19-02-2019, 09:17 AM
பாகிஸ்தான் மருமகளை நீக்க வேண்டும்! பாஜக எம்.எல்.ஏ.!!
![[Image: sania-mirza-2.jpg]](https://www.sathiyam.tv/wp-content/uploads/2019/02/sania-mirza-2.jpg)
![[Image: sania-mirza-2.jpg]](https://www.sathiyam.tv/wp-content/uploads/2019/02/sania-mirza-2.jpg)
புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், பிரபலங்கள் தங்களின் கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர்.
டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா கருத்து எதுவும் தெரிவிக்காமல் இருந்தார். இதை சமூகவலைத் தளங்களில் சிலர் விமர்சித்தனர். இதனையடுத்து, டுவிட்டரில் அவர் கருத்து தெரிவித்தார்.
இந்நிலையில் அம்மாநில பாஜக எம்எல்ஏ ராஜா ரெட்டி, செய்தியாளர்களிடம் கூறும்போது,
“புல்வாமாவில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் நமது வீரர்கள் உயிரிழந்துள்ள நிலையில் தெலங்கானா மாநில முதலமைச்சர் தனது பிறந்த நாளை கொண்டாட வேண்டாம் என அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. பாகிஸ்தான் மருமகளான டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவை, தெலங்கானா மாநில விளம்பர தூதர் பதவியில் இருந்து மாநில அரசு உடனடியாக நீக்க வேண்டும்” என்றார்.
இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.