21-02-2019, 09:21 AM
சிவசேனா - பா.ஜ., கூட்டணி தொடருமா?
மும்பை : முதல்வர் பதவி குறித்து தாங்கள் விதித்த நிபந்தனைக்கு ஒத்துவரவில்லை என்றால் பா.ஜ., உடனான கூட்டணி முறித்துக்கொள்ளப்படும் என சிவசேனா கூறியுள்ளது.
மஹாராஷ்டிராவில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. கூட்டணியில் சிவசேனா இருந்தாலும் தொடர்ந்து மத்திய அரசை சிவசேனா விமர்சித்து வந்தது. இந்நிலையில் லோக்சபா தேர்தல் மற்றும் சட்டசபை தேர்தலில் இக்கூட்டணி தொடர பா.ஜ., முயற்சித்து வந்தது. இது தொடர்பாக பா.ஜ. தேசிய தலைவர் அமித்ஷா , சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
பேச்சுவார்த்தையின் முடிவில், வரும் லோக்சபா தேர்தலில், மஹாராஷ்டிராவில் கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளதாக, பா.ஜ., மற்றும் சிவசேனா கட்சிகள் அறிவித்தன. மொத்தமுள்ள, 48 தொகுதிகளில், பா.ஜ., 25 தொகுதிகளிலும், சிவசேனா, 23 தொகுதிகளிலும் போட்டியிட உள்ளன. 'சட்டசபை தேர்தலிலும் இந்தக் கூட்டணி தொடரும்' என, அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் கூட்டணி முடிவான இரண்டு நாட்களாக பா.ஜ., - சிவசேனா தலைவர்கள் இடையே வார்த்தை போர் மூண்டுள்ளது. சட்டசபை தேர்தலில் எந்த கட்சி அதிக இடங்களை பிடிக்கிறதோ அந்த கட்சி, முதல்வர் பதவியை எடுக்கும் என பா.ஜ., தலைவர் சந்திரகாந்த் பாடில் கூறியுள்ளார். இதற்கு சிவசேனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சிவசேனா தலைவர் ராம்தாஸ் கடாம் கூறுகையில், பா.ஜ., - சிவசேனா இடையிலான ஒப்பந்தத்தில் இரண்டு முக்கிய நிபந்தனைகள் முன் வைக்கப்பட்டன. கொன்கான் பகுதியில் உள்ள நானார் சுத்திகரிப்பு திட்டத்தை அகற்றுவது மற்றும் மஹாராஷ்டிர முதல்வர் பதவியை பா.ஜ., - சிவசேனா தலா இரண்டரை ஆண்டுகள் என பிரித்துக் கொள்வது. இந்த நிபந்தனைக்கு பா.ஜ., இணங்கவில்லை என்றால் கூட்டணியிலிருந்து விலகிக் கொள்ளலாம் எனக் கூறினா