Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
ஈரானில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல்: 27 ராணுவ வீரர்கள் பலி - ஈரான் கடும் கண்டனம்

[Image: 201902172254064096_Pakistani-terrorist-a...SECVPF.gif]
தெக்ரான், 

ஈரானில் ராணுவ வீரர்கள் மீது பயங்கரவாதிகள் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தினர். இதன் பின்னணியில் பாகிஸ்தான் பாதுகாப்புப் படைகளின் ஆதரவு இருப்பதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது. 

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் எல்லையில் ஈரானின் சிஸ்டான் பகுதி உள்ளது. அங்கு எல்லை பாதுகாப்பு பணியில் ஈரான் ராணுவம் ஈடுபட்டிருந்தது. அப்போது அங்கு புகுந்த பயங்கரவாதிகள் ராணுவ வீரர்கள் மீது அதிரடி தாக்குதல் நடத்தினர். அதில் 27 ராணுவ வீரர்கள் பலியாகினர்.

இந்த தாக்குதலுக்கு ஜெய்ஸ்-அல்-அடில் என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த அமைப்பும், இந்திய ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய ஜெய்ஸ்-இ- முகமது பயங்கரவாத அமைப்பும் பாகிஸ்தான் ராணுவத்தின் ஆதரவு பெற்றவையாக கருதப்படுகிறது.

ஈரானில் நடந்த இந்த தாக்குதல் சம்பவம் குறித்து அந்நாட்டு ராணுவ தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் முகமது அலி ஜாப்ரி , “ ஈரானிய புரட்சிகர அரசுக்கு எதிரானவர்களுக்கு பாகிஸ்தான் அரசு அடைக்கலம் தந்துள்ளது. அவர்கள் எங்கே மறைந்திருக்கிறார்கள் என்பது பாகிஸ்தான் அரசுக்குத் தெரியும். அதேநேரத்தில் அவர்களை பாகிஸ்தான் பாதுகாப்புப் படைகள் ஆதரித்து வருகின்றன. 

ஜெய்ஷ்-அல் -அடில் பயங்கரவாதிகளை பாகிஸ்தான் அரசு தண்டிக்கவில்லையெனில், அத்தகைய ஈரானிய எதிர்ப்பு புரட்சிகரப் படைகளுக்கு பதிலடி கொடுப்போம். தீவிரவாத இயக்கத்திற்கு பாகிஸ்தான் துணை நிற்பதோடு, தீவிரவாதத்தைத் துாண்டி வருமானால் அதற்கான எதிர்விளைவுகளையும் விரைவில் அவர்கள் சந்திக்க வேண்டும். இந்த தாக்குதலில் சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்டுக்கு தொடர்பு இருந்தால் அவர்களுக்கும் தக்க பதிலடி கொடுப்போம் என்று கூறினார்.
Like Reply


Messages In This Thread
RE: கரண்ட் affairs தமிழில் - by johnypowas - 18-02-2019, 09:47 AM



Users browsing this thread: 58 Guest(s)