வீட்டுக்காரர்(completed)
#23
மீண்டும் என் தவறை உணர்த்துவது போல சுவற்றில் மாட்டி இருந்த கடிகாரம் நான்கு முறை அடித்து மணி நான்கு என்பதை தெரிவிக்க அந்த சத்தம் நவீனுக்கும் எனக்கும் உள்ள பந்தத்தின் சாவு மணி போல என் காதுகளுக்கு கேட்க நான் உடனே ரோஷனிடம் இருந்து விலகினேன். ரோஷன் பரபரப்பே இல்லாமல் நித்தியா இப்படி அணைப்பது இந்தியாவில் அதுவும் தென் இந்தியாவில் ஒரு தவறனா கண்ணோட்டத்துடன் பார்க்கபடுகிறது. இதுவே மற்ற நாடுகளில் ஏன் இந்தியாவின் பிற பகுதிகளில் ஒரு வரவேற்ப்பின் முகமன்னாக இரு நண்பர்களின் நெருக்கத்தை உறுதி செய்வதாகத்தான் எடுத்து கொள்ள படுகிறதே தவிர அது ஒரு உறவின் ஆரம்பம் காமத்தின் வாசற்ப்படி என்பதெல்லாம் இங்கே மட்டும் தான் நோக்கப்படுகிறது. சரி விடு நான் விளக்கம் அளித்து உன்னை நெருங்க நினைக்கவில்லை. மணி நாலு ஆச்சு இனிமே இன்னும் ஒரு ரெண்டு மணி நேரத்தில் நவீனுக்கு முழிப்பு வந்து விடும் எழுந்ததும் அவன் சொல்ல போகும் முதல் வார்த்தைகள் சாரி நித்தியா எனக்கு பயங்கரமாக தலை வலிக்குது என்று தான் அதற்கு சிறந்த மருந்து சூடா டீ இல்லைனா பால் குடு தப்பி தவறி காபி குடுக்காதே அது அவனுக்கு மீண்டும் வாமிட் உண்டு பண்ணும் என்று ஒரு டாக்டர் போல ஆலோசனை சொல்லி விட்டு முடிந்தால் காலையில் வருகிறேன் நவீன் இன்னைக்கு வீட்டிலேயே இருக்கட்டும் என்று சொல்லி கொண்டே நடையை கட்டினான்.

ரோஷன் சொன்னது போல ஏழு மணி ஆகும் போது பெட் ரூமில் நவீன் கூப்பிடும் சத்தம் கேட்க எழுந்து சென்று பார்த்தேன். நவீன் சாரி நித்தி நேத்து கோவிச்சுகிட்டு போனதுக்கு ரொம்பே லேட்டா வந்தேன். நீ தூங்கி கிட்டு இருந்ததாலே உன்னை டிஸ்டர்ப் செய்யாமல் படுத்து விட்டேன். ரொம்ப தலை வலிக்குது சூடா ஒரு காபி என்றான். அவன் பேசியது அடங்கி இருந்த என் கோபத்தை கிளறி விட்டது. நான் பதில் ஒன்றும் சொல்லாமல் சமையல் அறைக்கு சென்று ரோஷன் சொனனது போல டீ போட்டு அவன் முன்னே எடுத்து கொண்டு போய் வச்சுட்டு ஹாலுக்கு சென்றேன். நவீன் டீ குடிச்சுகிட்டே ஹாலுக்கு வந்தார். என்ன எதுக்கு இந்த பெர்முடாஸ் போட்டிருக்கீங்க நைட் படுக்கும் போது போட மாட்டீங்களே என்று கேட்க அவன் அப்பத்தான் குனிந்து பார்த்து தன்னுடைய உடை மாறி இருப்பதை உணர்ந்து கொஞ்ச நேரம் திணறி பிறகு இல்ல நித்தி நேத்து வீட்டுக்கு வரும் போது மழை பெஞ்சுது டிரஸ் நனைசு போச்சு அது தான் சேஞ் செஞ்சேன் என்றான். நான் ஐயோ என்னங்க பழைய பெஞ்சுதுன்னு இவ்வளவு லேட்டா சொல்லறீங்க பால்கனியில் துணி எல்லாம் உலர்த்தி இருந்தேன். என்று சொல்லி கொண்டே பால்கனி பக்கம் போக அங்கே எல்லா துணியும் காய்ந்து இருப்பது எனக்கு நல்லாவே தெரியும் இருந்தும் தொட்டு பார்த்து இல்லைங்க துணி நனையவே இல்லையே என்றேன்.
நவீன் அதற்கு மேல் பேசாமல் மீண்டும் பெட் ரூம் சென்றான்நான் அன்றைய தினசரியை எடுத்து கொண்டு பெட் ரூம் சென்று பேப்பரை அவன் மேல்போட்டு விட்டு படுக்கையில் உட்கார்ந்தேன்நவீன் புரிந்து கொண்டான் நான் ஏதோ கோபமாக இருக்கிறேன் அதற்கு காரணம் அவன் நேற்று கோபித்துகொண்டு வெளியே சென்றது பிறகு குடித்து விட்டு வந்தது என்றுவேறு வழியில்லாமல் சாரி நித்தி நேற்று கொஞ்சம் அதிகமாக கோபப்பட்டு விட்டேன்நீ செஞ்சது மட்டும் சரியா என்னை அவ்வளவு மூட் ஏத்தி விட்டு அப்புறம் ஒதுங்கிகிட்டெ அதனாலே தான் நான் குடிச்சேன்நான் விளக்கம் எல்லாம்வேண்டாம் நான் இன்னைக்கு ஊருக்கு போறேன் ஏற்கனவே சொனனது போல என் ப்ரெண்ட் தங்கச்சி திருமணம் முடிந்த பிறகு தான் வருவேன் என்றுசொல்லி விட்டு அறையை விட்டு வெளியே சென்றேன்.

நவீன் குளித்து ரெடியாகி காலை உணவு சாப்பிடாமலே வேலைக்கு கிளம்பினான்அவன் போகும் போது எனக்கு கொஞ்சம் வருத்தம் தான் நவீன்சென்றதும் கதவை அடைத்து விட்டு வீட்டிற்கு கால் செய்தேன்அம்மா சொல்லு நித்தியா எப்படி இருக்கே மாப்பிள்ளை எப்படி இருக்கார் இப்போஒன்னும் சண்டை இலையே என்று முதல் சுற்று விசாரணையை முடித்து கொள்ள நான் எந்த கேள்விக்கும் பயத்தில் சொல்லாமல் அம்மா நான்இன்னைக்கு ஊருக்கு வரேன் என்று மட்டும் சொன்னேன்அம்மா மாப்பிள்ளைக்கு எத்தனை நாள் லீவ் கிடைச்சுது என்று கேட்க நான் ஐயோ அம்மாஅவர் வரலை நான் மட்டும் தான் வரேன் என்றதும் அம்மா ஹே உனக்கு பைத்தியம் பிடிச்சு இருக்கா எதுக்கு தனியா வரே மாப்பிள்ளைக்கு எப்போ லீவ்கிடைக்குதோ அப்போ வந்தா போதும் வேணும்னா சொல்லு அப்பா கிட்டே கேட்டு நானும் அவரும் அங்கே வரோம் என்றாள் . நான் முடியாது நான்தனியா வர தான் போறேன் என்றேன்அம்மா நித்தியா சொல்லறதை கேளு நீ இன்னும் சின்ன பொண்ணு இல்ல சண்டை வருவது எல்லாம் சகஜம்பொண்ணு தான் அட்ஜஸ்ட் செய்யணும்இப்போ போனை வை அப்பா வந்ததும் பேச சொல்லறேன் என்று சொல்லி வைத்து விட்டாள் .


அம்மா தனியாக ஊருக்கு வர கூடாது என்று சொன்ன பிறகு எனக்குள் வீம்பு அதிகமாகியது. அது என்ன நவீன் அவர் வீட்டிற்கு போகும்போதெல்லாம் என்னையும் அழைத்து போவதில்லையே அவருக்கு ஒரு நியாயம் எனக்கு ஒரு நியாயமா என்று. இன்றும் நவீன் ஆபீஸ் சென்ற பிறகு அழைத்து பேசவில்லை அது மேலும் என் கோபத்தை அதிகமாக்கியது. நானே நவீனை அழைத்து நான் கிளம்பறேன் வீட்டு சாவி ஒன்று உங்களிடம் இருக்கு எப்போ திரும்பி வருவேன்னு பிறகு கால் செய்து சொல்கிறேன் குட் பை அந்த குட் சொல்லும் போது கொஞ்சம் அதகமான அழுத்தத்தை குடுத்தேன். நான் நினைத்தது நவீன் மீண்டும் கூப்பிடுவார் சமாதானம் செய்வார் என்று தான் ஆனால் நான் பேசி முடித்து அரை மணி நேரம் ஆகியும் அவர் கால் வரவேயில்லை. அதன் பிறகு கொஞ்ச நேரம் கழித்து என் மொபைல் அடிக்க நான் மனசுக்குள் சொல்லி கொண்டேன் நவீன் நீங்க எப்படியும் என்னிடம் சரண் அடைவீங்கனு என்று நினைத்தப்படி மொபைலை எடுக்க அந்த கால் நவீன் இல்லை அப்பா வெறுப்புடன் சொல்லுங்கப்பா எப்படி இருக்கீங்க என்ற சம்ப்ரதாயத்துடன் நிறுத்த அவர் நித்தியாமா அம்மா என்னமோ சொல்லிக்கிட்டு இருந்தா நீ ஊருக்கு வர போறேன்னு எப்போ கிளம்பி வரே ப்ளைட்ல வரியா ட்ரெயினா வண்டி அனுப்பனுமா என்று கேட்க அப்பா நா அப்பா தான் என்று கொஞ்சி விட்டு இல்லப்பா எனக்கு ரெண்டுக்கும் டிக்கெட் கிடைக்கலே நைட் ஆம்னி பஸ்ல வரேன் அது நம்ம வீட்டு கிட்டேயே நிக்கும் நான் வந்துடறேன் என்றதும் அப்பா என்ன நித்தியா மாப்பிள்ளை பஸ்ல வருவாரா சிரமமா இருக்கும் கொஞ்சம் இரு நான் இங்கே யார் கிட்டேயாவது சொல்லி பிளைட் டிக்கெட் ஏற்பாடு செய்யறேன் நாளைக்கு கிளம்பி வாங்க என்று சொல்ல அடங்கி இருந்த கோபம் எல்லாம் மீண்டும் வர நான் அப்பா அம்மா சொல்லையா நான் மட்டும் தான் வரேன் அவர் வரலை என்றேன். அப்பா உடனே அம்மா படித்த அதே புராணத்தை படிக்க ஆரம்பிச்சார். இதுவே அம்மா பேசி இருந்தா கால் கட் செய்து இருப்பேன் அப்பா என்பதால் அந்த தைரியம் வரவில்லை. ஒன்றும் பதில் பேசாமல் அவர் சொன்னதை வெறுமனே உம கொட்டி கேட்டேன்
Like Reply


Messages In This Thread
RE: வீட்டுக்காரர் - by johnypowas - 21-02-2019, 06:03 PM



Users browsing this thread: 1 Guest(s)