11-05-2020, 06:36 PM
ராஜி கூறியதை கேட்டு கார்த்திக் கையில் இருந்த சிகரெட்டை கீழே தூக்கி எறிந்தான். அவள் சொன்னது அவன் காதுகளில் திரும்ப திரும்ப ஒலித்தது.
“ தயவு செஞ்சி இனிமே சிகரெட் குடிக்காதீங்க. உங்களுக்கு மனசு தான் இல்ல. ஆனா இதயம் இருக்கு, உங்கள நம்பி உலகமே தெரியாம நீங்க தான் உலகம்னு அழகான ஒரு குடும்பம் இருக்கு. மறந்துடாதீங்க. “......... அவள் கூறியதை யோசித்து கொண்டிருக்க அரவிந்த் கார்த்திக் அருகில் வந்து நின்றான்.
“ உன் வேலை தான இதெல்லாம். “
“ நீ எல்லாம் மனுஷனாடா. சாடிஸ்ட் டா. நீ. இப்போ உனக்கு கல்யாணம் ஆகிடுச்சு இங்க உள்ளவங்களுக்கு தெரிஞ்சா உன் இமேஜ் குறைஞ்சி போய்டுமா. உன்னோட ஈகோக்காக பாவம் ஒரு பொன்னை கஷ்டபடுத்துரையே. உனக்கே நல்லா இருக்கா. உனக்கு தெரிஞ்சோ தெரியமலையோ உனக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைஞ்சிருக்கு. அதை இப்படி நீயே கெடுத்துகிட்ட கார்த்திக். “
“ டேய் நான். “
“ நீ ஒன்னும் சொல்ல வேண்டாம். ரொம்ப நல்ல பொண்ணுடா. அவளுக்கு என்னடா குறைச்சல். அழகு இல்லையா. திறமை இல்லையா. எல்லாத்துக்கும் மேல உன்னையே சுத்தி சுத்தி வந்த பொன்னை இப்படி அசிங்கமா சொல்லுறியே. ச்ச. உன்ன நினைச்சா கேவலமா இருக்குடா. இப்படியே உன் ஈகோவ பிடிச்சிகிட்டே கடைசி வரைக்கும் மொட்ட பயலாவே இரு. நான் வரேன். “
கார்த்திக்கிற்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. மீண்டும் ஒரு சிகரெட்டை எடுக்க ராஜி சொன்னது நினைவிற்கு வர சிகரெட் பாக்கெட்டை தூக்கி வீசினான். நேராக பாத்ரூம் சென்று முகம் கழுவி கொண்டு கேபின் சென்றான்.
தப்பு கார்த்திக். நீ செஞ்சது பெரிய தப்பு. அவளை உனக்கு பிடிக்காவிட்டாலும் நீ அந்த வார்த்தையை சொல்லியிருக்க கூடாது. முதல்ல அவகிட்ட சாரி கேக்கணும். நினைத்து கொண்டே கண்ணாடி வழியாக ராஜியை பார்க்க கண்களில் கண்ணீர் வழிய கணினி திரை பார்த்து வேலை செய்து கொண்டிருந்தாள்.
அவள் திரும்புவாள் என எதிர் பார்த்து பார்த்து கொண்டிருக்க அவள் இறுதி வரை திரும்பவே இல்லை. சீட்டில் அமர்ந்து கொண்டு போனை எடுத்து டேபிளில் வைக்க அங்கே டைரி மில்க் சாக்லேட்டும் கூடவே ஒரு பேப்பரும் இருந்தது.
உடனடியாக பேப்பரை பிரித்து பார்க்க அதில் குட் பை என எழுதி இருந்தது. சாக்லேட்டை எடுத்து பக்கெட்டில் வைத்து கொண்டு பேப்பரை கசக்கினான். டேபிளில் சாய்ந்து கொண்டு யோசனையில் ஆழ்ந்தான்.
வேலை முடியும் வரை நால்வரும் ஒவ்வொருவர் முகத்தை பார்க்காமல் பேசாமல் இருந்தனர். ஈவினிங் நேரத்தில் அனைவரும் கிளம்ப ராஜி முன்னதாகவே கேப்பில் சென்று அமர்ந்து கொண்டாள்.
மீரா ராஜியை கானாது அரவிந்திடம் கேட்க அவள் முன்னதாக சென்று விட்டதாக கூறினான்.
“ மீரா நீ கவலை படாத. ராஜிக்கு நீ யாருகிட்டயும் சொல்லாதன்னு சொல்லியும் என்கிட்ட சொன்னது தான் கோவம். அவ சீக்கிரம் சரி ஆகிடுவா. நீ இன்னைக்கு ஊருக்கு போறதா சொன்னல்ல. நீ அந்த வேலையை பாரு. நான் ராஜிகிட்ட சொல்லி புரிய வைக்குறேன். “
“ இல்ல அரவிந்த் இப்போ என்னோட கவலை அது இல்ல. நான் ஊருக்கு போய்ட்டா ராஜி தனியா இருப்பா. இன்னைக்கு நடந்த விஷயத்தால அவ ரொம்ப வருத்ததுல இருக்கா. நான் இல்லாதப்போ ஏதாச்சும் தப்பா முடிவெடுத்துட்டா. அதான் பயமா இருக்கு. “
“ மீரா அவ ரொம்ப தைரியமான பொண்ணு. அப்படிலா அவ எதுவும் பண்ணிக்கொள்ள மாட்டாள். நீ கவலைப்படாத. “
“ அரவிந்த் நீ ஒன்னு பண்ணு. அவள நான் வர வரைக்கும் நீ கொஞ்சமா பார்த்துக்கோ. அவளுக்கு எதாச்சும் வேணும்னா நீ ஹெல்ப் பண்ணுடா. “
“ இதை நீ சொல்லனுமா மீரா. நான் பார்த்துகிடுறேன். “
“ சரி அரவிந்த். நான் கிளம்பிட்டு உனக்கு போன் பண்றேன். நீ வந்து பிக்கப் பண்ணிக்கோ. பை “
“ பை மீரா. “
இருவரும் பிரிந்து விட மீரா வேறொரு கேப்பில் வீடு நோக்கி சென்றாள்.