Fantasy தாலி மட்டும் தான் கட்டினேன்
#7
Heart 
தாலி மட்டும் தான் கட்டினேன் - Ep2

"என் பேரு கிஷோர்" என்று சொன்னான் அவளுடைய பெயரை தெரிந்து கொள்ளும் நோக்கில்..

அவள் அவனுடைய முகத்தை கூர்மையாக இரண்டு நொடிகள் அமைதியாக பார்த்து விட்டு வாயை மெதுவாக அசைத்தாள்..

ஆனால் பதிலோ "இருந்துட்டு போங்க.. எனக்கென்ன!" என சொல்லிவிட்டு அவன் ஏமாந்த முகம் பார்த்து அடக்க முடியாமல் அவள் வாய் சிரித்து விட்டது..

சிரித்த முகத்தோட ஆவலா காத்துட்டு இருந்த கிஷோர் முகம் சப்புன்னு சாணி அறைஞ்ச மாதிரி ஆகி போச்சு.. அவளுக்கு இவன் முகத்தை பார்த்து சிரிப்பை அடக்கவும் முடியவில்லை..


அவளின் இடைவிடாத சிரிப்பு சுத்தி இருப்பவர்களின் கவனத்தை இவர்களின் மேல் திசை திருப்ப.. அவள் சிரிப்பை கட்டுப்படுத்தி அமைதியாக அவன் முகத்தை பார்த்து "சாரி" என ஒரு கொஞ்சும் ராகத்தோடு சொன்னாள்..

என்னதான் தன்னை பார்த்து நக்கலாக சிரித்தாலும் அவளுடைய கொஞ்சும் குரல் அவன் முகத்தில் புன்னகையை வரவழைத்தது.. விடாப்பிடியாக அவன் "சாரி லாம் எதுக்குங்க.. உங்க பேரு என்னன்னு மட்டும் சொல்லுங்க ஜெனரல் நாலேட்ஜ் காக"

"கொஞ்சம் சிரிச்சா போதுமே!! அப்டியே வந்துருவீங்களே!! கொஞ்சம் உஷாரா இல்லைனா அவளோ தான்.." என கூறியவள் "சரி வாட்ச் தான் சரி பண்ணியாச்சுல!! இன்னும் ஏன் நிக்குறீங்க.. முன்னாடி போய் பணம் கட்டுங்க. போங்க" என்றாள்.

[Image: ae60659a3e7a26ff280a484b12f59c79.jpg]

"ஐயோ உடனே எப்படி போறது? போனா அடுத்து இவள எப்போ பாக்குறது? அட்லீஸ்ட் ஒரு போன் நம்பர் ஆச்சும் அவள் கிட்ட இருந்து வாங்குனா நல்லா இருக்கும்" என யோசித்த கிஷோர் "அட என்னங்க தொறத்திட்டே இருக்குறீங்க! இதே வாட்ச் க்கு ஸ்ட்ராப் மாத்தி குடுங்க. இந்தாங்க" என அது தன்னோட நண்பன் ராகுல் வாட்ச் என்பதையும் அவனுடன் விளையாடினால் வரும் பின் விளைவுகளையும் மறந்து கூறினான்.

வாட்சையும் அவன் முகத்தையும் திரும்ப திரும்ப பார்த்தவள் "என்ன விலையாடறீங்களா!!! 150 ரூபா செல்லுக்கே அவ்ளோ பேசுனீங்க.. இது 1500 ரூபா ஸ்ட்ராப் இப்போ மாத்த சொல்றீங்க? அதுவும் இந்த ஸ்ட்ராப் நல்லா தானே இருக்கு.."

"என்னங்க பேய் கதை சொல்றீங்க.. ஸ்ட்ராப் 1500 ரூபாயா.. விட்டா இந்த கடை டிரம்ப் ஓட மச்சான் கடைன்னு சொல்வீங்க போல" என நக்கலாக சிரித்து கொண்டே சொன்னான் கிஷோர்.

"ஹலோ இது Casio G Shock இந்த வாட்ச் எப்டியும் பத்தாயிரம் ரூபா க்கு மேல.. அதனால இதோட ஸ்ட்ராப் யும் காஸ்ட்லி தான்.." என கூறியவள் முகத்தில் ஒரு சின்ன ஆச்சரியத்துடன் "ஆமா இது நிஜமாவே உங்க வாட்ச் தானா?" என இடுப்பில் கை வைத்து வாட்சை ஆட்டி கொண்டே சொன்ன கொள்ளை கொள்ளும் அழகை ஆயிரம் கண்கள் கொண்டு ரசிக்கலாம்.

ஆனால் கிஷோர் மனமோ அதை ரசிக்க முடியாமல் பத்தாயிரம் ரூபாய் வாட்சில் விளையாடியதை எண்ணி அவன் மனம் பயத்தால் இருளடித்தது.. உடனே "முதல்ல அந்த வாட்ச் ஐ கொடுங்க" என அவள் கையிலிருந்து பிடுங்கி கொண்டு பாண்ட் பாக்கெட்டில் பத்திரமாக வைத்து கொண்டு "நல்ல வேளை சொன்னிங்க.. இது என் பிரண்ட் வாட்ச் ங்க.." என்றான்.

"ஓ பிரண்ட் வாட்ச் ஆ.. அதான் சார் துள்ளினீங்களா? ஹ்ம்ம் உங்க பிரண்ட் நல்ல வசதி தான் போல" என கேட்டுக்கொண்டே "சரி அதான் சொல்லியாச்சுல.. இடத்தை காலி பண்ணுங்க.." என்றாள். அவளுக்கு இவனுடைய வெகுளி செய்கைகளும் நக்கல் நையாண்டி கலந்த பேச்சுகளும் அவளை கவரவே செய்தது.. இருந்தாலும் அவளுக்குள் பயம், புதிதாக பழகும் ஆளுடன் நிறைய வைத்து கொள்ள வேண்டாம் என்று..

கிஷோரின் மனது குழம்பியது.. "என்ன இந்த பொண்ணு புரியாத புதிர் மாதிரி இருக்குது.. ஒரு பக்கம் நான் திங்குற மாதிரி பாத்தாலும் ஒன்னும் சொல்லாம சிரிக்குது.. இன்னொரு பக்கம் மொறச்சுட்டே விரட்டுது" என யோசித்து விட்டு இருந்தாலும் இந்த வாய்ப்பை தவற விடாமல் அவளிடம் நம்பரை வாங்கியே ஆக வேண்டும் என்ற குறியுடன் தன் கையில் அணிந்து இருந்த வாட்சை கழட்டி அவளிடம் கொடுத்து "இதுக்கு செல் போட்டு கொடுங்க.. இந்தாங்க" என்று கடுப்பு ஏத்தும் வகையில் பல்லை இளித்து கொண்டு நின்றான்..

அவனுடைய செயல் அவளுக்கு எரிச்சலூட்டினாலும் அவன் செய்யும் எல்லா செயலும் அவளை கவருவதற்கே என எண்ணும் போது வந்த கர்வத்தால் அவன் இழுத்த இழுப்புக்கெல்லாம் அவளும் சென்று கொண்டிருந்தாள்..

அவனிடம் இருந்து வாட்சை வாங்கி முன்பு போல் இல்லாமல் சட்டென ஒரு நிமிடத்தில் போட்டு அவன் கையில் கொடுத்து "ஹேய் இந்தா கொண்டு போ.. முன்னாடி போய் 250 கொடுத்துரு.." என ஒருமையில் அவள் பேசிய விதம் ஒரு உரிமையுடன் பேசியது போலவே இருந்தது..

அதை உணர்ந்த அவனும் சிரித்துக்கொண்டே நகரும் போது அவன் பின்னே இருந்து ஒரு பெண் குரல் அந்த அழகான சூழ்நிலையே தலைகீழாக மாற்றி குழைக்கும் விதமாக மிகவும் அதிகாரமாக காட்டமாக "கலை!!! what the hell is happening here.. கஸ்டமர் கிட்ட இப்டி தான் வா போ ன்னு பேசுவியா" என அவள் மீது வீசியது. அதே பெண் கிஷோரிடம் திரும்பி மிகவும் சாந்தமாக பணிவாக "Sir I'm really for her behavior and please apologize her" என கூறியது..

[Image: 0a69fad30f6e9f132a448ec8c0f59a97.jpg]

"அட யாரு இவ!!! என் தேவதை மேல இவ்ளோ அதிகாரம் காட்டுறா!" என மனதுள் வந்த கோவத்தை அடக்கி கொண்டு தன் தேவதையை பார்க்கும் போது அவள் முகம் சற்று வெளிறி போய் இருந்தது அவன் நெஞ்சுக்குள் ஒரு வலியை ஏற்படுத்தியது..

பின் அந்த பெண்ணிடம் திரும்பிய கிஷோர் "madam this is a misunderstanding, she is my friend and she has every right to say to me whatever she thinks.. please don't blame her" என்றான்.

"oh is it!! then I'm sorry sir for intruding between you two.. I'll let you two to continue. have a marvelous day" என்று சொல்லி விட்டு நகர்ந்தாள்..

இங்கே இருவருக்குள்ளும் ஒரு அமைதி நிலவியது.. "எல்லாம் தன்னால் தானே எப்படி அவள் கிட்ட மன்னிப்பு கேட்கணும்" என அவன் நினைக்க

"ச்ச்ச நான் மரியாதை இல்லாம பேசியிருக்க கூடாது.. இருந்தாலும் அவன் எனக்காக பேசி சமாளிச்சான்.. கண்டிப்பா தேங்க்ஸ் சொல்லணும்" என அவள் நினைக்க

இருவரும் ஒரே சமயத்தில் மன்னிச்சுருங்க தேங்க்ஸ் என சொல்ல இருவருக்குமே உதட்டில் இருந்து சிறு புன்னகை எட்டி பார்த்து அந்த சூழ்நிலை போக்கியது..

விட்ட இடத்தில் இருந்து பிடிக்க நினைத்த கிஷோர் "அதான் பிரண்ட்ஸ் ஆகிட்டோம், அப்டியே நம்பர் கொடுத்தா கொஞ்சம் வசதியா இருக்கும்" என சுப்ரமணியபுறம் ஜெய் போல தலை முடியை சரி செய்து கொண்டே சொன்னான்..

"ஓஓஓ.. நம்பர் மட்டும் போதுமா இல்ல அட்ரஸ் உம் வேணுமா"

"ஹையோ சூப்பருங்க கொடுங்க"

"தொடப்ப கட்டை தான் தருவேன்.. ஒழுங்கா கிளம்பு" என சொல்லி திரும்பி கொண்டாள்..

"ஓ தொடப்ப கட்டையா இரு உனக்கு ஏதாச்சும் வேட்டு வைக்கிறேன்" என மனதில் நினைத்த கிஷோர் சிறிது நேரத்திற்கு முன் தன் தேவதையை வசை பாடிய அந்த பெண்ணை அழைத்து "excuse me ma'am, just now I realized I forgot to take my wallet. So I don't have any money. But fortunately my friend is here, she will pay for me. Is that okay for you?" என தன் தேவதையை கையை காட்டி அப்பொழுதும் திட்டியவளிடம் கூறினான் கிஷோர்..

"ஐயோ இவன் என்ன இப்டி குண்டு தூக்கி போட்றான்.. இப்போ என்ன பண்றது" என குழம்பி கொண்டிருந்தாள் அந்த தேவதை.

"Oh that's totally fine sir. I will get it from her or we will deduct it in her salary. You carry on and Please come again sir" என வாயெல்லாம் பல்லாக அவனை வழி அனுப்பி விட்டு ஒதுங்கி கொண்டால் அந்த மேலதிகாரி பெண்.

[Image: wp-image-2119565472.jpg]

தன் தேவதை க்கு டாட்டா காட்டி கிஷோர் அங்கிருந்து கிளம்பினான்.. அவன் செல்வதை பல்லை கடித்து கொண்டு "நல்லவன் ன்னு நினைச்சா இப்டி பண்ணிட்டு போறான் பாரு" என முணுமுணுத்தாள். இருந்தாலும் அவளுக்கு இருப்பு கொள்ளவில்லை, "ஐயோ இந்த இங்கிலீஷ் பிசாசு வெளிய போச்சுன்னா அவனை தொறத்தி போய் காசு புடுங்கிடலாம்" என தக்க சமயத்தை நோக்கி எதிர் பார்த்து கொண்டிருந்தாள்.

ஒரு நிமிடம் கழித்து இங்கிலீஷ் பிசாசு வெளியே செல்ல.. அந்த தேவதை கிஷோரை தேடி வெளியே வர எண்ணி ப்ரீத்தி வாட்ச் ஸ்டோர் வாசலை தாண்டியதும் அவள் வாய் தானாக மலர்ந்தது..

வெளியே கிஷோர் அவள் வருகையை எதிர் பார்த்து ஒரு தூணின் ஓரம் நின்று கொண்டிருந்தான்.. அவளை பார்த்து சிரித்தான்..

அவனிடம் வந்த அவள் "250 ரூபா சீக்கிரம் கொடுங்க.. அந்த பிசாசு வர்றதுக்குள்ள கொடுங்க.. இல்லனா நான் மறுபடியும் திட்டு வாங்கணும்"

கிஷோர்: அட நான் உள்ள சொன்னது நீங்க சரியா கேக்கலையா.. நான் purse எடுத்துட்டு வரலங்க.

அவள்: ப்ளீஸ் விளையாடாம குடுங்க..  என புருவத்தை சுருக்கி கொண்டே கெஞ்சினாள் அவனிடம்

கிஷோர்: சீரியஸா இல்லைங்க.. என சொல்லிக்கொண்டே சட்டையை வெளிய எடுத்து விட்டு பின் பாக்கெட்டிலிருந்த purse ஐ மறைத்தான்.

அவள்: அப்போ நிஜமாவே இல்லையா.. என கொஞ்சும் குரலில் கேட்ட அவளுக்கு முகம் சொங்கியது.

கிஷோர்: (அதே கொஞ்சும் குரலுடன்) நிஜமா இல்ல.. கவலப்படாத நான் உனக்கு Google Pay ல அனுப்பி விடறேன் ன்னு சொல்லி (app ல் login பண்ணி) உன் நம்பர் சொல்லு, நம்பர் இருந்தா மட்டும் தான் அனுப்ப முடியும்..

அவள்: இதை ஏதாச்சும் கிராமத்துல இருந்து மஞ்ச பை தூக்கிட்டு ஒருத்தன் வருவான் அவங்கிட்ட சொல்லு நம்புவான்.. நான் நம்ப மாட்டேன்..

என சொல்லி அவன் போன் ஐ பிடுங்கி Spot code ஐ scan பண்ணி தனக்கான 250 ரூபாயை அனுப்பி விட்டு "வெவ்வ வே" என்று அவனிடம் நக்கலடித்து விட்டு கடைக்கு ஓடினாள் மார்பகங்கள் குலுங்க..

இங்கே கிஷோர் முகத்தில் ஈ ஆடவில்லை.. பின்னர் முகத்தில் புன்னகை மலர, சிறிது நேரத்திற்கு முன்னால் அந்த ஆங்கில பிசாசு இவளை பெயர் சொல்லி அழைத்தது நினைவுக்கு வர "கலை.. உன் பேரு சூப்பரா இருக்கு" என்று கத்தினான்.

கலை திரும்பி கிஷோரை பார்த்து "ச்சீ போ" என சொல்லிவிட்டு சிரித்து கொண்டே கடைக்குள் சென்றால்..

"ஓ god!! இன்னைக்கு நாள் இவ்ளோ நல்லா அமையும் ன்னு கொஞ்சம் கூட எதிர் பார்க்கல" என நினைத்துக்கொண்டு திரும்ப

ராகுல் எதிரே இருந்தான்!!!!
[+] 10 users Like manaividhasan's post
Like Reply


Messages In This Thread
RE: தாலி மட்டும் தான் கட்டினேன் - by manaividhasan - 07-04-2020, 06:33 AM



Users browsing this thread: 24 Guest(s)