07-05-2020, 12:16 PM
ராஜி குளித்து விட்டு சுடிதார் அணிந்து தலையை துவட்டி கொண்டிருந்தாள். மீராவிற்கு அவளிடம் கேட்டு விட நாக்கு துடித்து கொண்டிருந்தது. கட்டுப்படுத்தி கொண்டு ராசியை பார்த்து கொண்டிருந்தாள்.
மீரா தன்னையே பார்த்து கொண்டிருப்பதை பார்த்த ராஜி அவளிடம் என்ன அப்படி பார்க்குற என்றாள்.
“ உன் முகத்துல கல்யாண கலை தெரியுது அதான் பார்த்தேன். “
( என்ன இவ கரெக்டா சொல்றா. நாம ஓவரா நடிச்சிட்டோமோ. )
“ எ. எ, என்ன சொல்ற மீரா. “
“ இல்ல கழுத்துல புதுசா செயின்லா போட்ருக்க. அதை பார்த்தா புதுசா கல்யாணம் ஆன பொண்ணு மாதிரி இருக்க. “
“ செயினா என் கழுத்துலையா. எங்க இருக்கு. “
( “ ராஜி தான் கழுத்தில் செயின் தெரிகிறதா என்று பார்த்தாள். இல்லையே பாத்ரூமில் வைத்து எல்லாம் சரியாக இருக்கிறதா என்று செரிபர்த்து தானே வெளிய வந்தேன். இவ எந்த செயினை சொல்றா. “ )
இந்த செயினை தான் சொல்றேன். தனது போனை எடுத்து நேற்று எடுத்த போட்டோவை காண்பித்தாள்.
“ இது இது . இல்ல. உனக்கு. “” ராசிக்கு வாய் குழறியது.
“ ராஜி ரிலாக்ஸ். நீயே சொல்லு ராஜி. உனக்கு கல்யாணம் ஆகிடுச்சு. உன் கழுத்துல தாலி செயின் இருக்கு. இதை ஏன் என்கிட்டே நீ முன்னாடியே சொல்லல. இதை மறைக்கிற அளவுக்கு அப்படி நீ என்ன தப்பு பண்ணின. “
“ இல்ல மீரா அது வந்து. நான் தப்பு. பன் ன ல. . நா “
“ ராஜி ஒரு பிரெண்டா உன் நல்லதுக்காக தான் நான் கேக்குறேன். சொல்லு ராஜி. “
ராஜிக்கு கண்ணீர் திரண்டு வந்தது. அவள் மேலும் ஒரு வார்த்தை கூறினால் உடைந்து அழுது விடுவாள் என்ற நிலைமையில் இருந்தாள்.
“ உனக்கு கல்யாணம் ஆகியும் நீ இன்னும் கார்திக்க நினைச்சிட்டு இருக்குற அளவுக்கு நீ மோசமான பொண்ணு கிடையாது. ஆனா யாருக்கும் தெரியாம இந்த கல்யாணம் ஏன். என்ன நடந்துச்சு. யாரு உன் ஹஸ்பன்ட். “
“ மீரா. நிறுத்து. “ ராஜி கண்ணீர் விட்டு கதறினாள்.
“ ராஜி அழாத ராஜி. ப்ளீஸ் ராஜி.”. அவள் அருகில் சென்று அவள் கைகளை பிடித்து கொண்டாள்.
“ மீரா என் நிலைமை யாருக்கும் வர கூடாது மீரா. என்னோட கஷ்டத்தை யார்கிட்டயும் சொல்ல முடியாம நான் படுற அவஸ்தை எனக்கு தான் தெரியும். நான் உன்கிட்ட எல்லா உண்மையும் சொல்றேன்,. ஆனா நீ எனக்கு அதுக்கு முன்னாடி ஒரு சத்தியம் பண்ணனும். நீ இதை யார்கிட்டையுன் சொல்ல மாட்டேன்னு. “
“ சத்தியமா சொல்ல மாட்டேன் ராஜி. என்ன நம்பி நீ சொல்லலாம். “
“ எனக்கும் கார்த்திக்கும் கல்யாணம் ஆகிடுச்சு. “
“ என்னது கார்த்திக் கூடவா. நீ என்ன சொல்ற ராஜி. “
“ ஆமா மீரா கார்த்திக் தான் என்னோட ஹஸ்பன்ட். “
“ அப்போ ஏன் ரெண்டு பேரும் இதை மறைச்சீங்க. அந்த அலையன்ஸ் ஏன் பார்க்க போன. நீ ஏன் இன்னும் என்கூட இருக்க. உங்க வீட்ல இதெல்லாம் தெரியுமா. “
“ சொல்றேன் மீரா. “ ராஜி நடந்தவற்றை ஒவ்வொன்றாக சொல்ல மீரவிருக்கு இப்போது தான் புரிந்தது.
“ சரி மீரா என்ன இருந்தாலும் அவன் தான உனக்கு தாலி கட்டிருக்கான். அவன் கூடதான நீ இருக்கணும். அவன் நல்லவனா இருக்குறதுக்கு ஏன் உன்ன கஷ்டபடுத்தனும். என்ன ஜென்மமோ அவன் எல்லாம். சாடிஸ்ட். “
“ இல்ல மீரா அவன் மேல தப்பு இல்ல. அவனுக்கு இதுல துளியும் விருப்பம் இல்ல, இப்போ வரைக்கும். இதுல அவனை குறை சொல்லி என்ன பிரயோஜனம். “
“ அப்போ ஏன் ராஜி அவனுக்காக இவ்ளோ கஷ்டபடுற நீ. “
“ லவ். அவன் மேல நான் வச்சிருக்குற உண்மையான காதல். இன்னைக்கு இல்லாட்டாலும் அவன்கூட ஒரு நாள் என் வாழ்க்கை சந்தோசமா இருக்கும் மீரா. “
“ ராஜி முதல்ல நீ உங்க அத்தைகிட்ட சொல்லி சீக்கிரமா இதுக்கு ஒரு முடிவு கட்டு. “
“ யாரையும் போர்ஸ் பண்ணியோ, பிளாக்மெயில் பண்ணியோ லவ் பண்ண வைக்க முடியாது. அவனுக்கும் ஒரு நாள் லவ் வரும். அது வரைக்கும் நான் எந்த கஷ்டத்தை வேணும்னாலும் தாங்கிகிடுவேன். “
“ ராஜி உன்ன நினைச்சா எனக்கு பாவமா இருக்கு. நீ என்ன முடிவு எடுத்தாலும் நான் அதுக்கு சப்போர்ட்டா இருப்பேன். நீ தைரியமா இரு. எல்லாம் மாறும். “
“ நானும் அந்த நம்பிக்கைல தான் இருக்கேன். “
“ என்ன மன்னிச்சிடு ராஜி. நான் தேவை இல்லாம உன்ன கஸ்டபடுத்திட்டேன்.உன்ன தப்பா வேற பேசிட்டேன். சாரி ராஜி. “
“ நான் தான் உனக்கு தேங்க்ஸ் சொல்லணும். என்னோட கஷ்டத்தை யாரிடமாவது சொல்லி அழணும் போல இருந்துச்சு. இப்போ அழுதுட்டேன். இனி நிம்மதியா இருப்பேன். ஆனா நீ எனக்கு பண்ணின சத்தியத்தை மறந்துடாத. இந்த விஷயம் உன்னையும் என்னையும் தவிர யாருக்கும் தரிய கூடாது. “
“ சரி ராஜி. லேட் ஆகிடுச்சு. சீக்கிரம் ஆபிஸ் கிளம்பலாம் வா. “
இருவரும் சாப்பிட்டு விட்டு ஆபிஸ் கிளம்பி செல்ல காலை வேலைகள் பரபரப்பாக சென்று கொண்டிருந்தது. இடைவேளை நேரத்தில் மீராவும் அரவிந்து எதிர் எதிர் டேபிளில் அமர்ந்திருக்க அரவிந்த் மீராவிடம் கேட்டான்.
“ என்ன சொல்ற மீரா. அவுங்க ரெண்டு பேருக்கும் நடுவுல இவ்ளோ விஷயம் நடந்துருக்கா. என்னால நம்பவே முடியல. “
“ ஆமா அரவிந்த். உனக்கு இந்த விஷயம் தெரிஞ்ச மாதிரி காட்டிக்காத. அவுங்க ரெண்டு பேரயும் நாம தான் எதாச்சும் பண்ணி சேர்த்து வைக்கணும். “
“ நீ சொல்ற மாதிரி நாம சேர்த்து வைக்க ட்ரை பண்ணலாம் தான். ஆனா ஒருத்தர் மட்டும் லவ் பண்ணி என்ன பண்றது. கார்திக்க எப்படி லவ் பண்ண வைக்கிறது. அவன்தான் எந்த பொன்னையும் மதிக்கிறது இல்லையே.”
“ இல்ல அரவிந்த் அவனுக்கு ஈகோ தான். மற்றபடி அவன் கேரக்ட்டர்லா நல்லா தான் இருக்கு. “
“ இப்போ என்ன பண்ணனும்னு சொல்ற மீரா. “
“ அவன் நடிக்கிறான்னு நான் நினைக்கிறேன். ஒன்னு பண்ணுவோம். “ ஏற்ன்று தன்னுடைய பிளானை அரவிந்திடம் சொன்னாள் மீரா.
“ மீரா இது சரி வருமா. “
“ வரும் டா. நாம ட்ரை பண்ணி பார்க்கலாம். “
“ ம்ம்ம்ம்ம்ம். சரி நான் பண்றேன். தப்பா எதுவும் நடக்காம இருந்தா சரி தான். “
“ நீ பண்ணு அரவிந்த் சக்செஸ் ஆகும் . “
பேசியபடி இருவரும் கேபின் சென்றனர். மீரா ராஜியிடம் சென்று ராஜி உன் போன கொஞ்சம் கொடேன். என்னோட போன்ல பேக் முடிஞ்சிச்சு. ஆபிஸ் விட்டு போனது தான் பண்ணனும். வீட்ல நைட் கிளபுற விஷயத்தை சொல்லணும் என்றாள்.
அரவிந்த் கார்த்திக் கேபிணிற்கு சென்று அதே பொய்யை சொல்லி கார்த்திக்கின் போனை வாங்கினான்.
திட்டமிட்டபடி ராஜியின் போனில் இருந்து கார்த்திக் நம்பருக்கு மெசேஜ் செய்தாள்.
“ உங்களுக்காக டேரேசில் காத்திருக்கிறேன். உங்களிடம் பேச வேண்டும். நீங்கள் வரவில்லை என்றாள் சத்தியமா மாடில இருந்து குதிச்சிடுவேன். “மெசேஜ் டைப் செய்து அனுப்பினாள்.
கார்த்திக்கின் போனில் இருந்து ராஜியின் நம்பெருக்கு அரவிந்த் மெசேஜ் செய்தேன்.
“ ராஜி எல்லாத்துக்கும் சாரி. உங்கிட்ட நான் கொஞ்சம் பேசணும். நீ என்ன கட்டிபிடிச்சி எனக்கு முத்தம் கொடுத்தா உனக்கு சம்மதம்னு நான் புரிஞ்சிகிட்டு நாம புது வாழ்க்கைய ஆரம்பிக்கலாம். உனக்க காத்திருப்பேன். “
கார்த்திக்கின் போனில் இருந்து ராஜி நம்பருக்கு மெசேஜ் செய்தான்.
அனுப்பி விட்டு கார்த்திக்கிடம் போனை கொடுத்தான்.
மீரா மெசேஜ் வந்தவுடன் ராஜியிடம் போனை கொடுத்து விட்டு ராஜி மெசேஜ் வந்த மாதிரி இருந்துச்சு என்று சொல்லி விட்டு ஒன்றும் தெரியாததை போல வேலைய பார்க்க தொடங்கினாள்.
ராஜி மெசேஜை பார்த்து விட்டு மீராவிடம் சிரித்த முகமாக “ ஹே மீரா. ஒரு குட் நியூஸ் டி. “
“ என்ன ராஜி.”
“ அவன் தான் மெசேஜ் பண்ணிருக்கான். நான் ஒரு இடத்துக்கு போறேன். போயிட்டு வந்து நான் அந்த விஷயத்தை சொல்றேன்” என்று சொல்லி விட்டு வேகமாக எழுந்து ஆபிஸ் டெரேசிற்கு ஓடினாள்.
கார்த்திக் எதேச்சையாக தனது போனை பார்க்க அதி இருந்த மெசேஜ் எடுத்து படித்தான்.
“ ச்சை இவள் என்ன லூசா. “ ராஜி சீட்டை நோக்கி பார்க்க அவள் இல்லாததை கண்டு வேகமாக எழுந்தான்.
இதை பார்த்து கொண்டிருந்த மீராவும் அரவிந்தும் பிளான் சக்சஸ் என்று தம்சப் செய்து கொண்டு அவர்களை பின் தொடர்ந்தனர்.
கார்த்திக் வேகமாக மொட்டை மாடி நோக்கி செல்ல அங்கு ராஜி அவனுக்காக காத்து கொண்டிருந்தாள். பின்னால் வந்த மீராவும் அரவிந்தும் அவர்களுக்கு தெரியாத வண்ணம் மறைந்து கொள்ள, ராஜி சிரித்த முகத்துடன் வேகமாக ஓடி வந்து கார்த்திக்கை கட்டி பிடித்து அவன் உதட்டில் முத்தம் இட்டாள்.
இதை சற்றும் எதிர் பார்க்காத கார்த்திக் “ ஏய் ச்சீ. “ என்று அவளை தள்ளி விட்டு அவள் கன்னத்தில் பளார் என்று ஒரு அரை விட்டான்.
இதை சற்றும் எதிர் பாராத ராஜி கன்னத்தில் கை வைத்து கொண்டு அவனை மலங்க மலங்க பார்த்தாள்.
மீராவிற்கும் அரவிந்திற்கும் இது சற்று அதிர்ச்சியாக இருந்தது. மீரா அவர்களிடம் செல்ல நகர அரவிந்த் அவள் கையை பிடித்து தடுத்தான்.
“ உனக்கு ஒரு தடவை சொன்னா புரியாது. ஏன் இப்படி உடம்பு அரிப்பு பிடிச்சி அலையுற. அப்படித்தானே அலையுவேன்னா வேற யாரையாச்சும் போய் கட்டி பிடிக்க வேண்டியது தான. எதுக்கு லவ்வு லவ்வுன்னு என் உயிரை போட்டு வாங்குற. உன்கிட்ட பேச பிடிக்காம தான அமைதியா பேசாம இருக்கேன். திரும்ப திரும்ப வந்து உரசிட்டு இருக்க. “
கோவத்தில் ஒரு பெண்ணை பார்த்து சொல்ல கூடாத வார்த்தைகளை வீசினான். அவளிடம் சொல்லி விட்டு பாக்கெட்டில் இருந்த சிகரட்டை எடுத்து வாயில் வைத்து பற்ற வைத்தான். வேக வேகமாக இழுத்து கொண்டிருந்தான்.
ராஜி அவன் கூறிய வார்த்தையை கேட்டு கன்னத்தை பிடித்து கொண்டு கன்னத்தில் வழிந்த கண்ணீரை துடைத்தாள். தலை இருட்டி கொண்டு வந்தது. அவன் கூறிய வார்த்தைகளை கேட்டு உடல் நடுங்கியது. அழுத முகத்துடன் கூறினாள்.
“ என்ன வார்த்தை சொன்னீங்க. நான் அரிப்பு எடுத்தவளா. உங்கள உருகி உருகி காதலிச்சிட்டு உங்களுக்காக எல்லாத்தியும் மறைச்சிகிட்டு மெல்லவும் முடியாம முழுங்கவும் முடியாம எல்லாத்தையும் தாங்கிட்டு இருந்தேன்ல.என் தப்பு தான். இனிமே இந்த அரிப்பு எடுத்தவ உங்க கிட்ட வர மாட்டா. நீங்க சொன்னதனால தான் நான் பண்ணேன். சத்தியமா நானா இப்படி பண்ணனும்னு இங்க வரல. உங்க மெசேஜ் பார்த்து தான் நான் இங்க வந்தேன். ஆனா இங்க வந்த அப்றம் தான் உங்களோட கேரேக்ட்டர் என்னனு எனக்கு புரிஞ்சுது. இனி நான் உங்க உயிரை வாங்க மாட்டேன். உங்க நிழலை கூட நெருங்க மாட்டேன். நான் போறேன். “ அவன் முகத்தை கூட பார்க்காமல் திரும்பி நின்று சொல்லி விட்டு அழுத முகத்துடன் நடந்தாள்.
கார்த்திக் அவள் கூறியவற்றை கண்டு கொள்ளாமல் திரும்பி நின்று சிகரெட்டை இழுத்தான். தனது போனை எடுத்து பார்க்க அதில் ராஜியின் மெசேஜ் இருந்தது. அவள் கூறியது போல எந்த மெசேஜும் தன்னிடம் இருந்து செல்லவில்லை. சிகரெட் புகை உள்ளே செல்ல அவனது கோபம் பதட்டம் தணிந்து நார்மல் ஆக தான் கூறிய வார்த்தை அவளை எவ்வளவு காயபடுத்தி இருக்கும் என்பதை அப்போது தான் உணர்ந்தான்.
மீண்டும் வேகமாக இழுத்தான். பஞ்சு வரை சென்று விட உதறி விட்டு மீண்டும் இன்னொரு சிகரெட்டை எடுத்து பற்ற வைத்தான். மீண்டும் ராஜி திரும்பி வந்து அவனிடம் “ தயவு செஞ்சி இனிமே சிகரெட் குடிக்காதீங்க. உங்களுக்கு மனசு தான் இல்ல. ஆனா இதயம் இருக்கு, உங்கள நம்பி உலகமே தெரியாம நீங்க தான் உலகம்னு அழகான ஒரு குடும்பம் இருக்கு. மறந்துடாதீங்க. “ சொல்லி விட்டு விறு விறுவென அங்கிருந்த கண்ணீரை துடைத்து கொண்டு சென்றாள்.
அவள் படிக்கட்டு அருகில் செல்ல அங்கு மீராவும் அரவிந்தும் நின்று கொண்டிருந்தனர். ராஜி இருவரையும் பார்க்க இருவரும் பேசாமல் அவளையே பார்த்து கொண்டிருந்தனர்,
“ ராஜி நான். “
மீரா கன்னத்தில் பளார் என்று ஒரு அரை விட்டு அங்கிருந்து சென்றாள்.
மீரா அழுது கொண்டிருக்க அரவிந்த் அவளிடம் “ நீ போய் வேலைய பாரு. ராஜிய கொஞ்ச நேரம் தனியா விடு. அவகிட்ட இப்போ எதுவும் பேச வேண்டாம். போ “ என்று சொல்லி அனுப்பி வைத்தான்.