screw driver ஸ்டோரீஸ்
"இந்தா.. இதையும் வச்சுக்கோ..!!"

அணிந்திருந்த பொன் நகைகளை கழற்றியிருந்த தீர்த்தபதி.. அவற்றை உள்ளங்கையில் வைத்து குறிஞ்சியிடம் நீட்டினான்..!! அவனை கூர்மையாக ஏறிட்ட குறிஞ்சி.. தலையை மெலிதாக அசைத்து 'வேண்டாம்' என்று மறுத்தாள்..!! அவன் மீதிருந்த பார்வையை விலக்காமலே.. அலமாரியில் இருந்து அந்த குறுவாளை எடுத்து தன் இடுப்பில் செருகிக் கொண்டாள்..!! 'உன்னால் எனக்கு எத்தனை இடர்பாடுகள் பார்..' என்பது மாதிரி இருந்தது அவள் தீர்த்தபதியை பார்த்த பார்வை..!!

"நேரம் ஆயிட்டு இருக்கு குறிஞ்சி.. எந்த நேரமும் அவங்க இங்க வரலாம்.. நீ சீக்கிரம் புறப்படு..!!"

தீர்த்தபதி சொல்ல, குறிஞ்சி நீளமாக ஒரு பெருமூச்சினை வெளிப்படுத்தினாள்.. சாளரத்தின் வெளியே சடசடத்த மழையை ஒருமுறை திரும்பி பார்த்தாள்.. கட்டிலில் கிடந்த அந்த சிவப்பு நிற அங்கியை கையில் எடுத்தாள்.. தனது உடலை முழுதும் போர்த்தும்படியாக தலையை சுற்றி அணிந்து கொண்டாள்.. கழுத்துப் பகுதியில் இருபுறமும் தொங்கிய நாடாக்களை சரக்கென இழுத்து முடிச்சிட்டாள்.. அவசரமாய் வாசலை நோக்கி நடந்தாள்..!!

தீர்த்தபதி பின்தொடர வீட்டிலிருந்து வெளிப்பட்டாள்..!! கும்மிருட்டு.. ஜிவ்வென்று கொட்டுகிற மழை.. மின்னல் வெளிச்சத்துடன் இடிமுழக்கம்.. ஏதோ ஒரு காட்டு விலங்கின் தூரத்து ஓலம்..!! மழையில் நனைந்து நடந்த குறிஞ்சி.. தலைகுனிந்து தயாராய் நின்றிருந்த அந்த குதிரையை நெருங்கினாள்.. அதன் முதுகில் கைபதித்து லாவகமாக மேலேறினாள்..!!

"பார்த்து கவனமா போ குறிஞ்சி..!!"

கனிவுடன் சொன்ன தீர்த்தபதியை ஒருகணம் சலனமில்லாமல் பார்த்தாள்..!! பிறகு.. குதிரையின் கடிவாளத்தை பிடித்து சரக்கென இழுத்தவள்.. 'ஓவ்' என்று சப்தமெழுப்பியவாறு கால்களை விரித்து குதிரையின் விலாப்பகுதியை உதைக்க.. அது உடனடி வேகமெடுத்து 'விர்ர்ர்ர்ர்' என்று கிளம்பியது..!! மழை நீரின் அடர்த்தியையும் மீறி, எதிர்க்காற்றின் அசுர வேகத்தில்.. அவள் அணிந்திருந்த சிவப்பு அங்கி உயரெழும்பி பறந்தது..!! 'தடக்.. தடக்..' என குளம்படி ஓசையுடன் பறந்து செல்கிற குதிரையை.. பார்த்துக் கொண்டே நின்றிருந்தான் தீர்த்தபதி..!!

குறிஞ்சியின் குதிரை அந்த இடத்தை விட்டு கிளம்பிய சில நொடிகளிலேயே.. வேறு திசையில் இருந்து அதே 'தடக்.. தடக்..' ஓசையுடன் நான்கு குதிரைகள் வந்தன.. கடிவாளம் இழுக்கப்பட்டு குறிஞ்சியின் வீட்டின் முன்பாக வந்து நின்றன..!! குறிஞ்சியை இழுத்து செல்ல இத்தனை சீக்கிரம் வருவார்கள் என்று தீர்த்தபதி சற்றும் எதிர்பார்த்திரவில்லை.. குழம்பிப் போனான்..!! கையிலிருந்த நகைகளை உடனே பின்புறமாக மறைத்தவன்..

"அ..அவளை இழுத்து செல்லத்தான் நானும் வந்தேன்.. அதற்குள்ள விஷயம் தெரிஞ்சு அவ தப்பிச்சுட்டா..!!"

என்று தடுமாற்றமாக சொன்னான்..!! தொடர்ந்து.. அவள் சென்ற திசையென தவறான திசையை காட்ட எண்ணி அவன் கையை உயர்த்துகையிலேயே..

"அதோ.. அங்க போறா பாரு..!!"

குதிரையில் வந்தவர்களில் ஒருவன்.. குறிஞ்சி சென்ற திசையை சரியாக கண்டறிந்து கொண்டான்..!! சற்றும் தாமதியாமல்.. நால்வரும் அதே திசையில் தங்கள் குதிரைகளை முடுக்கி விரைந்தனர்..!! 'குறிஞ்சி இந்த ஊரை விட்டு சென்றால் போதும்' என்று எண்ணியிருந்த தீர்த்தபதியின் நெஞ்சில் இப்போது ஒருவித கலக்கம்.. குற்ற உணர்வு ஒன்று அவனுடைய மனதில் மெலிதாக பரவ ஆரம்பித்தது..!!

கடும் மழை பொழிகிற மலைப்பிரதேசம்.. கரி பூசிவிட்ட மாதிரியாக அடர்இருள்.. நெருக்கமாய் வளர்ந்திருக்கிற காட்டுமரங்கள்.. அதற்குள்ளே வளைந்து நெளிந்து செல்கிற குறுகலான சாலை..!! அந்த சாலையில்.. சிவப்பு நிற அங்கி காற்றில் படபடக்க.. வெள்ளை நிற குதிரையில் குறிஞ்சி பறந்து கொண்டிருந்தாள்..!! சிறிது தூர இடைவெளியில்.. இன்னும் நான்கு குதிரைகளில்.. புவனகிரியின் ஆட்கள் அவளை விரட்டிக் கொண்டிருந்தனர்..!!
Like Reply


Messages In This Thread
RE: screw driver ஸ்டோரீஸ் - by johnypowas - 20-02-2019, 12:45 PM



Users browsing this thread: 9 Guest(s)