எல்லாவற்றிக்கும் அன்பு தான் காரணம்
Rainbow 
பூஜா வேகமா ராஜா அறைக்குள் நுழைந்து ராஜாவை எழுப்பினாள் 

ராஜா அரை தூக்கத்தில் பூஜாவை பார்த்துட்டு மீண்டும் கண்ணை மூடும் போது 

பதறிட்டு எழுந்தேன்.  என்னாச்சிடா நான் கேட்க

பூஜா அழ ஆரம்பித்தாள். அண்ண சீக்கிரம் வாண்ணா ஆஸ்பத்திரிக்கு சொல்ல

நான் உடனே எழுந்து பாத்ரூம் போயிட்டு பேண்ட் சர்ட் போட்டுக்கிட்டு அறையை விட்டு கீழே போனேன் 

அங்கேயே அம்மா இன்னும் நின்னு கொண்டிருக்க 

எனக்கு தயக்கமா இருந்தது. ஆனால் அவசரத்திற்க்கு கேட்டு தான் ஆகனும் 

அப்பாவேட கிரெடிட் கார்ட் வேணும் நான் கேட்க

அம்மா யோசிக்கவில்லை. ஏன் கேள்வி கேட்கவில்லை. உடனே அறைக்குள் போயி கிரெடிட் கார்டை எடுத்துட்டு வந்து கொடுக்க 

நானும் பூஜாவும் கிளம்பினோம் 

பூஜா வந்த ஆட்டோவிலேயே நானும் ஏறினேன். இருவரும் ஆஸ்பத்திரி போனேம்

அம்மா அப்பிடியே வாசலை பார்த்தப்படியே சோபாவில் உட்காந்து கொண்டாள் 

இதுவரை தனது பிள்ளைகளை தேடி வீடு வரை வந்தில்லை. தனது பிள்ளைகள் பலரை நட்பு என்று கூடிட்டு வந்து அறிமுகம் படுத்தியுள்ளார்கள் 

ஆனால் அவர்கள் யாருமே அவசர தேவை உதவினு வீட்டுக்கு வந்தில்லை 

முதல் முறையாக தனது பிள்ளையை தேடி உதவினு வந்ததை கவனித்தாள் அம்மா 

தன் மீது கோபம் இருந்தாலும் அவசரம்னு அப்பாவேட கார்டை கேட்டது சரி. இல்லை அவங்களுக்கு அவசரத்திற்க்கு உதவி செய்ய முடியாம போயிருக்கும் 

என்று யோசித்து கொண்டிருக்கும் போது அப்பா அறையை விட்டு ஜாக்கிங் போவதற்கு வெளியே வந்தார் 

என்னடி எப்ப பார்த்தாலும் ஹாலில் உட்காந்து யேசித்துவிட்டு இருக்கியே அப்பா கேட்க

அம்மா முறைத்துவிட்டு சற்று முன் நடந்ததை கூற 

இதில என்னடி குழப்பம் உனக்கு. அப்போது இருந்து யார் எப்ப உதவி கேட்டாலும் அவன் யோசிக்காம உதவி செய்யிறது சின்னவன் தான் 

நீ தேவையில்லாம குழம்பாதே சொல்லிட்டு அப்பா ஜாக்கிங் போனார் 

நானும் பூஜாவும் ஆஸ்பத்திரிக்குள் போனேம் 

அவசர சிகிச்சை பிரிவில் அவள் அம்மாவுக்கு இதய வலி அதிகரித்தால் டாக்டார்கள் பரிசோதித்து கொண்டிருக்க 

நானும் பூஜாவும் வெளியே நிக்க 

பூஜா என் கையை இறுக்கி பிடித்து கொண்டு என் தோளில் சாய்ந்து அழுது கொண்டிருந்தாள்

பத்து நிமிடத்தில் டாக்டார் வெளியே வந்தாங்க

நான் விசாரிக்க. இப்போதைக்கு எதுவுமே சொல்லமுடியாது.  மதியத்திற்க்கு பின் தெரியும் சொல்லிட்டு டாக்டார் போனாங்க 

நானும் பூஜாவும் சேரில் உட்காந்து கொண்டேம் 

பூஜாவை சாமாதனம் பண்ணிட்டு முன்பணம் கட்டிட்டு வந்தேன்

சாரி அண்ண.  உன்னைய கூப்பிட்டு தொந்தரவு பண்ணிட்டேல.  எனக்கு வேற யாரையும் தெரியாது அதனால தான் உன்க்கிட்ட உதவி கேட்டேன் பூஜா சொல்ல

எனக்கு தொந்தரவு இல்லை. என் தங்கைக்கு தானே எந்த பிர்ச்சினை இல்லை. நீ கவலைப்படாதே நான் சொல்ல

பூஜா அப்பிடியே என் மடியில் தலை வைத்து தூங்க. நான் சுவற்றில் சாய்ந்து தூங்கினேன் 

காலை 9 மணியளவில் அனைவரும் சாப்பிட்டு முடிக்க.  அம்மா அவசரமா அப்பாவை பார்க்க அறைக்குள் போக 

என்னடி இவ்வளவு அவசரமா வர.  என்னாச்சி அப்பா கேட்க

காலையில வெளியே போன சின்னவனை இன்னும் காணேம் என்னாச்சு தெரியல. அதான் அம்மா சொல்ல

பயப்படாத நான் கொஞ்ச நேரத்திற்க்கு முன்னாடி தான் பேனில் பேசினேன் 

எந்த ஆஸ்பத்திரி தெரிஞ்சுகிட்டேன். நேரில் பார்த்து பேசிட்டு அப்பிடியே ஆபிஸ்க்கு போறேன்.  உனக்கு மதியம் தகவல் சொல்லுறேன் அப்பா சொல்லிட்டு கிளம்பினார் 

காலை பத்து மணியளவில் ஆஸ்பத்திரிக்குள் நுழைந்தார் அப்பா 

நேராக அவசர சிகிச்சை பிரிவுக்கு போனார் 

அங்கேயே வாசலில் நானும் பூஜாவும் இருந்தோம் 

என்னாடா ஆச்சினு என்னிடம் கேட்க

நான் டாக்டர் சொன்னாதை சொன்னேன் 

சரி நீ சாப்பிட்டியானு அப்பா சொல்ல

நான் சாப்பிட்டேன் சொல்வதற்குள் பூஜா இல்லை சொல்ல

வாடா என்னையும் பூஜாவையும் கூடிட்டு கேண்டீன் வந்தார் 

இருவரையும் சாப்பிட வைத்துவிட்டு கிளம்பினார் 

நான் கல்லூரிக்கு வேலை செய்யும் இடத்திற்க்கு இன்னிக்கு விடுமுறை சொன்னேன் 

அடுத்த இரண்டு நாளும் ஆஸ்பத்திரி கழிந்தது 

மூணாவது நாள் மதியம் பூஜா அம்மாவை வீட்டுக்கு கூடிட்டு போகலாம் டாக்டர் சொல்ல

நாங்களும் கிளம்பினோம். அப்போது அம்மாவும் அப்பாவும் வந்தாங்க

காரிலேயே அவங்கள கூடிட்டு அவங்க வீட்டில் விட்டுட்டு நாங்க வீட்டுக்கு வந்தோம் 

நான் வீட்டுக்குள் நுழைந்ததும்.

டோய் அவசரமா போவ.  இரண்டு நாளா ஆஸ்பத்திரி இருந்துட்டு குளிக்காம எங்க அங்க போற 

பின்னாடி போ. நான் வந்து சுடு நீரில் குளிப்பாட்டுறேன் அம்மா சொல்ல

நான் வேணாம் சொல்ல

அம்மாவும் முறைத்து கொண்டே போடா சொல்ல

நான் வேற வழியில்லாம தோட்டத்திற்க்கு போனேன்
#########
வாசகர்களுக்கு ஒர் வேண்டுகோள்

எனது கதை பகுதியில் யாரும் புகைப்பபடமே அல்லது வீடியோ பதிவுகள் லிங்க் போன்றவை பதிவிட. வேண்டாம். எனக்கு இது போன்ற பதிவுகளை விரும்பில்லை . வருத்தமளிக்கிறது வாசகர்களே

இனிமேல் இந்த போன்ற பதிவுகளை பதிவு செய்தால் நான் கதை எழுவதை நிறுத்தி விடுவோன்  . நன்றி.

[+] 5 users Like badboyz2017's post
Like Reply


Messages In This Thread
RE: எல்லாவற்றிக்கும் அன்பு தான் காரணம் - by badboyz2017 - 24-04-2020, 09:23 PM



Users browsing this thread: 23 Guest(s)