20-02-2019, 11:36 AM
சிறிதுநேரத்தில் பரணியும் அவர் மனைவி காஞ்சனாவும் வந்து சத்யனை பார்த்தனர்
“ஆமாங்க அம்மைதான் போட்டுருக்கு ஆனா சின்னம்மைதான் ஒருவாரம் பத்துநாள்ல சரியாயிடும்... நீங்க போய் நம்ம வீட்ல இருந்து நல்லா சலவை பண்ணதா உங்க வேட்டி ரெண்டு எடுத்துட்டு வாங்க... நான் இவரு படுக்க ஏற்பாடு பண்றேன்” என காஞ்சனா வேகமாக கூற
பரணி உடனே தன் வீட்டுக்கு போய் இரண்டு வேட்டியை எடுத்துக்கொண்டு வர அதில் ஒன்றை சத்யனை இடுப்பில் கட்டிக்கொள்ள சொல்லிவிட்டு ... மற்றொன்றை தரையில் விரித்து படுக்க வைத்தனர்
“ நீங்க போன் பண்ணி உங்க ஆபிஸ்க்கு லீவு சொல்லிட்டு இங்கேயே இவரை பார்த்துக்கங்க.. அப்படியே வாட்ச்மேன் கிட்ட சொல்லி கொஞ்சம் வேப்பிலை எடுத்துட்டு வரச்சொல்லுங்க... நான் போய் இவருக்கு சாப்பிட கஞ்சி வச்சு எடுத்துட்டு வர்றேன்” என்று காஞ்சனா வெளியே போக
தரையில் வேட்டியை விரித்து படுத்திருந்த சத்யன் “ என்னால உங்களுக்கு ரொம்ப சிரமம் சார்” என்று சோகமாய் முறுவலிக்க
"என்ன சத்யன் இப்படி சொல்றீங்க எனக்கு ஒன்னுன்னா நீங்க பாத்துக்க மாட்டிங்களா" என்ற பரணி தன் செல்லை எடுத்து உயிர்பித்து தனது அலுவலகத்தை தொடர்புகொண்டு தனது விடுமுறையை கூறிவிட்டு ... மறுபடியும் கால் செய்து கீழே இருந்த வாட்ச்மேனிடம் கொஞ்சம் வேப்பிலை எடுத்து வருமாறு கூறினார்
சத்யனுக்கு பரணீதரனை பார்க்கும்போது தனது தாயாரே மறு உருவில் வந்தது போல் இருந்தது
சத்யன் தனது ஆபிஸ்க்கு போன் செய்து தன் நிலைமையை சொல்ல .... அவர்கள் எல்லாவற்றையும் தாங்களே பார்த்து கொள்வதாகவும் அவனை நன்றாக ஓய்வெடுக்கம் படி கூறினர்
வாட்ச்மேன் வேப்பிலை எடுத்து வர அதை சத்யனின் தலைக்கு அடியில் வைத்தார் பரணி... சத்யனின் சிவந்த முகம் இப்போது ரத்தச்சிவப்பாக மாறியிருந்தது.... கண்களை முடிக்கொண்டு படுத்திருந்தான் சத்யன்
காஞ்சனா சத்யனுக்கு கஞ்சி வைத்து எடுத்து வந்து டேபிளில் வைத்துவிட்டு வீட்டை சுத்தம் செய்தாள் அவளுடன் பரணியும் சேர்ந்து எல்லாவற்றையும் சுத்தமாக்கி ஒதுங்க வைத்தார் ...
அதையெல்லாம் பார்த்து சத்யனுக்கு சங்கடமாக இருந்தது “ அய்யோ அங்கிள் நீங்க ஏன் அதையெல்லாம் பண்றீங்க இன்னும் கொஞ்சநேரத்தில் வேலைக்காரம்மா வந்துடுவாங்க ஆன்ட்டி” என்று சத்யன் மெதுவான குரலில் கூற
அவன் கூறியதை காதில் வாங்காமல் தம்பதிகள் இருவரும் எல்லாவற்றையும் முடித்துவிட்டு கைகால்களை கழுவிக்கொண்டு வந்தனர்..
பரணி கஞ்சியை எடுத்துவந்து சத்யன் முன்னால் வைக்க காஞ்சனா அதை ஒரு சிறிய கிண்ணத்தில் ஊற்றி சத்யனிடம் கொடுத்தாள்
சத்யன் மறுக்காமல் வாங்கி குடித்துவிட்டு “ ரொம்ப நன்றி ஆன்ட்டி” என்று நெகிழ்ந்து போய் சொல்ல
“ மொதல்ல இப்படி நன்றி சொல்லறதை விடுங்க சத்யன் ... இந்தமாதிரியான ஒருத்தருக்கொருத்தர் உதவி செய்துக்கனும் இல்லேன்னா அப்புறமா நாமெல்லாம் மனுஷனா பொறந்து என்ன பிரயோஜனம் சத்யன்... நீங்க எந்த சங்கடமும் இல்லாம இயல்பா இருங்க அதுபோதும்” என பரணி சத்யனை அதட்டினார்
“ நீங்க இவர் கூடவே இருந்து பார்த்துக்கங்க நான் போய் மத்தியம் சமையலை பார்கிறேன்... இவருக்கு சரியாகிற வரைக்கும் ஹோட்டல் சாப்பாடே குடுக்ககூடாது அதனால நான் காரம் இல்லாம சமையல் செய்து எடுத்துட்டு வர்றேன் ” என்று சொல்லிவிட்டு காஞ்சனா போய்விட
“ அங்கிள் எனக்கு சரியாகிற வரைக்கும் நான் உங்கவீட்டு சாப்பாடே சாப்பிடுறேன்... ஆனா நீங்க நாளையில இருந்து வேலைக்கு போங்க நான் தனியா இருந்துக்குவேன் அதான் ஆன்ட்டி எதிர் வீட்டில் இருக்காங்களே” என்று சத்யன் வற்புறுத்தி சொல்ல
“ சரி சத்யன் அதை நாளைக்கு பார்க்கலாம் இப்போ நீங்க நல்லா தூங்குங்க” என்று பரணி ஒரே வார்த்தையில் கூறிவிட்டு நியூஸ் பேப்பரில் தனது கவனத்தை செலுத்தினார்
அதன்பிறகு வந்த இரண்டு நாட்களும் பரணியும் காஞ்சனாவும் சத்யனை கவனமாக பார்த்து கொண்டனர்...
அம்மை தொற்று என்பதால் சத்யன் பிடிவாதமாக சைந்தவியை இங்கே அழைத்து வரக்கூடாது என்று சொல்லிவிட்டான்
ஆனால் சத்யன்தான் காய்சலும் பலகீனமும் அதிகமாக எழுந்து உட்கார கூட மிகவும் சிரமப்பட்டான்....
மாலை வேளைகளில் காஞ்சனா குளித்துவிட்டு சத்யன் வீட்டுக்கு வந்து விளக்கேற்றி வைத்துவிட்டு சில சாமி பாடல்களை பாடினாள்
சத்யனுக்கு உடல் உபாதைகள் ஒருபக்கம் என்றாலும் மான்சியை பார்த்து இன்றோடு நாலுநாள் ஆயிருச்சே என்று வருத்தம்தான் அதிகமாக இருந்தது....
அன்று காலையில் அவள் வேலைக்கு போகும் நேரத்தில் மெதுவாக எழுந்து பால்கனிக்கு வந்து பார்த்தான் ஆனால் நீண்ட நேரமாகியும் அவள் வரவில்லை ... சத்யன் ஏமாற்றத்துடன் வந்து படுத்துக்கொண்டான்
நான்காவது நாள் பரணியின் ஆபிஸில் செக்கியூரிட்டி சம்மந்தமாக முக்கியமான மீட்டிங் என்பதால் லீவு கிடைக்காமல் பரணி ஆபிஸ்க்கு கிளம்பிவிட்டார்... சத்யனிடம் வந்து சொல்லிவிட்டுதான் போனார்