19-02-2019, 09:44 AM
உனக்கு எதுக்கு கோவம் வரவேணும்? நான் பிறகு இன்னுமொண்டு கொணந்து தந்தனான் தானே? நீ தானே வேண்டாம் எண்டுவிட்டுப் போய் விட்டாய்?"
"ஆனால்.. அது எப்படி என்னட்டை இருந்து வாங்கி அவக்கிட்டை குடுக்கலாம். அதாலதான்..?" சின்னப் பிள்ளைத்தனமாய் இருந்தது அவளது வாதம்.
"சரி விடு. இதைச்சொல்லத்தான் கூப்பிட்டியா? ரஞ்சன் எங்க போனான்?"
"ரஞ்சன்தான் எங்களை முன்னால போகச்சொன்னான். தான் பின்னால வாறன் எண்டவன்." பொய் சொன்னாள்.
"ஓ.. நீ எதோ கேக்கவேணும் எண்டு சொன்னனீ எண்டெல்லோ சொன்னவன்." கேட்டேவிட்டான். இனித் தப்பிக்க முடியாதே. அவனை மாட்டிவிட வந்து இப்போது அவள் நல்லா மாட்டுப்பட்டதுபோல் உணர்ந்தாள். இவன் சரியான வாய் வித்தைக்காரன். எதைச்சொன்னாலுமே கடைசியில அதை எங்களுக்கே எதிராய்த் திருப்பிவிடக்கூடியவன். கொஞ்சம் எச்சரிக்கையைத்தான் கேக்கவேணும்.
"அது வந்து.. தாகமாய் இருக்கு கொஞ்சம் ஏதாச்சும் குடிச்சிட்டு கதைக்கலாமே?"
இருவரும் அருகிலிருந்த Management Faculty கண்டீனை நோக்கிப் போவதை பின்னாலிருந்து பார்த்துக்கொண்டிருந்த உஷாவும் ரஞ்சனும் தமக்குள் சிரித்துக்கொண்டார்கள்.
*****