Romance மெய்நிகர் பூவே
ஆபிசில் அனைவரும் சென்று விட கார்த்திக் சீட்டில் அமர்ந்து கொண்டு சிந்தனையில் இருந்தான் அந்நேரம் சந்துரு அவைண்டம் வந்தான்.
 
“ என்ன மச்சான் இன்னும் கிளம்பலையா தனியா உட்காந்துருக்க.
 
“ போகனும்ட. மனசு சரி இல்ல. நீ பைக்க எடு. ரெண்டு பேரும் போகலாம். “
 
“ நீ இப்படி இருக்குற ஆளே கிடையாதே. எதாச்சும் பிரச்சனையா. கிருஷ் எதாச்சும் சொன்னாரா. “
 
“ அதெல்லாம் ஒன்னும் இல்லடா. “
 
“ சரி வா கிளம்பலாம். “
 
இருவரும் பேக்கை மாட்டி கொண்டு கிளம்ப போகும் வழியில் சந்துரு கேட்டான்.
 
“ மச்சான் இன்னைக்கு சாக்லேட் தரலையே. மறந்துட்டயா. “
 
அவன் சொன்ன பின் சாக்லேட் நியாபகம் வர பாக்கெட்டை தடவி பார்த்து கொண்டான்.
 
“ மச்சான் ஒரு தம் போட்டுட்டு போகலாம்டா. ரொம்ப நேரம் ஆச்சு தம் போட்டு. “ சொல்லிவிட்டு பைக்கை கடை ஓரமாக நிறுத்தினான்.
 
“ அண்ணா ரெண்டு பில்ட்டர் கொடுங்க. “ வாங்கி கொண்டு இந்தாடா என்றான்.
 
“ இல்லடா எனக்கு வேண்டாம். நீ அடி. “
 
“ என்ன மச்சான் புதுசா இருக்கு. “
 
“ இல்லடா விட்டுட்டேன். இனி தம் அடிக்கிறது இல்ல. “
 
“ டேய் என்னடா திடீர்னு திருந்திடுறீங்க. மனசு சரி இல்லனா புகைய உள்ள தள்ளனும். புண் பட்ட நெஞ்சை புகை விட்டு ஆத்தனும்னு சும்மாவாடா சொல்லிருக்காங்க. “
 
“ வேண்டாம்னு சொன்னா விடேன்டா. “
 
“ சரி மச்சான். நீ சோகமா இருக்க. இன்னைக்கு நைட் உன் ரூம்ல உன் சோகம் போற அளவுக்கு புல்லா குடிக்கிறோம். எல்லாத்தையும் மறக்குறோம் என்ன சொல்ற. “
 
“ நான் குடிக்கிறதையும் நிறுத்திட்டேன். “
 
“ டேய் என்னடா குண்டுக்கு மேல குண்டை தூக்கி போடுற. மச்சான் சத்தியமா சொல்றேண்டா. நீ சொல்றதை நம்பவே முடியல. அப்போ எதுக்குடா என்ன கூப்பிட்ட. “
 
“ வண்டியோட்ட டிரைவர் இல்ல அதான் உன்ன கூப்பிட்டேன். “
 
“ இதுக்கு மேல என்ன இன்சல்ட் பண்ண முடியாதுடா. நான் கிளம்புறேன்.
 
கார்த்திக்கிற்கு சிரிப்பு தான் வந்தது.
 
“ சரி மச்சான் நீ கிளம்பு. நான் ஆடோ பிடிச்சி போய்க்கிடுறேன் “
 
“ போய்டுவேண்டா. “
 
“ போடா. நான் ஒன்னும் சொல்லல. “
 
அவன்  சிறிது தூரம் சென்று விட்டு திரும்பி வந்தான்.
 
“ என்ன தான் இருந்தாலும் நான் நட்ப மதிக்கிறவண்டா. உன்ன இப்படியே விட்டுட்டு போனா உலகம் என்ன தப்பா பேசும். வா நானே உன்ன விட்டுடுறேன். “  சொல்லி விட்டு பைக்கை ஸ்டார்ட் செய்தான்.
 
கார்த்திக் சிரித்து கொண்டே பைக்கில் ஏறினான்.
 
சிறிது தூரம் சென்றிருக்க சந்துருவிடம் கேட்டான் கார்த்திக்.
 
“ லவ் பத்தி நீ என்னடா நினைக்குற. “
 
சடன் ப்ரேக் அடித்து கார்த்திக்கை திரும்பி பார்த்தான்.
 
“ என்னடா “
 
ஒன்றும் இல்லை என்பது போல தலை அசைத்து விட்டு வண்டியை ஓட்டினான்.
 
“ சந்துரு நீ லவ் பெயின் எப்படி இருக்கும்னு பீல் பண்ணிருக்கியா. “
 
( அதுக்குள்ள இவனுக்கு எப்படித்தான் மூக்குல வேர்க்குமோ. ஏற்கனவே பிரிச்சதெல்லாம் பத்தாதுன்னு இப்போ புதுசா பிரிக்க பார்க்குறான். நமக்கே இப்போ தான் புதுசா செட் ஆகிருக்கு அதை பிரிக்க ப்ளான் பண்றானே. சந்துரு. இவனை இறக்கி விடுற வரைக்கும் வாய திறந்துடாதடா. உஷார். )
 
அவனை திரும்பி பார்த்து ஹி ஹி ஹி ஹி என இளித்தான்.
 
“ என்னடா இளிக்குற. பதில் சொல்லுடா. “
 
“ உன்கூட இருந்து அதை மட்டும் தான பீல் பண்ண முடியும். “
 
“ இல்லடா நான் எதுக்கு கேக்குறேன்னா “
 
“ அப்பா சாமி நீ ன்னும் கேட்க வேண்டாம். உன் பிளாட் வந்துட்டு. போயிட்டு வா ராஜா. “ அவனை கையெடுத்து கும்பிட்டு விட்டு வண்டியை கிளப்பி கொண்டு ஓடினான். கார்த்திக் அவனை பார்த்து சிரித்து கொண்டே பிளாட் நோக்கி சென்றான்.
 
 
 
இரவு வாக்கில் மீரா ஊருக்கு கிளம்ப ராஜியிடம் சொல்ல சென்றாள். அனால் ராஜி அவள் வருவதை கண்டு கதவை மூடிக்கொண்டு பெட்டில் விழுந்து அழுதாள். ராஜி இப்படி இருப்பது வருத்தமாக இருந்தாலும் வேறு வழியின்றி கனத்த மனதுடன் வெளியே சென்றாள்.
 
பிளாட்டில் கார்த்திக்கிற்கு இருக்க முடியவில்லை. ராஜியின் அழுத முகம் அவன் நினைவிற்கு வர தன்னைத்தானே கன்னத்தில் அடித்து கொண்டான். அவன் எடுத்து வைத்த சாக்லேட் அவன் கண்ணில் பட ஓடி சென்று அதை பிரித்து எடுத்து வேகம் வேகமாக சாப்பிட்டான். கைகளில் ஒட்டி இருந்ததையும் நக்கி சாப்பிட்டான்.
 
[+] 9 users Like bsbala92's post
Like Reply


Messages In This Thread
RE: மெய்நிகர் பூவே - by enjyxpy - 24-06-2019, 11:46 PM
RE: மெய்நிகர் பூவே - by enjyxpy - 28-06-2019, 08:38 PM
RE: மெய்நிகர் பூவே - by bsbala92 - 11-05-2020, 06:38 PM



Users browsing this thread: 11 Guest(s)