நீ இல்லாத வாழ்வு வெறுமையடி by ராசு
#2
அவனுக்கும் அவனது தாய்க்கும் இந்த விசயம் தெரிய வந்தது தற்செயலான விசயம்தான்.
அதுவும் இந்த சாருலதாவால்தான் தெரிய வந்தது.
எங்கெங்கோ ஞாபகம் சுற்றி வருவதை உணர்ந்து தன் தலையில் தட்டிக்கொண்டான்.
இப்போது வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தால் அந்த சாருலதா ஏதாவது தில்லுமுல்லு செய்து அண்ணன் மனதில் நஞ்சைக் கலக்கிவிடுவாள்.
இப்போதைக்கு இந்த வீட்டிற்கு கிருஷ்ணா வரவேண்டியது மிகவும் முக்கியம்.
என்ன நடக்கிறது என்று பார்த்தான்.
மகேந்திரன் மட்டும் யோசித்து பதில் சொல்கிறேன் என்று சொல்லிவிட்டால் எதுவுமே நடக்காது என்று இப்போதே தெரிந்துகொள்ள வேண்டியதுதான்.
இந்த சாருலதா அந்த கிருஷ்ணா யாரு என்னன்னு விசாரிக்க ஆரம்பித்து விட்டாள் என்றால் அதன் பிறகு எதையாவது சொல்லி கிருஷ்ணா வரவிடாமல் தடுத்துவிடுவாள்.
அதற்குள் அண்ணன் பதில் சொல்ல வேண்டுமே.

மகேந்திரன் தனது தந்தையின் அறைப்பக்கமாக திரும்பினான்.
“கொஞ்சம் பொறுங்கம்மா. நான் அப்பாவிடம் பேசிவிட்டு வந்து சொல்கிறேன்.”
அதைக் கண்டதுமே மறைமுகமாக அவன் அளித்த சம்மதம் புரிந்து வனிதாமணியும் யுகேந்திரனும் கண் ஜாடையால் தங்கள் மகிழ்ச்சியைப் பரிமாறிக்கொண்டனர்.
அதைக் கண்டதும் அவள் பல்லைக் கடித்தாள்.
“ஆன்ட்டி. இப்படி கண்டவங்களையும் நம்ம வீட்டில் வந்து தங்க சொல்றது அவ்வளவா எனக்கு சரியா தோணலை.”
தன்னிடம் அவர்கள் என்னவோ ஆலோசனைக் கேட்டதாக எண்ணிக்கொண்டு அவளே பதில் சொல்ல யுகேந்திரன் பல்லைக் கடித்தான்.
அதற்கு மேலும் அவனால் அறைக்குள்ளே நிற்க முடியவில்லை. வெளியே வந்து முறைத்தான்.
“கிருஷ்ணா என்னோட ஃப்ரண்ட். அதுவும் பேயிங் கெஸ்டாதான் எங்க வீட்டில் தங்கறதுக்காக அழைச்சுட்டு வருவதற்கு நான் அனுமதி கேட்கறேன்.”
நம்ம வீடு என்று சொன்னதற்காக தான் திருப்பிக்கொடுக்கிறான் என்று புரிந்தது. அதைப் புரியாமல் போனால் அவள் சாருலதா அல்லவே. அதே மாதிரி புரிந்துகொண்டதை வெளிக்காட்டாமல் நடிக்கவும் அவளால்தான் முடியும்.
“இப்ப நான் என்ன சொல்லிட்டேன்னு நீ இவ்வளவு கோபப்படறே யுகேன்?”
“இந்தப் பாருங்க. என் பெயர் யுகேந்திரன். அப்படியே கூப்பிடுங்க. முடிஞ்சா என்கூட பேசாம இருந்தா கூட நல்லதுதான்.”
வனிதாமணி மகனைப் பார்வையால் அடக்கினார்.
அவன் தன் தாய்க்காக பொறுத்தான்.
மகேந்திரன் தந்தையின் அறைப்பக்கமாக செல்லும்போதே அவர் இதற்கு எதுவும் பெரிதாக மறுப்பு எதுவும் சொல்லமாட்டார் என்று தெரியும். அதுவும் அவனது தாய் கேட்டு ஒரு விசயத்தை மறுத்தார் என்று எதுவும் இருந்ததில்லை.

இருந்தும் அவனுக்கு யோசிக்க சற்று நேரம் தேவைப்பட்டது. அப்படி யோசிப்பது அவனது குடும்ப நலனைக் கருத்தில் கொண்டே எனும்போது அதைத் தள்ளிப்போட அவன் விரும்பவில்லை.

அவன் எதிர்பார்த்த மாதிரியே ரவிச்சந்திரனும் பதில் சொன்னார்.

வேறு வழியில்லாமல் கீழே இறங்கி வந்தவன் தன் சம்மதத்தைச் சொல்லிவிட்டு உடனே அலுவலகத்திற்கு கிளம்பிவிட்டான். கூடவே சாருலதாவும் தொற்றிக்கொண்டாள்.

போகும் வழியெல்லாம் தங்களது வசதி வாய்ப்பு பற்றி தெரிந்த பிறகுதான் இந்த பேயிங் கெஸ்ட் வேசமா என்று தோன்றியது.

இந்த இரண்டு வருடங்களாக இல்லாமல் இப்போது மட்டும் ஏன்?

இதற்குதான் தலைப்பாடா அடிச்சிக்கிட்டேன். நமது வசதி வாய்ப்புக்காக நமக்கு நட்பு இருக்கக்கூடாது. அதனால் நீ உன்னைப் பற்றியோ நமது வசதி வாய்ப்பை பற்றியோ யாரிடமும் வாயைத் திறக்கக்கூடாது என்று சொல்லியிருந்தேன்.

அவனுக்கு வேலையே ஓடவில்லை. இன்னும் யுகேந்திரன் அவன் கண்களுக்கு சிறுவனாகத்தான் தோன்றினான்.

அவனது அன்னை சிறுவயதில் அவனைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்பை கொடுத்தது கூட அப்படியே நினைவிருக்கிறது. அவனுக்கு எதுவும் கெடுதலாய் நடந்துவிடக்கூடாது.

அன்று மாலை சீக்கிரமே கிளம்பிவிட்டான். வேலை எல்லாம் முடிந்துவிட்டது என்று காரணம் காட்டி மீண்டும் அவனுடன் தொற்றிக்கொண்டாள் சாருலதா. அவன் இல்லாத இடத்தில் அவளுக்கு என்ன வேலை. அவனிடம்தானே அவளது வேலை செல்லுபடியாக வேண்டும். அதற்காகத்தானே தனக்கு வராத வேலை எல்லாம் சிரமப்பட்டு கற்றுக்கொண்டு செய்துவருகிறாள்.
தந்தையின் அறைக்குச் சென்று சொல்லிவிட்டு கிளம்பினான். அவர் அவனது சோர்ந்த தோற்றத்தையே யோசனையுடன் பார்த்துக்கொண்டிருந்தார்.
Like Reply


Messages In This Thread
RE: நீ இல்லாத வாழ்வு வெறுமையடி ராசு - by johnypowas - 21-02-2019, 01:12 PM



Users browsing this thread: 19 Guest(s)