Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
இந்தியாவுக்கு 48 உலக நாடுகள் ஆதரவு: பொறுத்தது போதும்... பதிலடி கொடுக்க அறிவுரை!

[Image: Tamil-image.jpg]

Highlights
  • இந்தியாவும், ஈரானும் 2 பயங்கரவாத தாக்குதல்களால் மிகப் பெரிய துயரத்தை சந்தித்துள்ளது. பொறுத்தது போதும். இதற்கு எதிராக இந்தியா எடுக்ககும் நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்போம்.


புதுடில்லி : புல்வாமா தாக்குதலுக்கு அமெரிக்கா, பிரான்ஸ், கனடா, இஸ்ரேல், துருக்கி உள்ப்ட 48 நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளது. 

காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய கோழைத்தனமான தாக்குதலில், 44 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த கொடூர தாக்குதலுக்கு அமெரிக்கா, பிரான்ஸ், கனடா, இஸ்ரேல், துருக்கி உள்ப்ட 48 நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளது. தவிர, இந்தியாவுக்கு துணையாக நிற்பதாகவும் தெரிவித்துள்ளன. 

இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியாவின் நடவடிக்கைகளுக்கு துணையாக இருப்போம் என மெரிக்கா தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் மீது இந்தியா வான்வழி தாக்குதல் நடத்தினாலும் அதற்கும் உதவ தயாராக உள்ளதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. 

பாகிஸ்தான் உடனான எல்லா உறவுகளையும் முறித்துக் கொள்ளும்படி பலோசிஸ்தான் தேசிய காங்., இந்தியாவிடம் கேட்டுக் கொண்டுள்ளது. ஈரானில் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்தித்த அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் சையது அப்பாஸ் கூறியதாவது:




[Image: Master.jpg]Pulwama

இந்தியாவும், ஈரானும் 2 பயங்கரவாத தாக்குதல்களால் மிகப் பெரிய துயரத்தை சந்தித்துள்ளது. பொறுத்தது போதும். இதற்கு எதிராக இந்தியா எடுக்ககும் நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்போம். 
இவ்வாறு அவர் கூறினார்.
Like Reply


Messages In This Thread
RE: கரண்ட் affairs தமிழில் - by johnypowas - 17-02-2019, 10:09 AM



Users browsing this thread: 101 Guest(s)