20-02-2019, 11:39 AM
சத்யனுக்கு அவள் என்ன சொல்கிறாள் என்று புரிந்தாலும் அடுத்து என்ன பேசுவது என்று தெரியாமல் மவுனமாக இருக்க...
அவனின் மவுனத்தை தவறாக கணித்த மான்சி அவன் முகத்தை நேராக திரும்பி பார்த்து
“ ஏன் நான் கொண்டு வந்தா சாப்பிட மாட்டிங்களா... என் அம்மா ஐஞ்சு நாளைக்கு வரமாட்டாங்க நான்தான் சமையல் செய்து எடுத்துட்டு வருவேன் ” என்று படபடவென கூற
“என்ன அப்படி சொல்லிட்டீங்க மொதல்ல சாப்பாட்டை எடுத்துவைங்க எனக்கு பயங்கர பசி நான் கைகழுவிட்டு வர்றேன்” என்று புன்னகையுடன் இயல்பாக சத்யன் கூறியதும்
மான்சியும் பதிலுக்கு புன்னகைத்து “ ம் எடுத்து வக்கிறேன் நீங்க போய் கைகழுவிவிட்டு வாங்க ” என்று உணவுகளை தட்டில் எடுத்து வைக்க
சத்யன் மெதுவாக கைகளை ஊன்றி சிரமமாக எழுந்திரிக்க முயற்சிக்க... காலையிலிருந்து ஒரே நிலையில் படுத்திருந்ததால் கைகால்களை சட்டென அசைக்க முடியாமல் தடுமாறினான்
ச்சே மான்சிக்கு முன்பு இதென்னடா சங்கடம் என்று நினைத்த சத்யன் தரையில் கைகளை அழுத்தமாக ஊன்றி எழ நினைக்க ... அப்போது மான்சி அவன் கையை தன் கைகளால் வலுவாக பற்றி அவனை தூக்கி எழுப்பினாள்
சத்யனுக்கு அந்த நிலை சங்கடமாக இருந்தாலும்... அவன் மேல் வானத்து தேவதைகள் வாசனை மிகுந்த மலர்களை வாரியிறைத்து வாழ்த்து பாடினர்
அதுவரை இருந்த உடல் சோர்வு மனத்தளர்ச்சி அனைத்தும் பறந்து போக... தான் அன்றுதான் புதிதாய் பிறந்தது போல் உணர்ந்தான்
தனது மிச்ச வாழ்நாளை யாருக்காவது தாரைவார்த்து கொடுத்துவிட்டு... இவளின் கையை பிடித்துக்கொண்டே உயிரை விட்டுவிடலாமா என்று நினைத்தான்
மனமேயில்லாமல் அவள் கையை விலக்கி விட்டு மெதுவாக போய் கைகழுவிவிட்டு வந்த சத்யன் சாப்பிட தட்டின் முன் அமர்ந்தான்
மான்சி அவனுக்கு கவனமாக உணவு பரிமாற ... அவன் தட்டில் என்ன இல்லை என்பதை உடனுக்குடன் பார்த்து அவன் கேட்கும் முன்பே பரிமாறினாள்
சத்யன் எதுவுமே சொல்லாமல் அவள் வைத்ததையெல்லாம் அவளை அடிக்கடி நிமிர்ந்து பார்த்துக்கொண்டே சீக்கிரமாக சாப்பிட்டுவிட
மான்சி எல்லவற்றையும் எடுத்து டேபிளில் வைத்துவிட்டு “நான் இன்னும் கொஞ்சநேரம் கழிச்சு வர்றேன் நீங்க நல்லா தூங்குங்க” என்று கூறிவிட்டு தன் வீட்டுக்கு கிளம்பிவிட்டாள்
சத்யன் தன் வாழ்நாளின் உணவு மொத்தத்தையும் இன்றே சாப்பிட முடியவில்லையே என்று வருந்தினான்
மான்சி அவள் வீட்டுக்கு போனதும் சத்யனின் நன்பர்கள் சிலர் அவனை பார்க்க வந்தனர்.
சத்யன் அவர்களிடம் தனது ஆபிஸ் பொறுப்புகள் சிலவற்றை தற்காலிகமாக ஒப்படைத்து அவர்களிடம் விளக்கம் சொல்லி அனுப்பினான்
சத்யன் மனதில் ஆயிரம் கனவுகள் மற்றும் ஏக்கங்களுடனும் இரவு எப்போது வரும் என்று காத்திருந்தான்.... அப்போது தானே மான்சி வருவாள்
அவன் காத்திருப்பை பொய்யாக்காமல் மான்சி இரவு உணவை எடுத்துக்கொண்டு தன் அப்பா பரணியுடன் வந்தாள்
சத்யன் பரணியை பார்த்ததும் தனது பார்வையை மான்சியின் பக்கம் திருப்பாமல் கண்ணியம் காக்க... பரணி இயல்பாக சத்யனுடன் பேசினார்
“என்ன சத்யன் இன்னிக்கு மதியம் உங்க பிரண்ட்ஸ் வந்தாங்களாமே காஞ்சனா சொன்னா” என பரணி கேட்டதும்
தன்னருகில் அமர்ந்து கீழே கிடந்த நியூஸ் பேப்பர்களை சேகரித்து கொண்டிருந்த மான்சியின் உடலிலிருந்து வந்த ஒருவித மனோகரமான மயக்கம் வாசனையில் தன்னை மறந்து கண்மூடியிருந்த சத்யன் பரணி சொன்னது காதில் விழமால் இருக்க
“என்ன சத்யன் ஏதாவது பலத்த யோசனையா” என்று பரணி மறுபடியும் கேட்க
திடுக்கிட்டாற்ப் போல் கண்விழித்த சத்யன் “என்ன சார் கேட்டீங்க” என்றான்
“இல்ல மதியம் உங்க பிரண்ட்ஸ் வந்தாங்களான்னு கேட்டேன்.... நீங்க தூங்கிகிட்டு இருந்தீர்களா சத்யன்” என பரணி கூறியதும்
சத்யன் லேசாக அசடு வழிய அவசரமாக மறுத்து “ இல்ல அங்கிள் நான் தூங்கலை சும்மா கண்மூடியிருந்தேன் அவ்வளவுதான்...என்றவன்
“ ம் பிரண்ட்ஸ் வந்தாங்க அங்கிள் ஆபிஸ வேலை சம்மந்தமாக பேச நான்தான் வரச்சொல்லியிருந்தேன்... அதான் பேசிட்டு உடனே போய்ட்டாங்க”....
“ம் ஆபிஸில் கொஞ்சம் கவணம் செலுத்துங்க சத்யன் அதுதான் உங்கள் உழைப்பு” என சத்யன் கூற
“சரிங்க அங்கிள் அப்புறம் சவி என்ன பண்றா அங்கிள் ஆறுநாளா அவளை பார்க்காம ரொம்ப கஷடமா இருக்கு... எப்போ எனக்கு சரியாகும்ன்னு தெரியலை ” என்று சத்யன் சலிப்பாக சொல்ல
“ அவ அங்கே உங்களுக்கு மேல தவிச்சுக்கிட்டு இருக்கா... இப்பக்கூட என்னை அங்கிள் கிட்ட கூட்டிட்டு போம்மான்னு ஒரே பிடிவாதம்” என்று சொன்னது மான்சிதான்
சத்யனுக்கு தன் உடலும் மனமும் அந்தரத்தில் பறப்பது போல் இருந்தது ... பின்னே மான்சியல்லவா அவனுக்கு பதில் சொன்னாள்
அவனுக்கு தன்னை பற்றி நினைக்கவே ஆச்சிரியமாக இருந்தது... சிலநாட்களுக்கு முன்புவரை இவள் யாரென்று தெரியாது... ஆனால் இப்போது என் உயிர்த்துடிப்பதே இவளுக்காத்தான்... இரவு தூங்கி காலையில் கண்விழிப்பதே இவளை காணத்தான் என்றுணர்ந்தான்