காதல் கிறுக்கனின் கிறுக்கல்கள்(completed)
#47
என் மனைவி பிரசவிக்க உள்ள இருக்க, நானோ அவளது கண்ணீரின் ஈரத்தில் கைகளை பிசைந்த மாதிரியே வெளியே குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தேன். எனது அம்மா சொன்ன வார்த்தைகள் நூற்றுக்கு நூறு உண்மை, அவளுக்கு என்னிடம் எது பிடித்ததோ தெரியவில்லை, என் மேல் உயிரையே வைத்திருக்கிறாள். இந்த நிமிடங்கள் வரை எனது மனதில் எதோ ஒரு ஓரத்தில் கலா இருந்திருந்தாள். ஆனால் இந்த நிமிடம் முழுவதும் பவானியே என்னுள் வசிக்கிறாள்.

ஒவ்வொரு ஆடவனுக்கும் அவனது மனைவி உணவு உண்ணாமல் காத்திருக்கிறாள் என்றாலே, ஒரு பொருப்புடன்கூடிய கவலை வரும் அந்த அக்கறையே காதலின் வெளிப்பாட்டை அதிகரிக்கும், ஆனால் இங்கே இவள் என்ன ஒரு காரியம் செய்திருந்தால். எனக்காகவல்லவோ அப்படி ஒரு வலியையும் பொறுத்திருந்தாள். அவள் வெளியே வந்த உடன் முத்தங்களால் அவளை முழுவதுமாக நனைக்க வேண்டும். மேலும் ஏதேதோ கற்பனை கோட்டை கட்டி கொண்டிருந்தேன். அவள் உள்ளே சென்று ஒரு மணி நேரம் கடந்திருந்தது. எனக்கு ஒரு பிரசவத்திற்கு எவ்வளவு நேரம் ஆகும் என்று தெரியாது. ஆனாலும் அந்த ஒரு மணி நேரம் என்னமோ அதிக நேரம் ஆனா மாதிரி தோன்றியது. நானும் பயத்திலும், குழப்பத்திலும் என்னுடைய அம்மாவிடம் கேட்டேன்.

அவளோ என்னை எள்ளி நகையாடிய படியே 'எம்மா வீட்டம்மா மேல எவ்வளவு அக்கறைன்னு பாரேன், இவ்வளவு அக்கறை இருந்திருந்தா கொஞ்சம் சீக்கிரமா வந்திருக்கணும்' என்று என்னை மேலும் குழப்பினால்.

நான் வந்த கோபத்தில் அவளை முறைத்த படியே 'எவ்வளவு நேரம் ஆகுனு கேட்ட சொல்லேன், ஏன் என்னை போட்டு இப்படி வதைகுறீங்க'. என்று சற்று கோபமாகவே கேட்டேன்.

நான் கூறியதை கேட்டு கொண்டிருந்த எனது மாமியார் என்னிடம் வந்து 'என்ன மாப்புள்ள ஆச்சு, அவளுக்கு ஒன்னு ஆகாது, சாதாரணமா எப்படியும் 40 நிமிடத்திற்கு மேல் ஆகும். எப்படியும் அவள் கொஞ்ச நேரத்துல்ல உங்களை மாதிரியே ஒரு அழகான பையனை பெற்று உங்க கைல கொடுக்க போறா அது வரைக்கும் நீங்க அங்க போய் உட்காருங்க என்று எனக்கு சமாதனம் கூறிய படி நான் அமர வேண்டிய இடத்தை காட்டினாள்.
Like Reply


Messages In This Thread
RE: காதல் கிறுக்கனின் கிறுக்கல்கள் - by johnypowas - 20-02-2019, 11:46 AM



Users browsing this thread: 11 Guest(s)