Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
தாக்குதல் நடத்தியது ஜெய்ஷ் இ முகம்மது அமைப்பு தான்: முஷாரப் ஒப்புதல்

[Image: Tamil_News_large_2218416.jpg]

துடில்லி: காஷ்மீரில் நடந்த கொடூர தாக்குதலை நடத்தியது ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத அமைப்பு தான், என பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷாரப் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் அளித்த பேட்டி: காஷ்மீரில் புல்வாமாவில் நடந்த பயங்கரவாத தாக்குதல் கொடூரமானது தான். இதில் சந்தேகம் இல்லை. ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசார் மீது எனக்கு கருணை இல்லை. அவன் என்னை கொல்ல திட்டம் தீட்டினான். ஆனால், காஷ்மீர் தாக்குதலில் பாகிஸ்தான் அரசுக்கு தொடர்பு உண்டு என்பதற்கு ஆதாரம் இல்லை. ஜெய்ஷ் இ முகம்மது அமைப்பு மீது பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு கருணை இருக்காது. தாக்குதல் சம்பவத்தில் பாகிஸ்தான் அரசுக்கு தொடர்பு இருக்கும் என நான் நம்பவில்லை.


[Image: gallerye_113647693_2218416.jpg]



அனைத்து விவகாரத்திலும், பாகிஸ்தான் மீது இந்தியா தவறாக குற்றம்சாட்டுகிறது. இதனை இந்தியா நிறுத்த வேண்டும். பிரான்ஸ், அமெரிக்காவுடன் இணைந்து, பாகிஸ்தானை கறுப்பு பட்டியலில் இணைக்க, இந்தியா முயற்சி செய்கிறது. இதனை நிறுத்த வேண்டும்.




சர்ஜிக்கல் தாக்குதல் நடந்ததாக இந்தியா சொல்கிறது. இது தவறு. சர்ஜிக்கல் தாக்குதல் எதுவும் நடக்கவில்லை. இவ்வாறு முஷாரப் கூறினார்.
Like Reply


Messages In This Thread
RE: கரண்ட் affairs தமிழில் - by johnypowas - 21-02-2019, 05:35 PM



Users browsing this thread: 88 Guest(s)