07-04-2020, 06:56 PM
அடுத்து வந்த நாட்கள் வழக்கம்போல் சென்றது. எனது மாமியார் மாமனார் ஊருக்கு சென்று விட்டார்கள். நாங்கள் மட்டும் விடுமுறைக்கு சொந்த ஊருக்கு செல்வதற்கும்... அங்கிருந்து கேரளாவிற்கு கோடை விடுமுறையை கழிக்க எனது மனைவியின் பெரியம்மா பையன் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று திட்டமிட்டு கொண்டோம். எங்கள் iti ஆண்டு விழா முடிந்து தேர்வு தொடங்க இருந்தது. அதற்குள் எனது நண்பரான தூத்துக்குடியில் இருந்து எங்கள் md ஐ பார்த்து நேர்காணலுக்காக கிளம்பி விட்டதாக போன் பண்ணினார். அவருக்கு வயது என்னை விட கம்மிதான் என்றாலும் நட்பு முறையில் கொஞ்சம் இடைவெளி விட்டு பழகுவார். அதான் மரியாதை தருகிறேன். பெயர் சுரேஷ். அவரை சேலம் வரச்சொல்லி நாங்கள் இருக்கும் ஊருக்கு பஸ்ல வரசொல்லிட்டேன். சாய்ங்காலம் பால்கனியில் அமர்ந்து செல் பார்த்து கொண்டிருந்தேன். அப்பொழுது ராஜா சார் என்னை கூப்பிட்டு எக்ஸாம்க்கு வேண்டிய practical items ஐ லிஸ்ட் எடுத்துக்கொண்டு நேரில் வரச்சொன்னார். எங்கள் md தான் அதை சொல்லியதாக சொன்னார். நானும் சரி என்றேன். கவிதா பூஜையை பற்றி ஏதேனும் எப்படி இருந்ததென்று சொன்னாளா என்று கேட்டார். நானும் நல்லா பூஜை பண்ணுனதா சொன்னாள் என்றேன் அவர் சிரித்து கொண்டது எனக்கு தெளிவாக கேட்டது. அவர் பேசியதை கவிதாவிடம் சொல்ல வில்லை.