screw driver ஸ்டோரீஸ்
"அப்பா எங்கம்மா போயிட்டாரு..??" என்று கேட்டாள்.

"ம்க்கும்.. எங்க போயிருப்பாரு..?? வீட்டுக்கு பின்னால இருக்குற தோட்டத்துல நிப்பாரு..!! காலங்காத்தாலேயே தோட்டத்துல இருக்குற செடியையெல்லாம் கட்டிப்புடிச்சு முத்தம் குடுக்கலைன்னா.. உங்க அப்பாவுக்கு காலைச்சாப்பாடே எறங்காது..!!" பூவள்ளி அவ்வாறு கேலியாக சொல்லவும், ஆதிரா சிரித்துவிட்டாள்.

"ஹஹா.. சரி சரி.. அவருக்கு காபி வச்சுட்டு போறேன்.. வந்ததும் குடிக்க சொல்லு..!!"

இரண்டாவது தம்ளரை டீப்பாயில் வைத்துவிட்டு.. ஆதிரா உள்ளறைக்கு திரும்பினாள்..!! நடந்து சென்று தங்கள் அறைக்குள் நுழைந்தாள்.. கதவை சாத்திவிட்டு.. காபியை டேபிளில் வைத்துவிட்டு.. கட்டிலில் மெல்ல அமர்ந்து.. கணவனை துயில் எழுப்பலானாள்..!!

[Image: krr3.jpg]

"அத்தான்.. எழுந்திரிங்க.. டைமாச்சு..!!"

அவ்வளவுதான்..!! எல்லா படங்களில், எல்லா கதைகளிலும் வருகிற எல்லா ஹீரோக்களையும் போலவே.. விருட்டென்று எழுந்த சிபி, ஆதிராவை இழுத்து தன் மார்போடு போட்டு, இறுக்கி அணைத்துக்கொண்டான்..!!

"ஐயோ.. என்னத்தான் இது.. விடுங்க..!!" எல்லா ஹீரோயின்களையும் போலவே, ஆதிராவும் சிபியின் சில்மிஷம் பிடிக்காத மாதிரி சிணுங்கினாள் .

"அதுக்குள்ள குளிச்சாச்சா..?? நல்லா வாசமா இருக்குற..??" அவளுடைய சிணுங்கலை மதியாமல், ஆதிராவின் கூந்தல் நுகர்ந்தான் சிபி.

"ஆமாம்..!! ம்ம்ம்ம்ம்ம்... விடுங்கத்தான்.. நான் போகணும்..!!"

"எங்க போற..??"

"டிபன் ரெடி பண்ணனும்..!!"

"அதுலாம் அத்தை பாத்துப்பாங்க.. விடு..!! நீ கொஞ்ச நேரம் இருந்துட்டு போ..!!"

"ஹையோ.. வேலை பாக்குறேன்னு சொன்னவங்களையும் நான்தான் வேணாம்னு வெரட்டிட்டு வந்திருக்கேன்.. வேறவழியில்ல.. நான்தான் போய் இப்போ ரெடி பண்ணனும்..!!"

ஆதிரா அவ்வாறு சொன்னதும், இப்போது சிபி அவளை பிடித்திருந்த பிடியை சற்றே நெகிழ்த்தினான்.. மனைவியின் முகத்தை ஏறிட்டு பார்த்தான்.. சற்றே கிண்டலான குரலில் கேட்டான்..!!

"ம்ம்.. அறிவுகெட்ட ஆதிரா அப்படி ஏன் பண்ணினாளாம்..??"

"ஹ்ம்ம்..?? வெக்கங்கெட்ட நீங்க இப்படி பண்ணுவிங்கன்னு எனக்கு எப்படி தெரியுமாம்..??"

"ஹாஹாஹா..!! ம்ம்.. அப்போ.. நான் இப்படி பண்ணுவேன்னு தெரிஞ்சிருந்தா.. எல்லா வேலையும் அத்தை தலைல கட்டிட்டு வந்திருப்பியா..??" மனைவியின் குறும்புக்கு சிரித்த சிபி, விடாமல் கேலியாக கேட்டான்.
[+] 1 user Likes johnypowas's post
Like Reply


Messages In This Thread
RE: screw driver ஸ்டோரீஸ் - by johnypowas - 21-02-2019, 10:51 AM



Users browsing this thread: 7 Guest(s)