14-05-2020, 12:08 PM
மறு நாள் கார்த்திக் ஆபிஸ் சென்று தனது கேபினில் அமர்ந்தான். எப்போது காபின் வந்த உடன் அனைவரும் உள்ளனரா, வேலைகள் எப்படி நடக்கிறது என்று பார்ப்பது வழக்கமாக வைத்து கொள்வான். ஆனால் இன்று வந்ததும் கண்கள் ராஜியை தேடியது.
ராஜியின் டேபிள் காலியாக இருந்தது. அவள் இன்னும் வரவில்லை என எண்ணிக்கொண்டான். அரவிந்திடம் அவளை பற்றி கேட்கலாமா என யோசித்தான்.
அவனிடம் கேட்டாள் எதாவது கோவமாக சொல்லுவான். கொஞ்ச நேரம் காத்திருக்கலாம் என முடிவு செய்தான். அவள் பெர்மிஷன் எதாவது அப்ளை செய்திருக்கிராளா என பார்த்தான். ம்ஹூம் பண்ணவில்லை.
கார்த்திக் தன் நிலையில் இல்லாமல் நேரத்தை கடத்தி கொண்டிருந்தான். சீட்டில் இருந்து கொண்டே அவள் வருகிறாளா என பார்த்தான். இரண்டு மணி நேரமாக அவள் வருவதற்கான எந்த அறிகுறியும் இல்லை.
லீவ் அப்ளை செய்திருக்கிராளா என பார்த்தான். எந்த மெயிலும் வரவில்லை. அரவிந்தை அழைத்து கேட்பது தான் சரி என்று அரவிந்தை அழைத்தான்.
“ சொல்லு கார்த்திக். “
“ நம்ம டீம்ல எல்லாரும் வந்துட்டாங்களா. “
“ வந்துட்டாங்க கார்த்திக். ஆனா ராஜி மட்டும் வரலை. “
“ நீதான டீம் லீடர். உன்கிட்ட இன்பார்ம் பண்ண மாட்டாங்களா. இல்ல நீ கேட்க மாட்டியா. “
“ கட்டின புருஷன் நீயே கேட்கல. இதுல நான் எங்க கேட்குறது. பொண்டாட்டி ஏன் வரலன்னு கூட தெரியல. அதிகாரத்துக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல. “ வாய்க்குள்ளே முணுமுணுத்தான்.
“ என்ன சொன்ன. கேட்கல. “
“ இல்ல. ஏன் வரலன்னு என்கிட்டே எதுவும் சொல்லல. மெயில் பண்ணவும் இல்ல. “
“ நீ கால் பண்ணி கேட்கலையா. “
“ ராஜி வரல. லீவ் எடுத்ததுக்கு ரீசனும் சொல்லல. அதுக்கு என்ன பண்ணணுமோ பண்ணு. “
“ இப்போ எதுக்கு கோவப்படுற. சரி நீ போ வேலைய பாரு. “
“ சரி நான் வரேன். “ சொல்லிவிட்டு அரவிந்த் அங்கிருந்து சென்றான்.
இவன்கிட்ட கூட சொல்லலையா. என்ன ஆச்சு. கோவத்துல இருக்காளோ. ஒரு வேலை நேத்து நான் திட்டினதுல எதாச்சும் தப்பான முடிவு எடுத்துட்டாளா. அய்யோ அப்படி இருக்காது. எல்லாம் என் தப்பு. என்னதான் இருந்தாலும் நான் அப்படி சொல்லிருக்கா கூடாது. இந்த மீரா சனியனும் லீவ் எடுத்துட்டு போயிட்டு. எல்லாத்துக்கும் அவதான் காரணம். இப்போ அவ வீட்ல தனியா தான் இருக்கணும். பேசாம வீட்டுக்கு போய் பார்த்துட்டு வந்துடலாமா. எஸ் அதன் சரி. மணியை பார்த்தான். லன்ச் முடித்து விட்டு கிளம்பிடலாம் என்ற முடிவுடன் வேலைகளை தொடர்ந்தான்.
மதிய உணவு இடைவேளையின் போது அரவிந்திடம் பார்த்து கொள்ளுமாறு சொல்லிவிட்டு ராஜி வீட்டை நோக்கி பைக்கை கிளப்பினான்.
ராஜியின் வெட்டின் அருகில் பைக்கை நிறுத்தி விட்டு டோர் அருகில் சென்றான். வீடு உள்பக்கமாக பூட்டி இருந்தது. காலிங் பெல்லை அலுத்தலாமா வேண்டாமா. தயக்கமாக இருந்தது.
ஐந்து நிமிடமாக யோசித்தான். சரி இவ்ளோ தூரம் வந்தாகிவிட்டது. அவளை பார்த்து சாரி ஆச்சும் கேட்டு விடலாம் என்று காலிங் பெல்லை அழுத்தினான். கதவு திறக்கவில்லை.
நான்கு முறை மாற்றி மாற்றி அடித்தான். எந்த ரெஸ்பான்சும் இல்லை. கதவு திறக்கத ஒவ்வொரு நொடியும் கார்த்திக்கிற்கு திக் திக்கென்று இருந்தது. ராஜி கதவை திற மனதுக்குள் சொல்லி கொண்டே கதவை தட்டினான். மீண்டும் வேகமா கதவை தட்ட கதவு திறந்தது.
கதவு திறக்கவும் ராஜி கசங்கிய பூவாக கதவை திறந்தாள். கலைந்த முடிகளுடன் கன்னம் வீங்கிய முகத்துடன், இரவெல்லாம் அழுததால் கண்கள் சிவந்து பார்க்கவே கஷ்டமாக இருந்தது கார்த்திக்கிற்கு.
அவனை பார்த்த ராஜி அவன் முகத்தை பார்க்க பிடிக்காமல் திரும்பி கொண்டாள். ஒரு நொடி பார்த்திருந்தாலும் கார்த்திக்கிற்கு அவள் முகம் ஆழமாக பதிந்தது. இது ராஜி தானா என அவனால் நம்ப முடியவில்லை. எப்போதும் பிரகாசமாக சிரித்த முகத்துடன் அழகாக இருக்கும் ராஜியா இது.
“ நான் உன்கிட்ட. உன்கிட்ட. இன்னைக்கு. “ வார்த்தைகள் வராமல் திணறினான்.
ராஜி பேசாமல் அமைதியாக இருந்தாள். அவள் மெல்ல மெல்ல நடந்து சேர் அருகில் செல்வதற்குள் சேரை பிடித்து கொண்டு மயங்கி சரிந்தாள்.
“ ராஜி.” சொல்லிக்கொண்டே அவன் ஓடி சென்று அவளை தாங்கி கொண்டான். அவளை தன் மடியில் கிடத்தி கொண்டு அவள் கன்னத்தை தட்டி எழுப்பினான்.
“ ராஜி எழுந்துரு. ராஜி. ராஜி. என்னாச்சு. “ அவள் நெற்றியை தொட்டு பார்க்க அனாலாக கொதித்தது. மூச்சு சீராக வந்து கொண்டிருந்தது.
“ ச்ச நல்ல ஜுரம் அடிக்குது. அய்யோ இந்த நேரம் பார்த்து யாரும் இல்லையே.” போனை எடுத்து கேப் புக் செய்தான். கேப் வருவதற்கு 10 நிமிடம் ஆகும் என மெசேஜ் வர அவளை கைத்தாங்கலாக தூக்கினான். தூக்கி சென்று பெட்டில் படுக்க வைத்து விட்டு தண்ணீர் எடுத்து வந்து அவள் முகத்தில் தெளித்தான். அவள் அரை கண்ணில் முழித்து பார்க்க “ ராஜி நான் பேசுறது கேட்குதா. இங்க பாரு ராஜி. என்ன பாரு. “ என்றான்.
ராஜி அவன் கையை உதற முற்பட்டாள். ஆனால் அதற்கு கூட தெம்பு இல்லாமல் கிடந்தாள். தந்து கர்சீப் எடுத்து தண்ணீரில் நனைத்து அவள் நெற்றியில் வைத்தான்.
10 நிமிடத்தில் கேப் வந்து விட அவளை தூக்கி சென்று கேப்பில் வைத்து கொண்டு ஹாஸ்பிட்டல் நோக்கி சென்றான்.
ஹாஸ்பிட்டல் வந்த உடன் உடனடியாக அவளை அட்மிட் செய்து பெட்டில் அட்மிட் செய்தார்கள். அவளை செக்கப் செய்த டாக்டரிடம் கேட்டான்.
“ டாக்டர் என்னாச்சு அவளுக்கு. இப்போ எப்படி இருக்கா. “
“ ஒன்னும் பயப்படுற மாதிரி இல்ல. நீங்க யாரு அவுங்களுக்கு. “
“ நான் நான். ப்ர. ப்ர. இல்ல நான். “ ( பிரண்டு இல்லடா. ஹச்பன்ட்னு சொல்லு )
“ சொல்லுங்க மிஸ்டர். நீங்க “
“ அவுங்க ஹஸ்பன்ட் டாக்டர். “
“ என்ன சார். ஒரு நாள் புல்லா அவுங்க சாப்டல. அவுங்கள வேற அடிச்சிருக்கீங்க. நைட் புல்லா அழுதுருக்காங்க. அதான் BP குறிஞ்சி மயக்கம் ஆகிருக்காங்க. பீவர் வேற இருக்கு. என்ன தான் ஹஸ்பன்ட் வொயிப் இடைல சண்டை நடந்தாலும் அவுங்க சாப்பிட்டங்களா இல்லையானு கூடவா தெரிஞ்சிக்காம இருப்பேங்க. “
“ சாரி டாக்டர். என் தப்பு தான். இப்போ அவளுக்கு எப்படி இருக்கு. “
“ ஒன்னும் பிரச்சனை இல்லை. ட்ரிப்ஸ் போட்ருக்கோம். ட்ரிப்ஸ் ஏறி முடிச்சதும் கூட்டிட்டு போகலாம். நல்லா ஹெல்த்தியா சாப்பிட கொடுங்க. டேப்லெட் அண்ட் டானிக் கொடுக்குறேன் அதை டைம்க்கு சாப்பிட கொடுங்க. “
“ ஓகே டாக்டர். “
“ ஒரு மணி நேரத்துல மயக்கம் தெளிஞ்சிடும். நீங்க போய் பாருங்க. “
“ தேங்க்ஸ் டாக்டர். “
வெளியே வந்து ராஜியை அட்மிட் செய்திருந்த ரூமிற்கு வந்தான்.
குழந்தையை போல இருந்த அவள் முகத்தை பார்த்தான்.