screw driver ஸ்டோரீஸ்
"எ..என்னை மன்னிச்சுடு குறிஞ்சி..!!"

தீர்த்தபதி அவ்வாறு சொன்னதும் குறிஞ்சி அவனை ஏறிட்டு ஒருகணம் கூர்மையாக பார்த்தாள்.. பிறகு மீண்டும் தலையை குனிந்து.. தகரப்பெட்டிக்குள் தனது தேடுதலை தொடர்ந்தவாறே.. ஆதங்கமான குரலில் கேட்டாள்..!!

"ஏன் இப்படி செஞ்சீங்க.. என்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லாம..??"

"எ..எல்லாம்.. உன் மேல இருக்குற ஆசைலதான் குறிஞ்சி..!!"

"ஆசை இருந்தா அதை என்கிட்ட சொல்லிருக்கலாமே.. நான் தீர்த்து வச்சிருப்பேனே..??"

"இல்ல.. நீ தப்பா புரிஞ்சுக்கிட்ட..!!"

"நீங்கதான் தப்பா புரிஞ்சுக்கிட்டிங்க..!! அவரோட பையனா இருந்தும்.. ஆணவம்ன்றது கொஞ்சம் கூட இல்லாம நீங்க பேசின விதம்தான் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது.. அதனாலதான் நானும் உங்ககூட பேசினேன் பழகினேன்..!! மற்றபடி அந்த மாதிரி எண்ணம் உங்க மேல எனக்கு எப்போவும் வந்தது இல்ல..!!"

"எனக்கு தெரியும்..!!"

"அப்புறம் எப்படி உங்க அப்பாகிட்ட அப்படி நீங்க சொல்லலாம்..??"

"உன்னை எப்படியாவது கல்யாணம் செய்துக்கணும்னு எனக்கு ஆசை குறிஞ்சி..!! அப்பாவை சமாதானம் செய்து சம்மதிக்க வைக்க முடியும்னு நெனைச்சேன்.. கடைசில சண்டை போட வேண்டியாதா போயிடுச்சு..!! அப்பா இந்த மாதிரி செய்வார்னு.."

தீர்த்தபதி சொல்லிக் கொண்டிருக்கும்போதே, குறிஞ்சி சரக்கென முகத்தை திருப்பி அவனை பார்த்தாள்.. அவனுடைய கண்களை தனது கண்களால் கூர்மையாக சந்தித்தவாறே இறுக்கமான குரலில் சொன்னாள்..!!

"வேற என்ன செய்வார்னு எதிர்பார்த்திங்க..?? உங்க அப்பாவை பத்தி உங்களை விட எனக்கு நல்லா தெரியும்..!!" என்றவள் சற்றே நிறுத்தி,

"புரியுதா..??" என்று அழுத்தமாக கேட்டாள்.

[Image: krr1.jpg]

வார்த்தைகளில் வெளிப்படாத ஒருவகை அர்த்தம்.. குறிஞ்சியின் அந்த கூர்மையான பார்வையில் வெளிப்பட்டது..!! தீர்த்தபதியாலும் அந்த அர்த்தத்தை ஓரளவுக்கு புரிந்து கொள்ள முடிந்தது.. அவனையும் அறியாமல் அவனது தலை கவிழ்ந்துகொண்டது.. இப்போது சற்றே கம்மலான குரலில் சொன்னான்..!!

"மன்னிச்சுடு குறிஞ்சி.. இப்படி ஆகும்னு நான் எதிர்பாக்கல..!!"

"ப்ச்.. தப்பு பண்ணிட்டிங்க.. பெரிய தப்பு பண்ணிட்டிங்க..!!"

சலிப்பாக சொன்ன குறிஞ்சி, அந்த தகரப்பெட்டியில் தொடர்ந்து எதையோ தேடினாள்.. பிறகு மரத்தாலான அந்த சிறிய பெட்டியை உள்ளிருந்து வெளியே எடுத்தாள்.. சிறுக சிறுக சேர்த்த சில நகைகள் அடங்கிய பெட்டி..!! பச்சை நிறத்தாலான ஒரு துணியை கட்டிலில் விரித்து, அதன் மையமாக அந்த பெட்டியை வைத்தாள்.. கூரையில் தொங்கிய பானைக்குள் கைவிட்டு பணமுடிப்பை வெளியே எடுத்தாள்.. கொடியில் தொங்கிய சில உடைகளை அள்ளிக்கொண்டாள்..!! அவ்வளவையும் அந்த பச்சைத்துணியால் சுற்றி சிறு மூட்டையாக்கினாள்.. முதுகுக்கு குறுக்காக அந்த மூட்டையை அணிந்துகொண்டாள்..!!
Like Reply


Messages In This Thread
RE: screw driver ஸ்டோரீஸ் - by johnypowas - 20-02-2019, 12:44 PM



Users browsing this thread: 10 Guest(s)