மாலதி டீச்சர் by JNS
#23
கோயிலில் அதிகக் கூட்டமில்லை. அவள் அர்ச்சனை தட்டைக் கொடுத்துவிட்டு பெருமாளைப் பரவசத்துடன் பார்த்தபடி நின்றாள். அர்ச்சனை முடிந்து சிறிது நேரம் கண்கள் மூடி பிரார்த்தித்தபடி நின்றாள். நான் காத்திருந்தேன். அவள் வந்து எனக்கும் ஆர்த்திக்கும் பிரசாதம் தந்தாள். நான் எடுத்துக்கொண்டேன். சிறிது நேரம் உட்கார்ந்திருந்தோம்.
‘என்ன மாலதி.. ரொம்ப நேரம் ஏதோ ப்ரே பண்ணினீங்க’
‘ஆமாõ எல்லாம் இவளுக நல்லா படிக்கனும்னுதான்’
‘ஓகோ..’
‘அவருக்கும் இப்போ சுகர், பிரசர்னு ரொம்ப கஷ்டப்படறார். எல்லாம் சரியாயிடனும்னு வேண்டிக்கிட்டேன்.’
‘ம்ம்ம்..’
‘உங்களுக்காக ஒன்னும் வேண்டிக்கலையா?’
‘எனக்கென்ன? நான் நல்லாத்தானே இருக்கேன்..’ என்று சிரித்தாள்.
‘ம்ம்ம்..’
‘அவரு நல்லா இருந்தாலே போதும். எனக்கு ஒரு குறையும் இருக்காது..’
‘ம்ம்ம்.. இந்த சேலை உங்களுக்கு ரொம்ப நல்லா இருக்கு..’
‘ஓகோ.. தேங்ஸ் சிவா..’ என்று சிரித்தாள்.
மூவரும் கிளம்பினோம். ஆர்த்தியை ஸ்கூலில் விட்டுவிட்டு நானும் மாலதியும் திரும்பினோம். பைக்கில் என் பின்னால் உட்கார்ந்து என் தோள் மேல் கையைப் போட்டுக் கொண்டாள். எனக்கு கூச்சமாயிருந்தது. ஏனென்று தெரியவில்லை. அவள் ஒரு முகவரியைச் சொல்லி அங்கே போகச் சொன்னாள். நான் சரி என்று அவள் சொன்ன முகவரிக்குச் சென்றேன். அது ஒரு தெருவோரச் சிறுவர்களுக்கான பாதுகாப்பு மையம். எனக்குப் புரியவில்லை.
அவள் என்னையும் உள்ளே அழைத்துச் சென்றாள். அங்கிருந்த ஒரு பெண்மணி இவளைப் பார்த்துப் புன்னகைத்தாள். இவளும் நல்லா இருக்கீங்களா? என்று கேட்டுவிட்டு அலுவலக அறைக்குச் சென்றாள். அங்கிருத்த ஒரு நடுத்தர வயது நபரிடம் பேசிக்கொண்டிருந்து விட்டு ஹேண்ட் பேக்கிலிருந்து கொஞ்சம் பணம் எடுத்துத் தந்தாள். பின்னர் என்னை அழைத்துக்கொண்டு உள்ளே சென்றாள். அங்கு பலவயதுகளிலும் சிறுவர் சிறுமிகள் விளையாடிக் கொண்டிருந்தனர். சிலர் படித்துக் கொண்டிருந்தனர். இவளைப் பார்த்ததும் சிலர் ஓடி வந்து வணக்கம் சொன்னார்கள். இவள் அவர்களுக்குச் சாக்லேட் கொடுத்து சில குழந்தைகளை நலம் விசாரித்தாள். எனக்கு ஆச்சரியமாயிருந்தது.
‘சாரி சிவா.. உனக்கு ரொம்ப லேட்டாகுதுனு நெனக்கிறேன். வா போகலாம்.’
இருவரும் கிளம்பினோம். வழியில் அவளாகவே இதைப் பற்றிச் சொன்னாள்.
‘நாங்க பிள்ளைகளோட பிறந்த நாள கிராண்டா கொண்டாடுறதில்ல சிவா.. எனக்கு அது பிடிக்கல.. அந்தப் பணத்துல இப்படி இல்லாதவங்களுக்கு செய்யலாம்னுதான் நான் ஆரம்பத்துல இருந்தே இவளுக பிறந்த நாளை இப்படி கொண்டாட ஆரம்பிச்சுட்டேன். முதல்ல அவருக்கு என் மேல கொஞ்சம் கோபம் இருந்துச்சு. அப்புறம் அவருக்கும் இது ரொம்ப பிடிச்சுப் போச்சு. எப்பவும் இங்க குடும்பத்தோடதான் வருவோம். இன்னைக்கு வரமுடியல. இந்த ஹோம்ல இன்னைக்கு ஒருநாள் அந்தக் குழந்தைகளுக்கு ஆகிற சாப்பாட்டுச் செலவை நான் கொடுத்துடுவேன். அதுல ஒரு மகிழ்ச்சி கிடைக்குது.’
எனக்கு அவள் சொன்னதைக் கேட்டு பிரமிப்பாயிருந்தது. இவளைப் போலவே இவளுடைய மனதும் இவ்வளவு அழகா என்று சிலிர்த்தேன். அதற்குள் வீடு வந்திருந்தது. வாசலில் கிடந்த செருப்புகளைப் பார்த்ததும், ‘யாரோ வந்திருக்காங்க’ என்றேன்.
அவள் பைக்கிலிருந்து இறங்கியபடி சொன்னாள்
‘அத்தை வந்திருக்காங்க.. எப்பவும் இவளுக பிறந்த நாளுக்கு அத்தையும் மாமாவும் வந்திடுவாங்க.. மதியம்தான் வருவேன்னு சொன்னாங்க. ஆனா சீக்கிரமே வந்துட்டாங்க போல. நீ வா. நான் அவங்களுக்கு உன்னை இன்ட்ரடியூஸ் பண்றேன்.’
‘இல்ல பரவால்ல மாலதி. இன்னொரு நாள் வரேன். இப்பவே ரொம்ப லேட்டாயிடுச்சு..’
‘ம்ம்ம்.. சரி. நான் வரேன்.’
‘ரொம்ப தேங்ஸ் சிவா’
‘ஹலோ எதுக்கு தேங்ஸ் எல்லாம்.. நான் வரேன். பை’
‘ஓகே பை சிவா..’
நான் அலுவலகம் சென்று வேலைகளில் மூழ்கினேன். மாலதி இடையிடையே மாலதி நினைவு வந்தது. பேச வேண்டும் போல் இருந்தது. அவள் மாமனார், மாமியாருடன் பிசியாக இருப்பாள் என்று போன் பண்ணவில்லை. இரவு அவள் நினைவாகவே இருந்தது. மெசேஜ் அனுப்ப தயக்கமாயிருந்தது. ஆனாலும் அவளுடைய நினைவில் தவித்தேன். தயங்கியபடி நள்ளிரவில் மெசேஜ் அனுப்பினேன்.
Like Reply


Messages In This Thread
RE: மாலதி டீச்சர் by JNS - by johnypowas - 18-02-2019, 10:20 AM



Users browsing this thread: 11 Guest(s)