேன் இல்ல.. விடுங்க..”
” இல்ல.. உன்ன.. நா ஏதாவது ஹர்ட் பண்ணிட்டனா..?”
”சே..சே.. நா எதும் பீல் பண்ணிக்கல..”
”தேங்க்ஸ்..”
”ஆனா.. ஏதோ ஒன்னு இருக்குனு மட்டும் தெரியுது.. பரவால்ல.. விடுங்க..! பட் உங்கக்கா.. உங்கள நெனச்சு ரொம்ப ரொம்ப பீல் பண்றாங்க..” என்றாள்.
”ஓ.. ஏதாவது சொன்னாளா..?”
”கதை கதையா சொன்னாங்க.. சாப்பிடறதில்ல.. தூங்கறதில்ல.. எப்பவும்.. சோகமாவே உக்காந்துட்டிருக்கீங்களாம்.. அப்றம் வேலைக்கும் சரியா போறதில்ல.. ரொம்ப முக்கியமா உங்க பிரெண்ட்ஸ்க கூட சுத்தமா சேர்றதே இல்லையாமே.. என்னாச்சு.. பிரெண்ட்ஷிப்ல ஏதாவது பிராப்ளமா..?”
பெருமூச்சு விட்டான்.
”வேற பேசலாமே.. கொஞ்சம் ப்ரீயா..”
”ம்.. பட்.. உங்களுக்கு சொல்லனும்னு தோணினா சொல்லுங்க.. நா பிராமிஸ் பண்றேன். நீங்க சொல்றத ரொம்ப சீக்ரெட்டா வெச்சிக்கறேன்..”
  அவன் அமைதி காக்க.. மீண்டும் அவன் விரல்களைக் கோர்த்துப் பிண்ணியவாறு சொன்னாள்.
”உங்க மனசுலதான் ஏதோ பிரச்சினை.. அது சாதாரண பிரச்சினையா எனக்கும் தோணல..! எந்த ஒரு பிரச்சினையையும் மனசுலயே வெச்சிட்டு புழுங்கக் கூடாது. அதும் ஆழமான பிரச்சினைன்னா.. கன்டிப்பா அத ஷேர் பண்ணியே ஆகனும். ! உங்களுக்கு நா இருக்கேன்.. என்கிட்ட சொல்லுங்க.. உங்க மனசு ரிலாக்ஸ் ஆகும்..!”
”ஸாரி.. இருதயா..! பிரச்சினைதான்.. ஆனா இது வேறவிதமான பிரச்சினை..?”
”அது.. எதுன்னாலும் பரவால்ல சொல்லுங்க..”
”ஸாரி.. அத இப்ப சொல்ல முடியாது..!”
”என்மேல நம்பிக்கை இல்லையா..?”
”சே.. இது அந்த பிரச்சினை இல்லை இருதயா. உன்ன நம்பாம இல்ல. ஆனா.. சில விஷயங்கள வெளிய சொல்ல முடியாது..! நீ ரொம்ப நல்ல பொண்ணு.. இதும் அப்படித்தான்.. ஒரு பொண்ணு விவகாரம்.. ஆனா லவ் கெடையாது..!!”
”அப்றம்..?”
”தப்பு.. ஸாரி..!!” என்றான்.  ”ஒரு பொண்ணோட ரகசியம் ரொம்ப ரொம்ப முக்கியமானது.. அத வெளில பேசறது தப்பு.. ஸாரி..”
”ஓகே.. சரி..பரவால்ல..! நீங்க சொல்றதும் சரிதான்.. ஆனா இதுல நீங்க.. எப்படி..?”
பெருமூச்செறிந்தான்.
”விதி..!!”
அவனையே பார்த்தாள். சசி அமைதியாக நின்றான். நன்றாகப் பனி பெய்து கொண்டிருந்தது. மெல்ல அவன் தோளில் சாய்ந்தாள் இருதயா.

”ரொம்ப குளிருது இல்ல..?” என பேச்சை மாற்றினான் சசி.
”எனக்கு தெரியல..” என்றாள்.
”நீ.. ஸ்வெட்டர் போட்றுக்க.. எப்படி குளிர் தெரியும்..?”
”ரொம்ப குளிருதா..?”
”ம்..ம்ம்..!”
”என்னை அணைசசுக்கோங்க.. குளிர் தெரியாது..!!” அவன் விரலை நெறித்தாள்.
”என்ன சொல்ற..?”
”ஹக் பண்ணிக்கோங்கப்பா.. ம்ம்..!!” அவனோடு அணைந்து நின்றாள்.
”இருதயா….”
”ஏன்.. தப்பா ஏதாவது தோணுதா.. உங்களுக்கு..?”
”புரியல….”
”நா உங்கள ரொம்ப மிஸ் பண்றேன்..!!”
”அப்படின்னா..?”
”என்னை புடிச்சிருக்கா..?”
”இருதயா…..”
”ப்ளீஸ்.. சொல்லுங்க….”
” என்ன கேள்வி இது..?”
”எனக்கு உங்கள புடிச்சிருக்கு..” என்றாள்.
என்ன சொல்வதெனப் புரியாமல் அமைதியாக நின்றான் சசி. அவன் தோளில் தலை சாய்த்து நின்றபோது அவளது தம்பி மேலே வந்து விட்டான்.
”ஏய்.. வா.. மம்மி கூப்பிடுது..” என்று விட்டு அவன் உடனே திரும்பிப் போக..
” ஐ லவ் யூ..! நா போறேன்.. பை..!!” என்றாள் விலகி நின்று.
”பை..!!”
”அவ்ளோதானா..?”
”குட் நைட்.. ஸ்வீட் ட்ரீம்ஸ்..!!” என்றான்.
சிரித்தவாறு ”குட்நைட்.. ஸ்வீட் ட்ரீம்ஸ்..!!” எனறுவிட்டு இறங்கிப் போனாள் இருதயா.. !!
நீண்ட இடைவெளிக்குப் பின்  தன் வீட்டுக்குப் போனான் சசி. கவியின் வீட்டுக் கதவு திறந்திருந்தது. ஆனால் யாரும் தென்படவில்லை. அவன் சைக்கிள் நிறுத்தும் சத்தம் கேட்டு.. கதவருகே வந்து எட்டிப் பார்த்த கவிதாயினி மிடியில் இருந்தாள்.
”ஹாய்….” என்றாள் முகத்தில் புன்னகை மலர.
”ஹாய்..” மெலிதாகப் புன்னகைத்தான் சசி.
”எப்படி இருக்க. .?”
”ம்..ம்ம்..! இருக்கேன்..! நீ..?”
”செம்மயா இருக்கேன்..! அப்றம் எங்க இந்தப் பக்கம்..?” எனக் கேட்டுக் கொண்டே வெளியே வந்தாள்.
”ஓட்டாத.. நீ காலேஜ் போகல..?”
”லீவ்..!” அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே சசியின் அம்மா வெளியே வந்து அவனைப் பார்த்து விட்டு
”வா..” என்றாள்.
உள்ளே போனான்.
”வா கவி..”
அவன் பின்னாலேயே வந்தாள்.
”காலைல வந்துருக்க.. ?”
”ஏய்.. ஏன் வரக் கூடாதா..?”
”வரலாம்தான்.. ஆனா.. நீ வரதில்லயே மச்சி..?”
”கொஞ்சம் பிஸி..!” உட்கார்ந்தான்.
அம்மாவிடம கேட்டான்.  ”அப்பா..?”
”தோட்டத்துக்கு போய்ட்டாரு.. டிபன் தரட்டுமா..?”
”ம்..ம்ம். .! கவி நீ.. சாப்பிட்டியா..?”
”இல்லடா .. நீ சாப்பிடு..!”
”உங்க வீட்ல என்ன டிபன்..?”
”தோசை..”
  அம்மா அடுப்படிக்குப் போக.. சசியைப் பார்த்துக் கேட்டாள் கவி.
”ஏன் இப்படி டல்லாருக்க..?”
புன்னகைத்தான்.
”என்னடா பிராப்ளம்..?”
”நத்திங்.. கவி..”
”நா ஒன்னு கேள்விப் பட்டேனே..?”
”வாட்..?”
”உன் பிரெண்டு ராமுகூட சண்டை போட்டியா..?”
அவனது முகம் மாறியது.
”ப்ச்..!!” என உச் கொட்டினான்.
சட்டென உறைத்தது. புவி மூலமாக அண்ணாச்சியம்மா மேட்டர் இவள்வரை வந்துருக்குமோ..?
எழுந்து டிவி ரிமோட்டை எடுத்து வால்யூமை அதிகப் படுத்தினான். உடனே அவனிடமிருந்து ரிமோட்டைப் பிடுங்கி.. வால்யூமைக் குறைத்தாள் கவி.
”ஆன்ஸர் மீ.. மச்சி..?” என்றாள்.
டிவியைப் பார்த்தபடி..
”என்ன.. கவி..?” என்றான்.
”புவி கூடவும் சண்டை போட்டியா..?”
அமைதியாக இருந்தான். அவளே கேட்டாள்.
”அது உண்மையாடா மச்சி..?”
” எது..?” அவளைப் பார்த்தான்.
”நா கேள்விப் பட்டது..?” அவனை உற்றுப் பார்த்தாள்.
அவனது இதயத் துடிப்பு அதிகமானது. ”என்ன கேள்விப் பட்டே..?”
உதட்டில் மெலிதான புன்னகையுடன் சொன்னாள்.
” ‘பக்….’ கா மேட்டர்….! புவிதான் சொன்னா.. மிஸஸ்.. அண்ணாச்சினு….” அவள் முடிக்கும் முன் சட்டென எழுந்து விட்டான் சசி.. !!!! 
Like Reply


Messages In This Thread
RE: இதயப் பூவும் இளமை வண்டும் - by Mr.HOT - 20-05-2020, 03:28 AM



Users browsing this thread: 10 Guest(s)