Fantasy தாலி மட்டும் தான் கட்டினேன்
#98
Wink 
தாலி மட்டும் தான் கட்டினேன் - Ep9

மறுமுனையில் தன் அம்மா வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணின் குரல் மெல்லியதாக கேட்டது. "என்ன தம்பி!! இன்னைக்கும் எங்க ஓனர் ராகுல் சார் பத்தி விசாரிக்க வந்துருக்கீங்களா?"

ஐயோ மாட்டிகொண்டோமே என்றது போன்ற ஒரு பதட்டமான குரலில் "சரிண்ணே.. நான் சீக்கிரம் வீட்டுக்கு வந்துறேன்.. பை" என்று சொல்லிவிட்டு போனை டக்கென கட் பண்ணினான் ராம்..

அந்த பெண்ணின் குரல் வந்த திசைக்கு திரும்ப அங்கே தன் அம்மாவின் வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணி நின்றிருந்தாள்.. அவள் உண்மை வயது 45 கிட்ட இருக்கும் என்பதை கழுகு கண்களால் அவளை உற்று பார்த்தால் மட்டுமே தெரியும்.. ஏனென்றால் நரை இல்லாத நேர்த்தியாக ஜடை பின்னப்பட்டிருக்கும் அவள் கருகரு கூந்தலும், சுருக்கங்கள் இல்லாமல் பொலிவுடன் மின்னும் அவள் மேனியின் சருமமும், அடர்த்தியான இரு புருவங்களும், பார்த்தவுடன் கவரும் அழகிய முகமும், பார்ப்பவர்களை திரும்பி திரும்பி பார்க்க வைக்கும் உடல் அமைப்பும், அங்கங்களின் தாராளமான செழிப்பும், அந்த அங்கங்களை மறைத்து மிக நேர்த்தியாக கட்டப்பட்டிருந்த காட்டன் புடவையும் அவளின் உண்மையான வயதை சாதாரண கண்களுக்கு மறைத்து விட்டு ஐந்து வயது இளமையானவளாக காட்டும்..

ராம் அந்த பெண்ணிடம் "ஹாய் ஆண்ட்டி!!"

தம்பி!! நீங்க போன தடவ எங்க ராகுல் தம்பிய பத்தி விசாரிக்க வந்தப்போ நான் உங்ககிட்ட என்ன சொன்னேன்?

ஆண்ட்டி, நான் இப்போ அதுக்காக வரல

இந்த கதைலாம் வேணாம் பா.. அன்னைக்கு சொன்னது தான் இன்னைக்கும் சொல்றேன்.. அவங்க தொழில் நடத்துற இடத்துக்கே வந்து எதோ ராகுல் தம்பி பெரிய தப்பு பண்ண மாதிரி நீங்க விசாரிக்க வர்றது நல்லா இல்லப்பா.. இன்னொரு தடவ

அவள் பேசி முடிப்பதற்குள் தன் கையிலிருந்த ஒரு காகித துண்டை எடுத்து அவள் முகத்திற்கு நேராய் நீட்டினான். அதில் வீட்டிற்கு தேவையான Dove 70ml Hair Shampoo, Dove Bar Soap, Lyzol Lavendar flavour All Cleaning Purpose & Harpic Bathroom Cleaner 1 Ltr - 2 Nos என ஒரு பெரிய லிஸ்ட் இருந்தது..

இதுக்கு தான் ஆண்ட்டி வந்துருக்கேன்.. யாரை பத்தியும் தெரிஞ்சுக்க வரல இப்போ..

ராமின் கையில் இருந்த லிஸ்ட் ஐ பார்த்து விட்டு எதுவும் பேசாமல் சற்று கோவ பார்வையை அவன் மேல் வீசி விட்டு அங்கிருந்து நகர, "ஆண்ட்டி ஒரு நிமிஷம்" என்ற குரல் அவளை தடுத்து திரும்ப வைத்தது..

திரும்பி ராமை பார்த்து, தன் பார்வையாலேயே "என்ன?" என்ற கேள்வியை கேட்க

நான் போன தடவ வந்து உங்க கிட்ட ராகுல் பத்தி கேட்டது அநாகரிகம் தான், அது எனக்கு அப்புறம் தான் புரிஞ்சது.. அதனால ராகுல் பத்தி தெரிஞ்சுக்கணும் ங்கிற நினைப்பையே விட்டுட்டேன்.. ஆனா நான் எதுக்காக அவர் பத்தி விசாரிக்க வந்தேன் ன்னு தெரிஞ்சுக்காம நீங்க என்னை பாக்குறப்போ லாம் எரிக்குற மாதிரி பாக்குறது, நான் எதோ பெரிய தப்பு பண்ண மாதிரி எனக்கே தோண வைக்குது.. அதனால என் பக்கத்துல இருந்து என்ன காரணம் ன்னு தெரிஞ்சுக்கோங்க.. அதுக்கப்புறமும் என்மேல வெறுப்போடு இருக்கணுமா ன்னு நீங்க முடிவு பண்ணிக்கோங்க.. இது நான் ஏன் சொல்றேன் ன்னா  நல்ல குவாலிட்டி ஆனா பொருட்கள் கிடைக்குற சூப்பர் மார்க்கெட்  ல இதுவும் ஒன்னு.. அதனால நான் அடிக்கடி இங்க வர்ற மாதிரி இருக்கும்.. நீங்களும் என்னை முறைச்சிட்டே இருந்தா நல்லா இருக்காது ல அதுக்கு தான்..

அந்த மத்திய நேர பொழுதில் வெயில் சுட்டெரித்து கொண்டிருந்தது. வெயிலுக்கு பயந்து கடைக்கு வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையும் வெகு குறைவாக இருந்ததால் ராமுடன் பேசி கொண்டிருந்த அந்த பெண்மணிக்கு ஓய்வு நேரமும் அதிமாகவே இருந்தது. அதில் சில நிமிடங்களை இவனுடன் செலவழிக்க முடிவு செய்து "சரி தம்பி என்ன சொல்லணும் சொல்லுங்க" என்றாள்..

ஒரு சின்ன நட்பு புன்னகையை உதிர்த்து விட்டு ராம் தொடர்ந்தான்.. "ஆண்ட்டி, எனக்கும் ராகுல் க்கும் எந்த சம்பந்தமும் இல்ல, சொல்லப்போனா நான் அவரை பாத்தது கூட இல்ல.. நான் ஏன் அவரை பத்தி தெரிஞ்சுக்கணும் ன்னு நினைக்குறேன்னா அதுக்கு எங்க தான் காரணம் என்னோட அண்ணன் தான்"

ஏன் உங்க அண்ணனுக்கும் ராகுலுக்கு ஏதாச்சும் பிரச்சனை யா?

இல்ல ஆண்ட்டி.. அவங்க ரெண்டு பெரும் பிரண்ட்ஸ் தான்..

அப்புறம் ஏன் பா, நீ??

சொல்றேன் ஆண்ட்டி.. எங்க அண்ணனுக்கு எப்போவும் பிரச்சனை னா அது அவனோட பிரண்ட்ஸ் மூலமா தான் வரும்.. அவன் சூது வாது தெரியாம, ரொம்ப வெகுளி தனமா வளர்ந்தவன் ஆண்ட்டி, இன்னும் அப்புடியே தான் இருக்கான்.. என்னோட பிரண்ட் கூட பிசினஸ் ஸ்டார்ட் பண்ண போறேன் ன்னு முத தடவ போனான்.. ஒன்றரை லட்சம் நஷ்டத்தோட திரும்ப வந்தான்..

அந்த பெண்மணியின் முகத்தில் இருந்த கோவ ரேகை சிறிதாக மறைந்து கருணை ரேகை குடி புக தொடங்க, அவள் ஆர்வமாக ராம் சொல்வதை கவனித்தாள்.

ரெண்டாவது தடவையும் அவன் அதே மாதிரி போனப்போ அந்த நஷ்டம் ரெண்டு லட்சமா மாறிச்சு.. மூணாவது தடவ போனவனை அவனோட இன்னொரு பிரண்ட் ஒரு மோசடி கேஸ் ல மாட்டி விட்டுட்டான்.. அப்புறம் போலீஸ் ஸ்டேஷனுக்கும், வக்கீல் ஆஃபீஸுக்கும், கோர்ட்டுக்கும் அலைஞ்சு அந்த பிரச்சனை ல இருந்து என்னோட அண்ணனை வெளிய கொண்டு வர்றதுக்கு எங்க குடும்பம் ரொம்பவே கஷ்ட பட்டோம் மனசு அளவுலையும் பொருளாதார அளவுலையும்..

ராம் சொல்வதை ஆர்வமாக கவனித்து கொண்டிருந்த அவளின் முகத்தில் இருந்த கோவ ரேகை முற்றிலுமாக மறைந்து போயிருக்க, கருணை ரேகை முழுவதுமாக குடி புகுந்து அவளது வாயை அவளையறியாமல் உச் கொட்ட வைத்தது..

ரொம்ப நல்லவனா இருந்தாலும் ஏமாளியா இருக்குற என்னோட அண்ணன் மேல நாங்க தனி கவனம் காட்ட வேண்டியது அவசியமா இருக்கு.. கடைசியா இப்போ நாலு நாளைக்கு முன்னாடி ஒருத்தர் அவர் வாட்ச் ஐ ரிப்பேர் பண்றதுக்கு அவர் போகாம எங்க அண்ணனை போக சொல்றாரு அதுவும் லீவுக்கு நாள்ல..

அவள்: அட யாருப்பா அது?

அவர் தான் ஆண்ட்டி ராகுல்.. 

இப்போது அவள் செல்லமாக ராமை கடுகளவு முறைக்க, ராம் அப்டியே தொடர்ந்தான்..

எங்க!!! என்னோட அண்ணன் மறுபடியும் ஏதாச்சும் ஏழரை கொண்டு வந்து விட்டுருவானோ ன்னு ஒரு சந்தேகத்துல தான் ஆண்ட்டி விசாரிக்க வந்தேன்.. நான் இப்போ ராகுல் தப்பானவர்  ன்னு சொல்ல வரல, அவர் நல்லவரா கூட இருக்கலாம், அதை உறுதி செய்யலாம் ன்னு இங்க வந்தேன் அன்னைக்கு.. அதான் இங்க வேலை பாக்குற உங்க கிட்ட கேட்டேன் அவர் பத்தி.. ஆனா இன்னைக்கு வீட்டுக்கு தேவையான பொருட்கள் தான் வாங்க வந்து இருக்கேன்.. வேற எதுவும் இல்ல ஆண்ட்டி.. இப்போ சொல்லுங்க, இன்னமும் என்மேல கோவமா தான் இருக்கீங்களா?

நான் சொல்ல என்னப்பா இருக்கு.. நான் முன்னாடி பேசுனது எதுவும் மனசுல வச்சுக்காத.. ஏதாச்சும் வாங்கணும்னா நம்ம கடைக்கு வா, ஆண்ட்டியே உனக்கு ஹெல்ப் பண்றேன்.. அப்புறம் உங்க அண்ணனை கொஞ்சம் கவனிச்சுக்கோ ப்பா.. 

ரொம்ப தேங்க்ஸ் ஆண்ட்டி புரிஞ்சுக்கிட்டதுக்கு..

ஸ்னேஹமாக அவனை பார்த்து சிரித்து விட்டு "சரிப்பா ஆண்ட்டி பில் கவுன்ட்டர் பக்கத்துல தான் இருப்பேன், ஏதாச்சும் ஹெல்ப் வேணும்னா கூப்பிடு சரியா" என்று சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள்.. 

சில நிமிடங்கள் கடந்தது ..

ராம், அவனுடைய லிஸ்டில் இருந்த அனைத்து பொருட்களையும் எடுத்து கொண்டு பில் கவுன்ட்டர் சென்றான் அங்கே அதே  பெண்மணி இருந்தாள்..

"ஆண்ட்டி நீங்க மல்டி டெலெண்டட் பெர்சன் ஆ?? பில் உம் போடுவீங்களா?"

"எல்லா வேலையும் கத்து வச்சுக்கிறது நல்லது தான" என்று சொல்லிவிட்டு பில் போட்டு அவனிடம் பணம் வாங்கிவிட்டு கல்லா பெட்டியில் போட்டு வைத்தாள்..

ராம் அங்கிருந்து செல்ல

தம்பி என அந்த பெண்மணி அழைத்தாள்..

என்ன ஆண்ட்டி..

இன்னைக்கு நைட்டு சீக்கிரமே கடையை மூடிருவோம்.. நீ ஒரு 8 30 மணிக்கு வா.. ஆண்ட்டி  சொல்றேன்.. 

என்ன ஆண்ட்டி சொல்றீங்க.. 

ராகுல் பத்தி கேட்டில்ல பா.. 

ஓ!!! அதுவா!! பரவால்ல ஆண்ட்டி இருக்கட்டும்.. 

சரிப்பா உனக்கு தெரிஞ்சுக்கணும் ன்னு தோணுச்சுன்னா வா..

சரி ஆண்ட்டி.. பை!!!
[+] 2 users Like manaividhasan's post
Like Reply


Messages In This Thread
RE: தாலி மட்டும் தான் கட்டினேன் - by manaividhasan - 13-05-2020, 09:20 PM



Users browsing this thread: 32 Guest(s)