Adultery ஆண்மை எனப்படுவது யாதெனின்..!
28.

 
நீ இன்னும் இங்க என்ன செஞ்சிட்டிருக்க? இந்த ட்ரிப் முடிஞ்சு வரும் போது கிளம்பியிருக்கனும்னு சொன்னேன்ல?
 
கோபமாய் பேசிய சுந்தரை அலட்சியம் செய்தவாறு, தன் வேலையை செய்து கொண்டிருந்தாள் ஹாசிணி!
 
நான் பேசிட்டிருக்கேன்…
 
ஹலோ மாம்ஸ், நான் இங்கதான் வேலை செய்வேன்! உங்களுக்கு வேணும்ன்னா, நீங்க வேற கம்பெனி போயிக்கோங்க! சும்மா டிஸ்டர்ப் பண்ணிகிட்டு…
 
வாயடைத்து நின்றான் சுந்தர். என் கம்பெனியை விட்டு, என்னையே போகச் சொல்கிறாளே என்று..
 
வர வர உனக்கு வாய் ஓவராயிட்டே போகுது என்று அவள் தலையில் செல்லமாய் ஒரு குட்டு வைத்தான்!
 
ஆனா, கோவப்படுற மாதிரி உங்க ஆக்டிங், சகிக்கலை! தெலுங்கு படத்துல வர்ற மாதிரி, ஹை பிட்சுல கத்துனா, கோவம்னு நினைச்சுகிட்டிங்களா?

[Image: 14a263f9ea17305147c31fc46e059a00.jpg]

ஆக்டிங்னு தெரிஞ்சிடுச்சா?

 

பின்ன, அடுத்தவங்க முன்னாடி திட்டக் கூடாதுன்னு, அக்கவுண்டன்ட் போற வரைக்கும் வெயிட் பண்ணிட்டு வந்து திட்டுனா? அடுத்த தடவைனாச்சும் ஒழுங்கா நடிங்க!

 

ஆனா, நான் சொன்ன விஷயம் உண்மைதான் ஹாசிணி! நீ படிச்சது ஃபினான்ஸ்! அதுல உனக்கு நல்ல கேரியர் இருக்கு! கேம்பஸ்ல கிடைச்ச வேலையை விட்டுட்டு,  இங்க நீ எதையும் கத்துக்கவோ, சாதிக்கவோ முடியாது! அதுனாலத்தான் சொல்றேன்!

 

சொன்ன சுந்தரையே பார்த்துக் கொண்டிருந்தாள் ஹாசிணி!

 

எப்போதும் சுந்தர், அவளுக்கு ஹீரோதான்! தான் வந்த இந்தச் சில மாதங்களிலே, சுந்தரின் வளர்ச்சி எத்தகையது என்பதைக் கண்டிருந்தாள்!

 

கல்யாணமான புதிதில், சாதாரண ஹோல்சேலராக, வெறும் 3 பேரை கொண்டிருந்த நிறுவனத்தை, சில வருடங்களில், 100 பேர் கொண்ட எக்ஸ்போர்ட் நிறுவனமாக மாற்றியிருப்பதும், இப்பொது எடுத்திருக்கும் எக்ஸ்போர்ட் ஆர்டர்கள் சரியாகச் செல்லும் பட்சத்தில், இது இன்னும் பயங்கரமாக வளரும் என்பதிலேயே அவள் பிரமிப்பு அடைந்திருந்தாள்! இந்தச் சமயத்தில், தன்னைப் போன்ற மிக நம்பிக்கையான ஒரு ரிசோர்ஸ், சுந்தருக்கு எவ்வளவு முக்கியம் என்று அவளுக்கு நன்கு தெரியும்!

 

சுந்தர் தன் நிறுவனத்தை மிக ப்ரஃபசனலாக, சிஸ்டமேடிக்காக மாற்ற முயற்சித்துக் கொண்டிருந்தான். எக்ஸ்போர்ட் ஆர்டர் பிடிப்பது, அதை எக்சியூட் செய்து கொண்டு, இதையும் செய்வது அவனுக்கு மிகச் சிரமம். இந்த இடத்தில்தான் ஹாசிணி அவனுக்கு கிடைத்த மிகப் பெரிய உதவி! கூடவே, அவளுடைய ஃபினான்ஸ் நாலெட்ஜ், அவனுக்கு இன்னொரு வரம்! இன்னும் இரு மாதங்களில், நிறுவனம் முழுக்க சிஸ்டமேடிக்காக மாறுவது மட்டுமல்ல, அதன் வளர்ச்சியும் மிக அபரிதமாய் ஒருக்கும்! ஆனாலும், சுயலாபம் பார்க்காமல், தன்னுடைய கேரியருக்காக பார்க்கும் சுந்தரைக் கண்டு வியந்தாள் ஹாசிணி!

 

தன் அக்காவைக் கல்யாணம் செய்த சமயத்தில், ஹாசிணி, சுந்தரிடம் அதிகம் பேச மாட்டாள்! மத்திய தரக் குடும்பம் என்பதால் கண்டிப்பு, ரெண்டுங்கெட்டான் வயதுக்கான வெட்கம், +2க்காக வெறியாக படித்துக் கொண்டிருந்தது என அவள் அதிகம் பேசவில்லை!

 

சரியாக +2 பரிட்சையின் கடைசி நாளன்று, வீட்டுக்கு வரும்போது, ஹாசினியின் கூடப் படிக்கும் ஒருவன், அவள் கையில் லவ் லெட்டர் கொடுத்துச் சென்றான். அதிர்ச்சியில் திகைத்தவள், நேரடியாக வீட்டில் வந்து அதைக் காட்ட, ஹரிணி, உட்பட அவளது பெற்றோரும் அவளைக் கண்டபடி திட்டிக் கொண்டிருந்தச் சமயத்தில், சுந்தர் வீட்டிற்குள் நுழைந்தான்!

 

ஹாசினி அழுது கொண்டிருந்தாள்! சுந்தரைக் கண்டு, அவள் தந்தை அமைதியானாலும், அவளது தாயும், ஹரிணியும், மாறி மாறித் திட்டிக் கொண்டிருந்தார்கள்!

 

இவளால எங்க மானமே போச்சு மாப்ளை!

 

அம்மா இ… இல்லைம்மா!

 

பேசாதடி… பொண்ணா நீயெல்லாம்?! இந்த வயசுலியே உனக்கு லவ்வு கேக்குது…?

 

நான் என்ன சொல்ல வர்றேன்னு…

 

அடிங்…

 

கொஞ்சம் நிறுத்துறீங்களா? இப்டி ஒரு குடும்பத்துல பொண்ணு எடுத்ததுக்கு, நாந்தான் ஃபீல் பண்ணனும்!

 

மாப்ளை என்ன மாப்…

 

பின்ன இவ்ளோக் கேவலமானக் குடும்பம்னு தெரிஞ்சிருந்தா…

 

அவ்வளவு நேரம் அமைதியாய் இருந்த ஹாசிணியின் அப்பாவே கொஞ்சம் கோபமடைந்தார்!

 

மாப்ளை, அவசரப்பட்டு வார்த்தையை விடாதீங்க!

 

அப்ப நீங்க மட்டும் விடலாமா?

 

நாங்க என்ன….?

 

உங்களுக்கு மட்டும்தான் ரோஷம் இருக்குமா? உங்க பொண்ணுதானே ஹாசிணி?! அவளுக்கு இருக்காது? முதல்ல அவளைப் பேச விடுறீங்களா? இப்டி திட்டுறீங்க?

 

தன் குடும்பமே தன்னை நம்பாததில் திக்பிரம்மை பிடித்து நின்றிருந்தவள், பருவ வயதில், தன் மாமாவின் முன்னிலையில் திட்டு வாங்குவதில் இன்னும் அசிங்கமாய் உணர்ந்து கொண்டிருந்தவள், சுந்தரின் ஆரம்பப் பேச்சு தன்ன இன்னும் அசிங்கப்படுத்துவதாய் நினைத்தவள், தனக்கு ஆதரவாய் அவன் பேசிய தருணத்தில் புத்துணர்வு பெற்றாள்!

 

அமைதியாய் நடந்ததைச் சொன்னாள்!

 

அவன் திடீர்னு கொடுத்துட்டாம்மா! எனக்கு என்னப் பண்றதுன்னே…

 

கொடுத்தா அங்கியே கிழிச்சுப் போட வேண்டியதுதாண்டி?! அவன் கொடுத்தானாம், இவ வாங்கிட்டாளாம்?

 

கொஞ்சம் சும்மா இருங்கத்தை என்ற சுந்தர், நீ ஏன் கிழிச்சு போடலை ஹாசிணி? என்று கேட்டான்!

 
தனக்கு ஆதரவாய் பேசும் ஒரே ஆள் என்பதால், கண்களால் கெஞ்சியபடியேச் சொன்னாள்.

[Image: hqdefault.jpg]

எ…எனக்கு ஷாக் மாமா… எ… என்ன பண்றதுன்னே தெரியலை! அதுக்குள்ள அவன் போயிட்டான்! அதான்…

 

அதான் பத்திரப்படுத்து எடுத்து வந்தியாக்கும்? ஹசிணியின் அம்மா திட்டிக் கொண்டேயிருந்தாள்!    

 

இந்த லெட்டர் விஷயம் உங்க எல்லாருக்கும் எப்டி தெரியுங்கத்தை?

 

அவதான் வந்து காமிச்சா மாப்ளை!

 

காமிச்சுட்டு, அவனைத்தான் கட்டிக்குவேன்னு சொன்னாளா?

 

மாப்ளை?

 

கிளாஸ்மேட் திடீர்னு கொடுத்தப்ப ஷாக் ஆயிட்டா! என்ன பண்றதுன்னு தெரியாம, வீட்டுக்கு வந்து, உங்ககிட்ட காட்டி சஜசன் கேக்கலாம்னு நினைச்சிருக்கா! அதை முழுசாக் கேக்காம, அவளைப் புடிச்சு இப்டி திட்டிட்டு இருக்கீங்க? என்று திட்டியவன் திரும்பி ஹரிணியை கடுமையாய் திட்டினான்!

 

அவங்கதான் முந்தைய ஜெனரேஷன், எப்டி ஹேண்டில் செய்யனும்னு தெரியலை, உனக்கு வயசு கம்மிதானே, உன் தங்கச்சிதானே, நீ பக்குவமா ஹேண்டில் பண்ண மாட்ட? நீயெல்லாம் என்னத்தை படிச்சியோ?

 

இத்தனை தூரம் தான் திட்டிக் கொண்டிருந்தது போய், தான் திட்டு வாங்கியதால் அவமானமாய் உணர்ந்த ஹரிணி, பதில் கேள்வி கேட்டாள்!

 

அதெப்படி, அவ மேல தப்பில்லைன்னு உறுதியாச் சொல்றீங்க?

 

தப்பு பண்றவ, தானே வந்து, தனக்கு வந்த லவ் லெட்டரை வீட்லக் காட்ட மாட்டா! ஒளிச்சுதான் வெச்சிருப்பா! அந்த காமன் சென்ஸ் இல்லை உங்களுக்கு?

 

நான் உன்னைக் கல்யாணம் பண்ணி, இத்தனை நாளா பாக்குறேன்! என்கிட்டயே அளவாத்தான் பேசுறா! எல்லா நேரமும் படிப்பும் கையுமாத்தான் திரியுறா! இனிதான் அவளுக்கு லீவே ஆரம்பிக்குது! லவ்வரோட ஊர் சுத்தனும்ன்னா, இனிதான் இவளுக்கு சான்சே! அப்படி இருக்கிறப்ப, எதுக்கு உங்ககிட்ட வந்து சொல்லனும்? ம்ம்?

 

முதல்ல பெத்த பொண்ணு மேல நம்பிக்கை வேணும்! என்ன நடந்ததுன்னு கேக்கனும்! ஒரு வேளை ஹாசிணி அந்தப் பையனை லவ் பண்றேன்னு வந்து சொல்லியிருந்தாக் கூட, அவளை திட்டாம, அது ஏன் ஒத்து வராதுன்னு அமைதியா எடுத்துச் சொன்னாதான் அவளுக்கே புரியும்! சும்மா குடும்ப மானம், மண்ணாங்கட்டின்னு சொல்லிகிட்டு, பொண்ணோட வாழ்க்கைல விளையாடாதீங்க! என்றவன், ஹரிணியை நன்கு திட்டினான்!

சுந்தரின் பேச்சை முதலில் உணர்ந்தது, ஹாசினியின் தந்தைதான்! தவறை உணர்ந்தவர், ஹாசிணியை அணைத்துக் கொண்டார்!

 

சாரிடா குட்டி! தெரியாம திட்டிட்டோம்!

 

அவர் அணைத்த தருணத்தில், ஹாசிணி வெடித்து அழுதாள்!

 

தன் குடும்பம் கூட புரிந்து கொள்ளாத நிலையில், தன்னைப் புரிந்து, நம்பிக்கை வைத்த சுந்தர், அன்றிலிருந்து ஹாசிணியின் ஆதர்ச நாயகன் ஆனான்!

 

அடுத்த நாள், அவளே தேடிச் சென்று, மிக நெகிழ்வாய், அவனிடம் நன்றி சொன்னாள்! அவள் குடும்பத்தின் முன்னிலையில்…

 

ரொம்ப ரொம்ப தாங்க்ஸ் மாமா!

 

பார்ரா, சப்போர் பண்ணி பேசுனாத்தான், என்கிட்ட பேசுவ போல?! இத்தனை நாளா என்கிட்ட வந்து பேசியிருப்பியா?

 

அப்டியில்லை மாமா….

 

உன் தாங்சை அக்சப்ட் பண்ணிக்கனும்ன்னா ஒரு கண்டிஷன்!

 

என்ன மாமா!

 

இவ்ளோ பயந்தாங்கொள்ளியா இருந்தா, வாழ்க்கைல முன்னேற முடியாது ஹாசிணி! நேத்து நான் வந்து, உனக்காக பேசனும்னு இருந்திருக்கக் கூடாது! உன்மேல தப்பில்லைன்னா, நீ தைரியமா பேசியிருக்கனும்! அழுதுட்டு நிக்கக் கூடாது!

 

கரெக்ட்டுதான் மாமா!

 

நான் என்னச் சொன்னாலும் கேப்பியா?

 

கண்டிப்பாக் கேக்குறேன் மாமா!

 

அடுத்து காலேஜ், நீ என்ன படிக்கிறதாயிருந்தாலும் சரி, அதைச் சென்னைல வந்து படி!

 

நல்ல ஐடியாங்க! அத்தை கூட, ஹாசிணி சென்னைல வந்து படிக்கிறதா இருந்தா, நம்ம வீட்ல இருந்து படிக்கட்டுமேன்னு என்கிட்ட சொல்லியிருக்காங்க, என்றாள் ஹரிணி!

 

நேற்று சுந்தரிடம் நன்கு திட்டு வாங்கியதால், அவன் முடிவுக்கு சப்போர்ட் செய்வது போல், சமாதானக் கொடி நீட்டினாள்!

 

அதெல்லாம் ஒண்ணும் வேணாம்! அவளுக்கு தைரியம் வரனும், உலகத்தை தெரிஞ்சிக்கனும்னுதான் சென்னைக்கே வர்ச் சொல்றேன்! அங்கியும் வந்து பொத்தி பொத்தி பாத்துக்குறதுக்கா?

 

நீ ஹாஸ்டல்லதான் இருக்கனும் ஹாசிணி! உனக்கு கார்டியனா நாங்க இருப்போம்! என் பேரை நீ காப்பாத்துவேன்னு நம்புறேன்!

 

அன்று அவன் மேல் வைத்த நம்பிக்கை, சுந்தரை ஹீரோவாகப் பார்க்க ஆரம்பித்தது இன்று வரை ஹாசிணிக்கு தொடர்கிறது!

 

ஒவ்வொரு முறையும் சுந்தர் அவளை ஆச்சரியப்படுத்துவான்! அவனுடைய மெச்சூர்டான அணுகுமுறை, கைடன்ஸ் எல்லாமே ஹாசிணியை நன்கு வழிநடத்தியது! நட்பு, படிப்பு, இன்னும் சிலர் அவளிடம் ப்ரபோஸ் செய்தது, வயதுக்குரிய தடுமாற்றங்கள் என எந்த விஷயத்தையும் அவனுடன் ஆலோசிக்கும் அளவிற்க்குச் சென்றது!

 

பிஜி, சென்னையின் பிரபல கல்லூரியில் சேர்ந்தது, கேம்பஸ் இண்டர்வ்யூவில் பெரிய நிறுவனத்தில் சேர்ந்தது என அனைத்தின் பின்பும், சுந்தரின் ஊக்கமும், அவனுடைய ஆலோசனையும் இருந்தது!

 

இத்தனை வருடங்களில் அவன் மீதான் அன்பு. ஹாசிணிக்கு கூடிக் கொண்டேதான் இருந்தது! அவளை மிகவும் பிரமிக்க வைத்த விஷயம், தான் எந்தளவு அவனிடம் விளையாடினாலும், நெருக்கம் காட்டினாலும், சுந்தரின் பார்வையில் எந்த விதக் கள்ளத்தனமும் இருக்காது! அவனருகில் அவள் மிகப் பாதுகாப்பாய் உணர்வாள்!

 

அப்படிப்பட்டவனின் வெற்றிக்காக, தான் மெனக்கெடுவதில் தவறேயில்லை என்று நினைத்தவள், தன் முடிவை மாற்றிக் கொள்ளவேயில்லை!

 

ஹலோ மாம்ஸ், நேத்துதானே ட்ரிப் முடிஞ்சு வந்தீங்க! போயி, வேலையைப் பாருங்க! சும்மா டைம் வேஸ்ட் பண்ணிகிட்டு என்று கிண்டலடித்தாள்!

 

அப்ப நீ முடிவை மாத்திக்க மாட்ட?

 

நோ!

 
சரி, அப்ப நம்ம வீட்டுக்கே வந்துடு! இப்ப இருக்குற ஹாஸ்டல்ல இருந்து, இது நம்ம ஆஃபிஸ் தூரம்!

[Image: 1617512-rashi-khanna-photos-at-adanga-ma...otions.jpg]

என்னமோ, எனக்கு உலகம் தெரியனும், தைரியம் வரனும்னு ஹாஸ்டல்ல சேத்தீங்க? இப்ப என்னாச்சு என்று கண்ணை உருட்டிக் கேட்டியவளின் கள்ளங்கபடமற்ற கிண்டலில் நிறைவாய் உணர்ந்தவன்,

 
அதான் நான் சொல்றைக் கூட கேக்க முடியாதுன்னு சொல்ற அளவுக்கு தைரியம் வந்துடுச்சே, அப்புறம் என்ன? பேசாம வந்து சேரு என்று மீண்டும் அவள் தலையில் குட்டி விட்டுச் சென்றான்!
[+] 7 users Like whiteburst's post
Like Reply


Messages In This Thread
RE: ஆண்மை எனப்படுவது யாதெனின்..! - by whiteburst - 22-04-2020, 06:50 AM



Users browsing this thread: 58 Guest(s)