16-02-2019, 10:54 AM
"ITS MY LIFE.............!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!"
என்று திடீரென எதுவோ அலற, நான் வெலவெலத்துப் போனேன். ஸ்டூலில் இருந்த அன்புவின் செல்போன்தான் அப்படி அலறியது. 'ASHOK CALLING.. ASHOK CALLING..' என்று பளிச் பளிச்சென வெட்டியது. எனக்கு உடம்பெல்லாம் வெடவெடத்தது. செல்போனை எடுக்காமல், கண்களை அகல விரித்து.. அதையே பார்த்துக் கொண்டிருந்தேன். ஒரு இரண்டு மூன்று முறை அது அலறி, பின் ஓய்ந்தது. செல்போனுக்கு கீழே இருந்த பேப்பரில் எழுதியிருந்த வாசகங்கள் என் கண்ணில் பட்டன.
"மனைவி ஏற்படுத்திய காயம் - என்
மனதை விட்டு போகவில்லை - நான்
மண்ணை விட்டு போகிறேன்..!!"
"அன்பு...!!!!!!!!!!!!!!!!!"
நான் உடைந்துபோய் பெருங்குரலில் அழ ஆரம்பித்தேன். அழுதபடியே தரையில் விழுந்து கிடந்தேன். எவ்வளவு நேரம் என்று தெரியவில்லை. அப்புறம் கண்களை துடைத்துக்கொண்டு எழுந்தேன்..!! இப்போது என்ன செய்வது என்று புரியவில்லை. போலீசில் சொல்லலாமா.. சொன்னால் என்னை எதுவும் சந்தேகப் படுவார்களா..? ஒன்றும் புரியவில்லை. போலீஸ் எல்லாம் வேண்டாம் என்று தோன்றியது. 'மன்னிச்சுக்கோ அன்பு..' என்று மனதுக்குள் சொல்லிவிட்டு, அந்த வீட்டை விட்டு கிளம்பினேன்.
கண்களில் பொல பொலவென கண்ணீர் கொட்டிக்கொண்டே இருந்தது. அதை புடவைத்தலைப்பால் துடைத்துக்கொண்டே, ஓட்டமும் நடையுமாய் என் வீடு வந்து சேர்ந்தேன். கதவு இப்போது திறந்திருந்தது. என் புருஷன் வந்துவிட்டான் போலிருக்கிறது. வீட்டுக்குள் நுழைந்தேன். பாத்ரூமில் இருக்கிறான் போல.. சத்தம் வந்தது..!! நான் சென்று குடத்தை திறந்து, செம்பு நிறைய தண்ணீர் அள்ளி தொண்டைக்குள் ஊற்றினேன். மார்பெல்லாம் ஈரமானது. புடவைத்தலைப்பால் மாரை துடைத்துக் கொண்டபோதுதான், உள்ளே வைத்திருந்த பர்ஸின் ஞாபகம் வந்தது..!!
ஐயையோ..!! உடனே இதை மறைத்தாக வேண்டுமே..? அவன் கண்ணில் மட்டும் பட்டால் அவ்வளவுதான்.. மொத்தத்தையும் பிடுகிக் கொண்டு சென்று விடுவான். நான் உடனே பரபரப்பானேன். உள்ளறைக்கு ஓடினேன். அலமாரி திறந்து, அடுக்கி வைத்திருந்த புடவைகளை தூக்கி, அதன் கீழே விரிந்திருந்த பேப்பரை தூக்கி, அதற்குள் பர்ஸை திணித்தேன். மீண்டும் புடவைகளை அடுக்கி வைத்து விட்டு திரும்பியவள், அதிர்ந்து போனேன். என் புருஷன் கைகளை மார்புக்கு குறுக்காக கட்டிக்கொண்டு, என்னையே முறைத்துக் கொண்டிருந்தான்.
"எதைடி மறைக்கிற..?"
"ஒ..ஒன்னும் இல்லையே..?"
"இரு.. நான் பாக்குறேன்...!!"
"அதான்.. ஒன்னும் இல்லைன்னு சொல்றேன்ல..?"
நான் சொல்லி முடிக்கும் முன்பே, என் கன்னத்தில் 'பளார்ர்ர்ர்...' என்று ஒரு அறை வந்து விழுந்தது. நான் சுருண்டு போய் கட்டிலில் விழ, என் புருஷன் புடவைகளை பரபரவென கீழே இழுத்து போட்டான். நான் மறைத்து வைத்த பர்ஸை எடுத்தான். பிரித்து பார்த்தவன், 'ஆஆ...' வென வாயை பிளந்தான்.
[/url] [size][url]
"வாரே வா... ஏதுடி இவ்ளோ பணம்..? எத்தனை பேரோட படுத்த..? ம்ம்ம்... அமவுண்டை பாத்தா.. ஒரு நூறு பேர் கூட படுத்து சம்பாதிச்ச பணம் மாதிரி இருக்குது..??"
"ச்சீய்.. அது படுத்து சம்பாதிச்ச பணம் இல்லை.. கீழ கெடந்தது..!!"
"கீழ கெடந்ததோ.. மேல கெடந்ததோ.. எடுத்தா இந்த புருஷன் கிட்ட வந்து கொடுக்கனுன்னு தெரியாது..??"
"இங்க பாரு.. அது நம்ம பணம் இல்லை..!! குடு.. அதை போலீஸ்ல குடுக்கணும்...!!"
"என்னது.. போலீஸ்ல குடுக்குறியா..? போடீ பொடலங்கா..."
நக்கலாக சொன்னவன், அந்த பர்ஸை அப்படியே தன் பேன்ட் பாக்கெட்டில் திணித்தான். என் முகத்தை ஏறிட்டுப் பார்த்து விகாரமாய் இளித்தான்.
"சரி.. மத்ததெல்லாம் எடு..!!" என்றான்.
"மத்ததா..?"
"ம்ம்.. இது மாதிரி... இன்னும் இந்த வீட்டுல.. எந்தெந்த எடத்துல என்னென்ன ஒளிச்சு வச்சிருக்குற..? எல்லாத்தையும் எடு..!!"
"வேறெதுவும் இல்லை.. அது மட்டுந்தான்..!!"
"இதை நம்ப சொல்றியா..? எடுடி..!!" அவனுடைய முகம் இப்போது கோபத்தில் கொடூரமானது.
"அதான் வேறெதுவும் இல்லன்னு சொல்றேன்ல..? அது வேறாளு பணம்.. அதான் மறைச்சேன்..!!"
"எடு...!!"
"இல்லேன்னு சொல்றேன்ல..?"
"எடுடி..!!!!!!!!!!!" அவனது ஆத்திரம் அதிகரித்துக்கொண்டே போனது.
"உனக்கென்ன லூசா...? நான்தான் இல்லேன்னு சொல்றேன்ல..?" நான் பொறுமையில்லாமல் கத்த, அவன் ரவுத்திரமானான்.
"என்னடி சொன்ன..? லூசா..? என்னையா லூசுன்னு சொல்ற..? அவ்ளோ திமிர் ஆயிடுச்சா உனக்கு..? ம்ம்ம்ம்... திமிரை அடக்கனும்ல..? அடி வாங்கி ரொம்ப நாள் ஆயிடுச்சுல..?" சொல்லிக்கொண்டே அவன் பெல்ட்டை உருவ, நான் பதறினேன்.[/size]