screw driver ஸ்டோரீஸ்
உச்சிமலையில் ஊரின் மீதி ஜனம் குழுமியிருந்தது.. நடுநாயகமாக நின்றிருந்தார் புவனகிரி..!! சன்னதக்காரர் தனது நடிப்பை இன்னும் தொடர்ந்து கொண்டிருந்தார்.. 'அவளை காவு குடுங்கடா.. அவளை எனக்கு காவு குடுங்க..' என்று நாக்கை துருத்தி கத்திக் கொண்டிருந்தார்..!! மரத்தால் செய்யப்பட்ட ஒரு பெரிய எண்ணெய்க்கலம் மையமாக வைக்கப்பட்டிருந்தது.. ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் ஒரு பிரதிநிதி.. தங்களது ஈவான மூன்று ஆழாக்கு எண்ணெயை.. வரிசையாக வந்து அந்த எண்ணெய்க்கலத்தில் ஊற்றிக் கொண்டிருந்தனர்..!!

ஊருக்குள் இருந்ததை விட உச்சிமலையில் காற்றின் வேகம் இன்னுமே அதிகமாக இருந்தது.. சடசடவென காற்றின் சப்தமே பெரிதாக கேட்டது..!! நடக்கவிருக்கிற கொடுஞ்செயலை புரிந்துகொண்டாற்போல.. காட்டு மரங்கள் வெட்கி தலைகுனிந்து கொண்டன.. காகங்களும் குருவிகளும் சிறகடித்து வேறூருக்கு பறந்தன.. மலையடிவாரத்து குழலாறு ஓடமனமில்லாமல் உறைந்து போயிருந்தது..!!

இழுத்து வந்து நிறுத்தப்பட்ட குறிஞ்சி தன் தலையை மெல்ல உயர்த்தினாள்.. களைப்பு மிகுந்த கண்களை சுழற்றி, சுற்றியிருந்த கூட்டத்தை ஒருமுறை பார்த்தாள்..!! இதில் எத்தனை பேர் தன்னுடன் படுக்கையில் புரண்டிருக்கிறார்கள் என்று கணக்கெடுப்பது போல இருந்தது அவளது பார்வை..!! 'வேசி வேசியென்று என்னை தூற்றுகிறார்களே.. அந்த வேசித்தொழில் செய்ய என்னை தூண்டியவர்கள் இதில் எத்தனை பேர்..??' என்பது மாதிரி இருந்தது அந்த பார்வை..!! கண்களால் நடத்திய கணக்கெடுப்பின் பலனாக கணிசமான ஒரு தொகை கிடைத்தது.. சாமியருள் வந்துவிட்டதாய் பாசாங்கு புரிகிற சன்னதக்காரரும் அதில் அடக்கம்..!!

விழிகளில் வன்மமும், இதழ்களில் எள்ளலுமாய்.. குறிஞ்சியின் முன்பாக வந்து நின்றார் புவனகிரி..!!

"பேராசைக்கு என்ன கூலின்னு இப்போவாவது உனக்கு புரிஞ்சதா..??" அவர் சொல்லி முடிக்கும் முன்பே,

"த்த்தூதூ..!!!" அவருடைய முகத்தில் காறி உமிழ்ந்தாள் குறிஞ்சி.

அவ்வாறு காறி உமிழ்ந்த அடுத்த நொடியே.. அவளுடைய பின்னந்தலையில் சத்தென்று உருட்டுக்கட்டையால் ஒரு அடி விழுந்தது.. தரையில் பொத்தென்று சுருண்டு விழுந்தாள் குறிஞ்சி..!! விழுந்தவளின் உச்சிமயிரைப் பற்றி, கரடுமுரடான பாறையில் தரதரவென இழுத்து சென்றான் ஒரு அடியாள்..!! முகத்தில் வழிந்த உமிழ்நீரை துடைத்த புவனகிரியின் கண்களில்.. அவமான உணர்வென்பது துளியும் இல்லை.. அத்தனை திருப்தியான ஒரு பார்வை பார்த்தார்..!!

இழுத்து செல்லப்பட்ட குறிஞ்சியை இரண்டு பேர் உயர்த்தி நிறுத்தினர்.. ஒற்றையாய் நின்றிருந்த கல்த்தூணில் கயிறு கொண்டு அவளை கட்டினர்..!! புவனகிரி கண்ஜாடை காட்டியதும்.. மரக்கலத்தை எடுத்து அதிலிருந்த எண்ணெய்யை குறிஞ்சியின் தலையில் கொட்டி கவிழ்த்தனர்..!! அவர் கை நீட்டியதும்.. நெருப்புப்பந்தம் ஒன்று அந்தக்கையில் திணிக்கப்பட்டது..!! ஊர் மக்கள் எல்லாவற்றையும் கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்..!!

"இந்தப்பாவம் உங்களை எல்லாம் சும்மா விடாது..!!" - ஆவேசமாக கர்ஜித்தாள் குறிஞ்சி.

அடுத்தநொடியே.. கையிலிருந்த பந்தத்தை புவனகிரி தூக்கியெறிய.. குறிஞ்சியின் உடலில் குப்பென்று தீப்பற்றிக் கொண்டது..!! உயிருடன் கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தாள் குறிஞ்சி.. உடனடியாய் சதைகள் பொசுங்கிப்போக, உள்ளடங்கிய ரத்தநாளங்கள் வெடித்து சிதறின..!!

"ஆஆஆஆஆஆஆஆஆ..!!" ஆவிகொதிக்க அலறி துடித்தாள் குறிஞ்சி.

மலையுச்சியில் சூறைக்காற்று இப்போது திடீரென சுழற்றி அடித்தது.. நிலையாக நிற்கக்கூட முடியாமல் அனைவரும் தடுமாறினார்.. கையை முகத்துக்கு முன்னர் கொண்டு வந்து காற்றை மறைத்தனர்..!!

"ஆஆஆஆஆஆஆஆஆ..!!"

அலறிக்கொண்டே குறிஞ்சி உடலை முறுக்கி திமிறினாள்.. கட்டி வைத்திருந்த கயிறு இப்போது இற்றுப்போய் அற்றுக்கொண்டது..!! அக்னிஜுவாலை பற்றி எரிய.. அங்கும் இங்கும் அலறியடித்து ஓடினாள் குறிஞ்சி..!! ஊர்மக்கள் மிரண்டு போய் அந்த கோரக்காட்சியை பார்த்துக் கொண்டிருக்கையிலேயே.. திகுதிகுவென தீப்பற்றிய தேகத்துடன் மலையுச்சியில் இருந்து கீழே பாய்ந்தாள்..!!

அடித்த சுழல்காற்றுக்கு.. அவள் நேற்று அணிந்திருந்த சிவப்பு நிற அங்கி.. எங்கிருந்தோ இப்போது பறந்து வந்தது..!! பள்ளத்தாக்கில் அவள் பாய்ந்த திசையிலேயே.. அந்த அங்கியும் வீழ்ந்து அவளுடன் பயணித்தது..!! 

ஆயிரத்து ஐநூறு அடி உயரமான சரிவில்.. அங்கமெங்கும் எரிகிற நெருப்புடன்.. ஆங்காங்கே பாறைகளில் முட்டி மோதியவாறு.. குறிஞ்சி கீழே சென்று கொண்டேயிருந்தாள்..!! இறுதியாக சமதளத்தை அடைந்து.. குழலாற்றின் தெளிந்த நீரை கிழித்துக்கொண்டு தொப்பென்று விழுந்தாள்.. அந்த ஆறும் அதற்காகத்தான் காத்திருந்தமாதிரி அவளை தனக்குள் வாங்கி புதைத்துக்கொண்டது..!! பறந்து சென்ற சிவப்பு அங்கியும்.. அவள் விழுந்த இடத்திலேயே சென்று விழ.. ஆற்றுச்சுழல் அதனை உள்ளிழுத்துக் கொண்டது..!!
[+] 1 user Likes johnypowas's post
Like Reply


Messages In This Thread
RE: screw driver ஸ்டோரீஸ் - by johnypowas - 20-02-2019, 12:48 PM



Users browsing this thread: 6 Guest(s)