screw driver ஸ்டோரீஸ்
கொஞ்ச நேரத்தில் இன்ஸ்பெக்டர் வந்தார். என்னை விடுவிக்குமாறு உத்தரவிட்டார். என்னிடம் நிஜமான வருத்தத்துடன் மன்னிப்பு கேட்டுக் கொண்டார். நானும், அமிர்தராஜ் அங்கிளும் ஸ்டேஷனை விட்டு வெளியே வந்தோம். என்னிடம் பேசிக்கொண்டே வெளியே வந்த அங்கிள், திடீரென

"அசோக்.. நீ.. நீ கார்ல இரு.. எனக்கு உள்ள கொஞ்சம் வேலை இருக்கு.. இதோ வர்றேன்..." என்று மீண்டும் ஸ்டேஷனுக்குள் நுழைய போனார்.

"என்னாச்சு அங்கிள்..?" நான் புரியாமல் கேட்க,

"அகல்யா உள்ள இருக்கா அசோக்.. ஸ்டேஷன் உள்ள வர வேணான்னு... நான்தான் கார்லயே உக்கார சொன்னேன்.. நீங்க பேசிட்டு இருங்க.. நான் இதோ வந்துர்றேன்..!!"

சொல்லிவிட்டு அவர் மீண்டும் ஸ்டேஷனுக்குள் நுழைந்துகொள்ள, நான் வெளியே நின்றிருந்த அவருடைய காரை திறந்து உள்ளே ஏறினேன். அகல்யா 'ஓ...!!!' வென அழுதவாறு, பாய்ந்து வந்து என்னை இறுக்கி அணைத்துக் கொண்டாள். என் முகமெல்லாம் 'இச்.. இச்.. இச்..' என்று முத்தம் பதித்து என்னை மூச்சு திணற வைத்தாள். அவளுடைய கண்களில் இருந்து கண்ணீர் வழிந்து ஓடின.

"ஏய்.. லூசு.. நான்தான் வந்துட்டேன்ல..? எதுக்கு அழுற..?" என்று அவளுடைய கண்ணீரை துடைத்து விட்டேன்.

"நான்.. நான் எவ்ளோ துடிச்சு போயிட்டேன் தெரியுமா..?"

"ம்ம்ம்..."

"நைட்டு பூரா தூங்கவே இல்லை.."

"ம்ம்ம்.."

"அழுதுட்டே இருந்தேன்.."

"ம்ம்ம்.."

"போலீஸ் ஏதும் உன்னை அடிச்சாங்காளா..?"

"ச்சே.. எதுக்கு அடிக்கிறாங்க..? தப்பு பண்ணினாத்தான் அடிப்பாங்க.. நான்தான் எந்த தப்புமே பண்ணலையே..?"

"ம்ம்ம்..!! சரி.. இன்னும் ரெண்டு நாள்.. இல்ல.. நாலு நாள்.. இல்ல இல்ல.. ஒருவாரம்... நீ எங்கயும் போகக் கூடாது.. என்கூடவே இருக்கணும்.. சரியா..? இப்டியே கட்டிப் புடிச்சுட்டு இருக்கணும்..!!" சொல்லிக்கொண்டே அவள் என்னை இறுக்கி அணைத்துக் கொண்டாள். என் மார்பில் தலை சாய்த்து படுத்துக் கொண்டாள்.

"சரிடா.. இருக்குறேன்..!!"

"சீரியஸா..!! அப்புறம் நீ வெளில போனேன்னா.. நீ வர்ற வரை நான் அழுதுட்டே இருப்பேன்..!! அப்டிலாம் என்னை கஷ்டப்பட விடகூடாது.. சரியா..?"

"ப்ச்.. அப்டிலாம் உன்னை நான் கஷ்டப்பட விடுவேனா..? ஹேய்.. இங்க பாரு.. பாரேன்..!! என்ன ஆனாலும் சரி.. என் அகல்யாக்குட்டிக்கு எந்த கஷ்டமும் வர விடமாட்டேன்.."

'இன்னும் எத்தனை கொலை பண்ண வேண்டி வந்தாலும் சரி..!!!' என்று மட்டும் என் மனதுக்குள் சொல்லிக்கொண்டேன். என் மனைவியை மார்போடு அணைத்துக் கொண்டேன்.

( முற்றும் )

பின்கதைச்சுருக்கம்:

ஒரு மரண வாக்குமூலம்...!!!

"உன் பேரு என்னம்மா..?"

"அனிதா..!!"

"எத்தனை நாளா அவங்க உன்னை அடைச்சு வச்சிருந்தாங்க..?"

"ரெண்டு நாளா..!!"

"எப்டி அந்த சைக்கொஸ்ட்ட போய் மாட்டுனீங்க..?"

"நானும் அமீரும்.. அவங்களை ஒரு ரெஸ்டாரன்ட்ல வச்சு பாத்தோம்.. அமீருக்கு ஒரு பிசினஸ் டீல் முடிச்சுக் கொடுக்குறதா சொல்லி ஏமாத்தி.. அவங்க வீட்டுக்கு கூட்டிட்டு போனாங்க.. அங்க.. அங்க.. அமீரை கட்டிப் போட்டு.. கொஞ்சம் கொஞ்சமா சித்திரவதை பண்ணி கொன்னுட்டாங்க.. என் மூஞ்சில.. ஆசிட் ஊத்தி.. அடிச்சு உதைச்சு..."

"அழாதம்மா.. அமீர்ன்றது உன் புருஷனா..?"

"இ...இல்ல.. என் பாய்பிரண்ட்.. எங்களுக்கு இன்னும் கல்யாணம் ஆகலை.. ஆ..ஆனா.."

"ஆனா..?"

"எனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆயிடுச்சு..!! டைவர்ஸ் அப்ளை பண்ணிருக்கேன்..!!"

"ஓ.. உன் புருஷன் பேரு..?"

"அன்பு செழியன்..!!"

- ஸ்க்ரூட்ரைவர்
[+] 1 user Likes johnypowas's post
Like Reply


Messages In This Thread
RE: screw driver ஸ்டோரீஸ் - by johnypowas - 16-02-2019, 11:06 AM



Users browsing this thread: 6 Guest(s)