19-02-2019, 09:20 AM
ஒவ்வொரு முறையும் ஆணை பிறப்பிக்க வேண்டுமா ? உயர்நீதிமன்றம் காட்டம்..
சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி அவர்கள் சென்னை நகரத்தில் ஆங்காங்கே அத்துமீறி வைக்கப்படுகின்ற பேனர்களை அகற்றுவது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் மனு அளித்தார்.
இந்நிலையில் இதுகுறித்து உயர்நீதிமன்றம் கூறுகையில், தேவையின்றி அத்துமீறி வைக்கப்படும் பேனர்களை அகற்ற எட்டு ஆண்டுகளுக்கு முன்னே ஆணை பிறப்பித்துவிட்டதாகவும், மீண்டும் ஒவ்வொரு முறையும் ஆணை பிறப்பிக்க வேண்டுமா என்றும் கேள்வி எழுப்பியுள்ளது.
இது குறித்து அதிகாரிகள் என்ன நடவடிக்கை எடுத்துள்ளார்கள், அவர்கள் அத்துமீறி வைக்கப்பட்டுள்ள பேனர்களை கவனிக்காமல் ஹெலிகாப்டரிலே செல்கிறார்கள் என்றும் வினைவியுள்ளது.