Romance "அவள்" ஒரு தொடர் கதை ... :
#13
"நீ எதோ கதைக்க வேண்டும் எண்டு சொன்னனீ எண்டு ரஞ்சன் சொன்னான்." கடுகடுன்னு அவன் குரல் பயமுறுத்தியது.

"அது வந்து..." இதுவரை இருந்த தைரியம், கோபம் எல்லாம் காத்தோட போய் தொண்டை வரண்டது.

"என்ன கெதியா சொல்லு, நான் விளையாடப் போகணும். பாதில விட்டிட்டு வந்திருக்கு." தொனியில் சிறிதும் மாற்றமில்லாது. இவனுக்கு இதயமே இரும்பிலதான் செய்துவச்சிருக்குதோ? எப்படி இவ்வளவு  கறாராய்ப் பேசுகிறான்? தப்புப் பண்ணின இவனுக்கே இப்படி எண்டா எனக்கு எவ்வளவு இருக்கவேணும்.


"ஒண்டு சொல்லுவன். கோபப்படக் கூடாது." தைரியத்தை வரவழைத்துக்கொண்டு ஒருவாறு சொல்லிவிட்டு ஓரக்கண்ணால் ஏதாவது வித்தியாசம் தெரிகிறதா எண்டு பார்த்தாள். உண்மைதான் தலைக்குப் பின் ஒரு சிறிய ஒளிவட்டம் தோன்றி இருந்தது.

"அது நீ என்ன சொல்லுகிறாய் எண்டதைப் பொறுத்து." இந்த விதண்டாவாதம் அவன் கூடவே பிறந்தது போல. ஆனாலும் குரல் கொஞ்சம் இளகியிருந்தது.

"நீங்க தந்த மியூசிக் CD உடைஞ்சு போட்டுது." வேண்டுமென்றே சீண்டிவிட்டுப் பார்த்தல் அவள் எதிர்பார்த்தது போலவே அந்த ஒளிவட்டம் போய் முகம் மீண்டும் கடுகடுன்னு ஆகிவிட்டிருந்தது.


அது இசைஞானி இளையராஜாவின் இசைத் தொகுப்பு, தரும்போதே எதோ தன்ர காதலியின் முதல் பரிசை கடன் கேட்டமாதிரி நிறையவே தயங்கிப் பிறகு நூறுவாட்டி பத்திரம் சொல்லித்தான் தந்திருந்தான். இப்போது இப்படி உடைத்துவிட்டு வந்தால் கோபம்வராதா என்ன. ஆனால் அவள் நினைத்ததுபோல் அவனொன்றும் வசைமாரி பொழியவில்லை. மாறாக கடும் யோசனையில் ஆழ்ந்திருந்தான். இப்போது அந்த CD எப்படி உடைந்ததென்று சொல்லியே ஆகவேண்டும், இல்லாவிட்டால் அவளின் தலை வெடித்துவிடும்.


"உங்களால்தான் அது உடைந்தது."

'எப்படி?' அவன் கேட்கவில்லை. ஆனால் புருவநெரிசல் சொல்லியது.

"அன்னிக்கு எனக்கு ஐஸ்கிரீம் கொண்டுவந்து தந்துவிட்டு, பிறகு ஏன் வாங்கி அவவுக்கு குடுத்தனீங்க?" படபடவேண்டு பொரிந்ததால் மூச்சு முட்டியது. சிறிது நிறுத்தி,

"அதுதான் எனக்கு கோவம் வந்து bagஐ தூக்கி போட்டனான் எல்லே. அப்பத்தான் உடைஞ்சு இருக்கவேணும். பிறகு வீட்டை கொண்டுபோய் பார்த்தபோதுதான் தெரிந்தது. ஆனால் உங்களிட்டை எப்படி சொல்றது எண்டு பயத்தில சொல்லவில்லை." பரிதாமாய்ப் பார்த்த அவளை திட்டுவதுக்குப் பதிலாய் விழுந்து விழுந்து சிரித்தான். இப்போது அவள் புரியாமல் விழித்தாள்.
Like Reply


Messages In This Thread
RE: "அவள்" ஒரு தொடர் கதை ... : - by johnypowas - 19-02-2019, 09:42 AM



Users browsing this thread: 2 Guest(s)