20-02-2019, 11:38 AM
எல்லாமே என் மான்சி - அத்தியாயம் - 3
அன்று காலையில் காஞ்சனா கொடுத்த இரண்டு இட்லியை கஷ்டப்பட்டு விழுங்கிவிட்டு சோர்வுடன் சத்யன் படுத்துவிட்டான்
நல்ல உறக்கத்தில் தன்னருகில் ஒரு வித்தியாசமான வாசனையை உணர்ந்து சத்யன் சட்டென கண்விழித்து பார்த்தான் .. அவன் கண்களையே நம்பமுடியாமல் மறுபடியும் கண்களை அழுத்தமாக மூடி திறந்தான்
மான்சிதான் அவனருகே மண்டியிட்டு அமர்ந்து தன் கையி்ல் இருந்த உணவுகளை கவனமாக கீழே வைத்துகொண்டிருந்தாள்...
சத்யனுக்கு இப்போது நீ பார்ப்பது உன்மைதான் என்று அவன் கண்கள் உணர்த்தியது... சத்யனுக்கு அவள் வாசனையும் அவள் அருகாமையும் ஒரு ஏகாந்த நிலையை ஏற்படுத்தியது
அந்த ஏகாந்தத்தை மறுபடியும் தனது கண்களை மூடி அனுபவித்த சத்யன்... எங்கே தான் கண்களை மூடியிருக்கும் சமயத்தில் அவள் கனவுபோல் கலைந்துபோய் விடுவாளோ என்ற பயத்தில் பட்டென கண்களை திறக்க
அப்போது மான்சியும் அவனைத்தான் பார்த்து கொண்டிருந்தாள்... அவன் கண்விழித்து தன்னை பார்த்ததும் அவசரமாக பார்வையை வேறு பக்கம் திருப்பிக்கொண்டாள்
“ அம்மா சாப்பாடு கொடுத்தனுப்பினாங்க எழுந்து கை கழுவிட்டு சாப்பிட வாங்க” என்று மான்சி வேறு பக்கம் திரும்பிக்கொண்டே மெதுவாக சொல்ல
அந்த தேன் குரல் சத்யனின் காதுகள் வழியாக இறங்கி அவன் மனதுடன் ரகசிய ஒப்பந்தம் செய்தது.. இனி என் குரலை நீ அடிக்கடி கேட்கலாம் என்றுதான் ஒப்பந்தம் செய்தது
சத்யனுக்கு அவள் தன்னை முதன்முதலாக நேரில் அருகில் சந்திக்கும் போது தான் இந்த நிலைமையில் இருக்கிறோமே என்று வருத்தமா இருந்தது
அய்யோ ரொம்ப நேரமாக எதுவும் பேசாமல் அவளையே பார்த்துக்கொண்டு இருக்கிறோமே அவள என்ன நினைப்பாள்.. அவளுக்கு ஏதாவது பதில் சொல்லவேண்டும் என்ற எண்ணம் வர
“ ஏன் எப்பவுமே ஆன்ட்டி தானே எடுத்துட்டு வருவாங்க... அவங்களுக்கு என்னாச்சு” என்று திரும்பியிருந்த அவளின் பக்கவாட்டு முகத்தை பார்த்து ரசித்துக்கொண்டே சத்யன் கேட்க
சிறிதுநேரம் மவுனமாக இருந்த மான்சி பிறகு “ அம்மா வரக்கூடாது அதனாலதான் என்கிட்ட சாப்பாடு குடுத்தனுப்பினாங்க” என்றாள்