Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
பாகிஸ்தானுக்கு ஆதரவளித்தாரா ப்ரியங்கா? – அம்பலமாகிய உண்மைகள்

[Image: priyanka-gandhi.jpg]

காங்கிரஸும், ப்ரியங்கா காந்தியும் பாகிஸ்தானுக்கு ஆதரவாக நடந்துகொள்வதாக கூறி வலதுசாரிகள் பரப்பிய செய்தி பொய்யென தெரியவந்துள்ளது.
இந்திய கட்டுப்பாட்டு காஷ்மீரில் அமைந்துள்ள புல்வாமாவில் திங்கட்கிழமை நான்கு இந்திய பாதுகாப்பு வீரர்கள் மரணித்த பின்பு #PakistanAndCongress என்கிற ஹாஷ்டேக் டிவிட்டரில் டிரண்டாகியது.
பாகிஸ்தானிடம் மிகவும் மென்மையாக நடந்து கொள்வதாக பல வலதுசாரி சமூக ஊடக குழுக்கள் காங்கிரஸை குற்றஞ்சாட்டின.
சமூக ஊடகங்களான டிவிட்டர், ஃபேஸ்புக் மற்றும் ஷேர் சேட்டில் #PakistanAndCongress என்ற ஹாஷ்டாகுடன் கருத்துகள் பகிரப்பட்டன.
பழைய புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் இதற்காக பயன்படுத்தப்பட்டன. ஆனால், எங்களது விசாராணையில் இந்த ஹாஷ்டேகில் பகிரப்பட்ட பல கருத்துகள் பொய் என தெரியவந்துள்ளது.
Like Reply


Messages In This Thread
RE: கரண்ட் affairs தமிழில் - by johnypowas - 19-02-2019, 09:18 AM



Users browsing this thread: 7 Guest(s)