Fantasy எதிர்பாராதது எதிர்பாருங்கள் (Completed)
#93
13

"ஆர்த்தி ?" யாரென அடையாளம் புரியாமல் விழித்தேன். 

"நிஜமாவே என்னைத் தெரியலையா ? நான் சுந்தர் அவங்க பொண்ணு, பெருந்துறைல என்ஜினியரிங் பண்ணிட்டு இருந்தேனே, ஃபைனல் செம் முடிஞ்சு இப்ப தான் 10 நாளாச்சு"

" ஓ, ஆர்த்தியா பேரு"

"என் பேரு கூட தெரியாதா உங்களுக்கு?? " சற்றே ஏமாற்றத்துடன் கேட்ட மாதிரி தோணியது.

"உன்னை அதிகம் பார்த்ததே இல்லை, அப்புறம் எப்படி"

"நான் உங்களை ஒரு நூறு தரமாது பார்த்திருப்பேன், தம்பி கூட அடிக்கடி டவுட்டு கேக்க வருவேன் அப்பொலாம், நீங்க இங்க படிச்சிட்டு இருந்தீங்க"

சுரேஷ் உடன் அவன் அக்கா வருவாள், அவளின் முகம் கூட எனக்கு ஞாபகம் இல்லை, அவளை அதிகம் கவனித்தது இல்லை, அப்போது ஒரே படிப்ஸ் ஆக இருந்தேன் போல, இல்லை நான்கைந்து வருடம் முன்பு இவள் இவ்வளவு அழகாக இருந்தது இல்லையோ... எப்படியோ இவளை எனக்கு ஞாபகம் இல்லை.

"ஏய், அப்படியே இருந்தாலும் நூறு தரம் லாம் இருக்காது, ஒரு நாலு அஞ்சு தரம் இருக்கும், அப்போலாம் உன் முகம் இவ்வளவு அழகா இல்லைனு நினைக்கிறேன்" என்றேன் சிரித்தபடி.

லேசான வெட்கத்தோடு " ஹலோ, அது அஞ்சு வருசம் முன்ன, இப்போ நீங்க டெல்லி போன பின்ன லீவுல வரப்ப எல்லாம், உங்க அக்கா கல்யாண சமயத்துல, இப்போ போன தீபாவளி அப்போ கூட உங்க வீட்டிலே வந்து நிறைய தரம்."

"ஆனா நான் உன்னைப் பார்க்கவே இல்லை யே"

"ஆர்த்தி, யாரும்மா" என அவள் அம்மாவின் குரல் கேட்டது.

"பிளீஸ் உள்ள வாங்க" என்றாள் ஆர்த்தி.

அதற்குள் அவள் அம்மா ஹாலுக்கு வந்தவள் முகம் நிறைய புன்னகையுடன் "வாங்க தம்பி சார், வாங்க வாங்க" என்றாள். ஏனோ அவளின் முகம், புன்னகை பார்க்க எனக்கு கடுப்பாக இருந்தது.

ஆர்த்தி அப்பா சுந்தர் சாரும் கூட என்னை தம்பி சார் என தான் கூப்பிடுவார், அது சங்கடமாக இருந்தாலும் போலியாக தோணாது. ஆனால் இவள் கூப்பிடும் போது வெகு செயற்கையாக தோணியது.

"உக்காருங்க தம்பி சார், எப்போ வந்தீங்க" 

"காலைல தான், சும்மா ஸ்வீட் கொடுக்க வந்தேன்" என பாக்ஸை நீட்டினேன்.

"இது உங்க வீடு தம்பி சார், எப்போ வேணாலும் வரலாம், காபி சாப்பிடுங்க" என்று இளித்தாள்.

"இல்ல வேணாம்"

"முதல் தரம் வந்திருக்கீங்க, சாப்பிடுங்க"

"கொஞ்சமா, எங்கே சுரேஷை காணோம்??"

"காலைல சாப்பிட்டுட்டு வெளியே போனவன் தான் இன்னும் வரல, 
காலேஜ் போனதில் இருந்து வீடு தங்குறதே இல்ல, வெளியே சுத்துவான், வீட்டுக்கு வந்தா புக்கை எடுத்துட்டு படிக்கிறேண்டு மாடிக்கு போயிடுவான், நீங்க கொஞ்சம் கண்டிச்சு அட்வைஸ் பண்ணுங்க தம்பி சார்"

"கண்டிப்பா, அவன் வந்ததும் என்னை வந்து பார்க்க சொல்லுங்க"

அவள் காபி போட உள்ளே சென்றாள், ஆர்த்தி எதிரே நின்று என்னைப் பார்த்துக் கொண்டிருந்தாள், அவளை எதிரில் உக்காரச் சொன்னேன், தலையசைத்து மறுத்தாள். சில நிமிடங்களில் உள்ளே சென்று காபி கொண்டு வந்தாள். 

"தம்பி சார், உங்க கம்பெனில, இல்லை உங்களுக்கு தெரிஞ்ச கம்பெனில கோயம்புத்தூர் பக்கம் நல்ல ஜாப் இருந்தா சொல்லுங்க இவளுக்கு"

"ஏன் கேம்பஸ் இன்டர்வியூ எதுவும் இல்லையா" என ஆர்த்தியைப் பார்த்து கேட்டேன்.

"இல்லை, காலேஜில் ரெண்டு மூணு சின்ன கம்பனி வந்தது. ஒரு ஆஃபர் பெங்களூரு இருக்கு"

உண்மை தான். என் ஞாபகம் சரியென்றால் அப்பா தான் இந்த பெருந்துறை காலேஜில் சீட் வாங்கித் தந்தார், சமூக டிரஸ்ட், ஸ்காலர்ஷிப், டிஸ்கவுண்ட் என கிட்டத்தட்ட படிப்பு இலவசம். என்ன காலேஜ் சுமார்.

"ரெஸ்யூம் கொடு, பார்த்து சொல்றேன்"

கொடுத்தாள், மிகவும் பேசிக் பார்மட் மிக சுமாராக இருந்தது.

"சரி, நான் சொல்றேன்" என ஆர்த்தியை பார்த்து சொன்னேன்.

"தம்பி சார், சாப்பிட்டு போலாம் சார், உருண்டைக் குழம்பு, பருப்பு உசிலி" என அவள் அம்மா இளித்தபடி கேட்டாள். 

"இல்லை, நான் வரேன், சுரேஷ் வந்தா என்னை பார்க்க சொல்லுங்க" என்றபடி எழுந்தேன்.

ஆர்த்தி வாசல் வரை வந்தாள், வெளியே வராண்டா வந்ததும் திரும்பி அவளைப் பார்த்து தலையசைத்தேன். புன்னகைத்தாள், மிகவும் நெருக்கமாக உணர வைத்த புன்னகை, உதடுகள் மட்டுமல்ல கண்களாலும் புன்னகைக்க முடியும் என்பதை நேரில் உணர்ந்தேன்.

வீட்டுக்கு வந்து அம்மாவைப் பார்த்தேன். நல்ல உறக்கத்தில் இருந்தாள், கிச்சனில் பார்த்தேன், லஞ்ச் காலையிலேயே தயார் செய்தது இருந்தது. பிரச்சினை இல்லை.

ஹாலில் வந்து அமர்ந்து ஃபோனில் இருந்த அனைத்து வீடியோக்கள், இமேஜ்கள் என் லேப்டாப் மாற்றினேன். முதல் 2 நாள்கள் சாதாரண flirt video பார்த்தாயிற்று. அதற்கு அடுத்த வீடியோ பார்க்க ஆரம்பித்தேன்.
[+] 7 users Like nathan19's post
Like Reply


Messages In This Thread
RE: எதிர்பாராதது எதிர்பாருங்கள் - by nathan19 - 04-05-2020, 11:59 AM



Users browsing this thread: 21 Guest(s)