19-04-2020, 07:55 AM
அடுத்த சில நாட்களில் -
நிஷாவை விவாகரத்து செய்துவிட்டு கண்ணன் சந்தோஷமாக காவ்யாவோடு லண்டன் கிளம்பினார்.
டிவோர்ஸ்க்கான உண்மையான காரணத்தை அவர்கள் சொல்லவில்லை என்று தெரிந்தாலும் மோகனாலும் ராஜ்ஜாலும் நிஷாவின் மனதை மாற்ற முடியவில்லை. சீனுவை கட்டிக்கப் போவதாக... ராஜ்ஜிடம் சில வாரங்கள் கழித்து சொல்லி பெற்றோரின் சம்மதம் வாங்கவேண்டும் என்று நிஷா முடிவெடுத்தாள். அப்பா அம்மா அண்ணன் தங்கையோடு போய் தங்கினாள். சில நாட்களில் குடும்பத்தில் சந்தோஷம் திரும்பி வந்தது. நிஷாவும் தீபாவும் மலரை வைத்து ராஜ்ஜை தினமும் ஓட்ட... வீடு கலகலப்பானது.
மலர் தனது டீமோடு ஒரு டாகுமெண்டரி தயாரிக்க மும்பை கிளம்பினாள். மும்பை பிராஞ்ச்தான் என் உயிர் என்று ராஜ் அவள் பின்னாலேயே மும்பை கிளம்பினான்.
இந்த சூழ்நிலையில் சீனு ஹெட் ஆபிஸில் ஜாயின் பன்ன வீடு வந்து சேர்ந்தான். நிஷாவை சீக்கிரம் கல்யாணம் செய்யவேண்டும். ராஜ், காமினி என்று இருவரிடமும் நல்ல பெயர் எடுக்கவேண்டும். அன்று மண்டபத்தில் நடந்ததை நினைத்து காமினி கோபமாக இருக்கக்கூடும். நான் வேண்டுமென்றே அப்படிப் பிடிக்கவில்லை என்பதை அவளுக்கு புரியவைக்கவேண்டும். அன்று ஸாரி கேட்டதை அவள் சுத்தமாக கண்டுகொள்ளவில்லை. இன்னொருமுறை தைரியமாக அதற்கு மன்னிப்பு கேட்டுவிட வேண்டும்!
அன்று காலை -
சீனு வேகம் வேகமாக ஆபிஸுக்கு வந்துகொண்டிருந்தான். டிராபிக்கில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தான். ஏதோ பெரிய மனசு பண்ணி காமினி இங்க வேலை செய்ய ஒத்துக்கிட்டாங்க. ஆனா இங்க எல்லாமே என்ன லேட்டா போகவைக்குறதுக்காக நடக்குற மாதிரி இருக்கே.....
சிக்னல் க்ளீயர் ஆனதும் இவன் சீறிப் பறந்தான். அப்போது பின்னாலேயே இவனைப்போலவே சீறி வந்த கார், ஒரு கட்டத்தில் இவன் பைக்மேல் மோதுவதுபோல் சந்தர்ப்பம் அமைந்துவிட, பைக்மேல் மோதுவதை தவிர்க்க, காரிலிருந்த விக்னேஷ் தனது லேனிலிருந்து மாற, இவனது பைக்கை லேசாக உரசிவிட்டு மெட்ரோ பில்லரில் மோதிக்கொண்டு நின்றது. பைக்கோடு கீழே விழுந்த சீனு, நல்லவேளை தனக்கு எந்த காயமும் இல்லை என்று நிம்மதியடைந்தவனாக அந்தக் காரைப் பார்க்க.... அங்கே எந்த மூவ்மெண்டும் இல்லை. இதற்குள் சிலர் வானங்களை ஓரம் கட்டிவிட்டு கவலையோடு பார்த்துக்கொண்டிருக்க, இவன் காருக்கு ஓடினான். நெற்றியைப் பிடித்துக்கொண்டு விக்னேஷ் கதவை திறந்துகொண்டு வெளியே வர முயற்சித்துக்கொண்டிருக்க... அவரை உடனே ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு புறப்பட்டான். அவர் கொஞ்சம் கொஞ்சமாக மயங்கிக்கொண்டிருந்தார். ஓ மை காட்.... நேரத்தை வீண் பண்ணிவிடக்கூடாது! சீட் பெல்ட் போடாம இருந்திருக்காரே... வலது கைல வேற கட்டு போட்டிருக்காரு! என்று ஆதங்கப்பட்டபடியே ஆட்டோக்காரர் ஜெட் ஸ்பீடில் ஹாஸ்பிடல் முன் கொண்டுவந்து நிப்பாட்ட... அவரை பதட்டத்தோடு அட்மிட் செய்தான். அவருக்கு ஆபத்து ஒன்றுமில்லை, அதிர்ச்சியில் ஏற்பட்ட மயக்கம்தான் என்ற செய்தி தெரிந்ததும்தான் சற்று நிம்மதியாயிருந்தது. காமினியின் கணவனை காப்பாற்றியிருக்கிறோம் என்று தெரியாமலேயே அங்கிருந்து புறப்பட்டான்.
போச்சு.... 3 மணி நேரம் மண்ணாப்போச்சு! புலம்பிக்கொண்டே ஆபிஸ் வந்து சேர்ந்தான். தனபால் நைசாக போன் போட்டு காமினிக்குச் சொல்லிவிட்டார். அவளுக்கு கோபம் வந்தது. ராஜ் சொன்னானே என்று ஒத்துக்கொண்டால்... இது டூ மச். அவனை என்கிட்ட அனுப்புங்க... என்று கடுப்பாகச் சொன்னாள். மறுபடியும் சைட்டுக்கு அனுப்பிவிட வேண்டியதுதான்.
சீனு தயங்கியபடியே வந்து நின்றான்.
ஏன் லேட்டு?
வர்ற வழில ஒரு சின்ன ஆக்சிடன்ட். ஒருத்தரை ஆஸ்பிடல்ல சேர்த்துட்டு வர்றேன்.
ப்ச். பொய் சொல்றதுக்கு உனக்கு வெட்கமா இல்லையா? ஸ்கூல் பசங்க மாதிரி
இல்ல மேம். உண்மைலயே....
வயசானவரை ஹோம்ல சேர்த்தேன்.... ஆக்சிடன்ட் ஆனவரை ஹாஸ்பிடல்ல சேர்த்தேன்...ஹவ் மெனி லைஸ்.... உனக்குப்போயி இவங்க எப்படி ரெகமெண்ட் பண்றங்கன்னுதான் ஆச்சரியமா இருக்கு. நீ மறுபடியும் சைட்டுக்குப் போறதுக்கு ரெடியா இரு.
மேம் ப்ளீஸ்.....
டோன்ட் இரிடேட் மி. கோ
கன்னத்தில் அறைந்தது போலிருந்தது சீனுவுக்கு. இவள் தன்னோடு சிரித்துப் பேசவேண்டும், அந்தளவுக்கு நல்லா வேலை செய்யணும்னு நினைத்தேனே..... அவப்பெயர் மேல் அவப்பெயர். என்கேஜ்மென்ட் அன்னைக்கு நான் வேணும்னே அப்படி பிடிச்சிட்டேன்னுதான் நினைச்சிட்டு இருப்பா. என்னைப் பார்த்தாலே வெறுக்குறா. ஆத்தாடி இவளையெல்லாம் தூரத்துல இருந்து ரசிக்கலாம் அவ்வளவுதான். அதோட ஸ்டாப் பண்ணிக்கணும்.