16-02-2019, 11:05 AM
நான்: அசோக்
எனக்கு விழிப்பு வந்தபோது, நன்றாக விடிந்திருந்தது. முகத்தில் வெயில் சுள்ளென்று அடித்தது. பத்து மணிக்கு மேல் இருக்கும் என்று தோன்றியது. எழுந்தேன். செல்லுக்குள் இருப்பது நினைவுக்கு வந்தது. நேற்று இரவு அன்பு காலை பிக் செய்யாமலேயே போக, போலீஸ் என்னை விசாரணைக்காக கூட்டி வந்தது. நள்ளிரவு பனிரெண்டு மணி வரை, துருவி துருவி விசாரித்தார்கள். நான் பதட்டப் படாமல், எதற்கும் பிடி கொடுக்காமல், நழுவலாகவே பதில் அளித்தேன்.
பின்பு என்னை அங்கேயே தூங்கிக் கொள்ள சொன்னார்கள். கொசுத்தொல்லை..!!!! இரவு முழுதும் தூக்கமே வரவில்லை. அதிகாலையில்தான் தூங்கவே ஆரம்பித்தேன். இப்போது வரை தூங்கி இருக்கிறேன். எழுந்ததுமே மனதுக்குள் நிறைய குழப்பங்கள் பரவ ஆரம்பித்தன.
என் நிலைமை என்ன ஆகப் போகிறது..? அன்பு ஏன் காலை பிக்கப் செய்யவில்லை..? திரும்பவும் கால் செய்யவில்லை..? அகல்யா எப்படி துடித்துக் கொண்டு இருக்கிறாளோ..? அமிர்தராஜ் அங்கிளுக்கு கால் செய்து, ஸ்டேஷன் வர வைக்குமாறு அவளிடம் சொல்லி வந்தேன். அவர் ஏன் இன்னும் வந்து சேரவில்லை..? அந்த பர்ஸை தொலைத்தது.. என்னென்ன சிக்கல்களை எல்லாம் எனக்கு கொண்டு வந்து சேர்க்கப் போகிறது..??
கேள்விகள் சூழ்ந்துகொள்ள, பதிலில்லாமல் நான் திணறிக் கொண்டு இருக்கும்போதே, தூரத்தில் அமிர்தராஜ் அங்கிள் தெரிந்தார். அவர் ஒரு லாயர். என் நண்பனின் அப்பா..!! புன்னகையுடன் வந்தவர், சற்றே வருத்தமான குரலில் சொன்னார்.
"ஸாரி அசோக்.. நேத்து நான் ஊர்ல இல்லை.. இல்லைன்னா நைட்டே வந்திருப்பேன்..!!"
"பரவால்ல அங்கிள்..!!"
"ம்ம்ம்.. இன்ஸ்பெக்டர்கிட்ட பேசிட்டேன் அசோக்.. ஒன்னும் ப்ராப்ளம் இல்லை..!! இன்னும் கொஞ்ச நேரத்துல விட்டுடுவாங்க..!!" அவர் சொல்ல, நான் ஆச்சரியமானேன்.
"என்ன அங்கிள் சொல்றீங்க..? அன்பு வந்துட்டானா..?"
"இல்லை அசோக்.. கொலை பண்ணினது யாருன்னு போலீஸ் கண்டுபிடிச்சுட்டாங்க..!!"
"வாட்..??????" நான் சுத்தமாக அதிர்ந்து போய் கேட்டேன்.
"ஆமாம் அசோக்..!!"
"யா..யார் அங்கிள் அது..?"
"ஐயோ.. அது ஒரு பெரிய கதை.."
"சொல்லுங்க அங்கிள் ப்ளீஸ்..!!"
"ரெண்டு பேரு அசோக்.. புருஷன் பொண்டாட்டிங்க..!! அவங்களோட பக்கத்து வீட்டுக்காரங்க.. அவங்க மேல சந்தேகப் பட்டு.. இன்னைக்கு அதிகாலைல போலீஸ் ஸ்டேஷனுக்கு ஒரு போன் பண்ணிருக்காங்க..!! போலீஸ் அவங்க வீட்டுக்கு போய் பாத்தப்போ.. வீட்டுக்கு பின்பக்கமா.. அந்த ரெண்டு பேரும் ஒரு டெட் பாடியை டிஸ்போஸ் பண்ண ட்ரை பண்ணிட்ருந்திருக்காங்க.. போலீசை பாத்ததும்.. அட்டாக் பண்ணிருக்காங்க..!! போலீஸ் திருப்பி சுட்டதுல ரெண்டு பேருமே அவுட்டு..!!"
"அச்சச்சோ..!!"
"அச்சச்சோவா..? இன்னும் சொல்றேன்.. எல்லாத்தையும் கேட்டுட்டு.. அப்புறமா அச்சச்சோ சொல்லு..!! போலீஸ் அவங்க வீட்டை சர்ச் பண்ணிப் பாக்க.. பயங்கர ஷாக்..!! அவங்க ரெண்டு பேரும் சாதாரணமான ஆளுங்க கெடயாது.. பயங்கரமான சைக்கோபாத்ஸ்..!! இதுவரை முப்பது நாப்பது பேரை காலி பண்ணிருக்காங்க..!!"
"மை காட்..!!! அது சரி.. அவங்களுக்கும் அழகு நாயகத்துக்கும் என்ன சம்பந்தம் அங்கிள்..?"
"அவங்கதான் அழகு நாயகத்தையும் கொலை பண்ணிருக்காங்க அசோக்..!!"
"என்ன அங்கிள் சொல்றீங்க..?" நான் நம்ப முடியாமல் கேட்டேன்.
"யெஸ்..!! அவங்க கொலை பண்ணின எல்லாரோட ஞாபகார்த்தமாவும்.. கொலை பண்ணின ஒவ்வொருத்தர்ட்ட இருந்தும் ஏதாவது ஒரு பொருளை எடுத்து, பத்திரப் படுத்தி வச்சிருக்காங்க.. போலீஸ் அதை கைப்பற்றி இருக்கு..!! அப்டி கைப்பற்றின பொருள்கள்ல அழகு நாயகத்தோட வைர மோதிரமும் ஒன்னு..!! அது மட்டும் இல்ல.. நேத்து அழகு நாயகம் கொலை செய்யப்பட்ட நேரத்துல.. கொலை நடந்த அதே ரோட்டுல.. அவங்க ரெண்டு பேரும்.. கார்ல ட்ராவல் பண்ணிருக்குறதை போலீஸ் கண்டுபிடிச்சிருக்கு..!! அவங்கதான் அழகு நாயகத்தை கொலை பன்னிருக்கனும்னு போலீஸ் கன்ஃபார்ம் பண்ணிடுச்சு அசோக்..!! இன்னைக்கு ஈவினிங் நியூஸ் பேப்பர்ல.. அவங்க கொலை பண்ணின லிஸ்ட்ல அழகு நாயகம் பேரும் வரும்..!!"
எனக்கு சத்தியமாய் ஒன்றுமே புரியவில்லை..!! அமிர்தராஜ் அங்கிள் சொல்வதை பார்த்தால், அந்த சைக்கோ கில்லர்ஸ்.. எனக்கு லிப்ட் கொடுத்த அந்த லூசு ஜோடி மாதிரி இருக்கிறது. ஆனால், நான் என் பர்ஸை அவர்கள் காரில் தொலைக்க வில்லையே..? மதுரவாயலில் தொலைத்த பர்ஸில் இருந்து, மோதிரம் மட்டும் எப்படி தனியாக பிரிந்து.. சரியாக அவர்களிடம் சென்று சிக்கியது..? எனக்கு எதுவும் புரியவில்லை..!! ஆனால்.. அதிர்ஷ்டம் என் பக்கம் இருந்திருக்கிறது என்று மட்டும் புரிந்தது..!!