19-02-2019, 09:41 AM
பாகம் ஐந்து : தயக்கம்
இப்ப கொஞ்சநாளாய் தினமும் விரிவிரை முடிந்ததும் சிலமணிநேரம் Arts Faculty Gymல போய் பாட்மிண்டன் விளையாடுவது வழக்கம். இன்றும் அப்படித்தான் 'டபுள்ஸ்' விளையாடிக் கொண்டிருந்தனர். ஆனால் நண்பர்களின் கேலி கிண்டல் இன்றைக்கு வழக்கத்துக்கு மாறாய் புதிதாய் இருந்தது. அவன் அடித்த டாஷ் கோட்டுக்கு வெளியே போய் விழுந்தபோது,
"டேய் அவளண்ட மூஞ்சிய பாத்துக்கொண்டு அடிக்காம பூவப் பாத்து அடிடா.." நண்பர்களின் கிண்டல் தாங்காமலோ என்னமோ கொஞ்ச நேரத்தில் அவன் தலை இடிப்பதாய் சொல்லிவிட்டு இளைப்பாறப் போய்விட்டன். அவளும் உஷாவும் தொடர்ந்து விளையாடிக்கொண்டிருந்தனர். ஒரு பத்து நிமிஷம் கூட முடிஞ்சிருக்காது,
"தா.. நான் விளையாடப் போறன். நீ போய் இரு." என்று அவளிடம் Racketஐ பறிக்கும் போது அவன் கரம் வேண்டுமென்றே அவளின் கையை இறுகப் பற்றியது. உஷாவைப் பார்த்தாள்.
"போய் இரு, கொஞ்சநேரத்தில வாறன்." என்றாள் மெல்லிய புன்னகையையுடன். அங்கு இருக்கப் பிடிக்காமல் கான்டீன் போய் உட்கார்ந்தாள்.
"என்ன பொறாமையா இருக்கா?" கேட்டது ரஞ்சன்தான்.
"இவ்வளவு நேரமும் எங்க போயிருந்தநீ?"
"ஏன் என்னாச்சு?"
"என்ன ஆகணும்? நான் அவனோட தனிய கதைச்சே ஆகணும். இன்னிக்கே இப்பவே."
"இன்னும் கொஞ்சநாள் வெயிட் பண்ணு நான் எல்லாம் சரிபண்ணிடுரன்"
"நீ ஒண்டும் பண்ண வேண்டாம். அவனை இப்ப வரச்சொல்லுரியா இல்லை நான் போகட்டா?"
"சரி நீ போ.. நான் அனுப்பிவிடுறன்."
எங்கே போவது? எழுந்து கான்டீன் ஓரமாய் மெதுவாய் நடந்தாள்.