screw driver ஸ்டோரீஸ்
அடுத்த பத்தாவது நிமிடம் நான் ஆடிட்டோரியத்தில் இருந்தேன். யார் கண்ணிலும் படாமல் நழுவி, நல்ல பிள்ளை மாதிரி அன்புக்கு அருகில் சென்று அமர்ந்து கொண்டேன். அவன் இன்னும் நன்றாக தூங்கிக் கொண்டிருந்தான். எழுப்பினேன். நான் அங்கேயேதான் அமர்ந்திருப்பது மாதிரி அவனுக்கு காட்டிக் கொண்டேன். கொஞ்ச நேரம் தூக்க கலக்கத்துடன் பேசிவிட்டு, மறுபடியும் அவன் உறக்கத்தில் ஆழ்ந்தான். நான் அமைதியாக கருத்தரங்கில் பேசுபவர்களின் உரையை கேட்க ஆரம்பித்தேன்.

கருத்தரங்கு மேலும் ஒரு மணி நேரம் நீடித்தது. அன்பு தூக்கத்தில் இருந்து விடுபட மிகவும் கஷ்டப்பட்டான். பின்னர் இருவரும் அங்கிருந்து காரில் கிளம்பினோம். மதுரவாயல் ஃப்ளை ஓவர் அருகே நான் இறங்கிக் கொண்டேன். சாலையை கடந்து எதிர்ப்புறம் சென்று ஒரு ஆட்டோ பிடித்தேன். வளரவாக்கம் என்றுவிட்டு, கண்களை மூடி தலையை சீட்டில் சாய்த்துக் கொண்டேன்.

இதயம் இன்னும் 'திடும்.. திடும்..' என ட்ரம்ஸ் வாசித்துக் கொண்டிருந்தது. துணிச்சலாக கொலை செய்தாயிற்று. இனிதான் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க வேண்டும். பதட்டத்தை முகத்தில் காட்டவே கூடாது. அடுத்து என்னென்ன செய்வது என்று மனதுக்குள் ஒருமுறை ஓட்டிப் பார்த்தேன்.

அழகு நாயகம் சொன்னது போல, போலீஸ் முதலில் என்னைத்தான் தேடி வரும். எனக்கும், அழகு நாயகத்துக்கும் தகராறு என்று மட்டுந்தான் எல்லோருக்கும் தெரியும். என்ன தகராறு என்று யாருக்கும் தெரியாது. அது எனக்கு சாதகமான விஷயம்..!!

அன்புதான் என் ட்ரம்ப் கார்ட்..!! அவன்தான் என்னை போலீசின் பிடியில் இருந்து மீட்டுக் கொண்டுவர போகிறான். அவனுக்கு என் மீது எந்த சந்தேகமும் வரவில்லை. எனக்கு ஆதரவாக ஸ்ட்ராங்காக சாட்சி சொல்வான். அகல்யாவுக்கும் எந்த சந்தேகமும் வராமல் பார்த்துக் கொள்ளவேண்டும். முதலில் இந்த உடைகள், ஷூ எல்லாவற்றையும் எரித்து சாம்பலாக்கவேண்டும். அப்புறம் அவரிடம் பறித்த பணம், மோதிரம்...!! வெயிட்.. வெயிட்...!!! நான் பட்டென்று ஞாபகம் வந்தவனாய், பேன்ட் பின் பாக்கெட்டை தொட்டுப் பார்க்க.. பர்ஸை காணோம்..!!!!

அதிர்ந்து போனேன்..!! தலையை குனிந்து ஆட்டோ சீட்டுக்கு அடியில் தேடினேன். கிடைக்கவில்லை. நூறு சதவீதம் காணாமல் போயிருந்தது...!!! மை காட்..!!!!!!!!! எங்கே தொலைத்தேன்...? அந்த லூசு ஜோடிகளின் காரிலா..? ஆடிட்டோரியத்திலா..? வெயிட்.. வெயிட்..!!! சற்று முன் அன்புவுடைய காரில் இருந்து இறங்கும் போது தொட்டுப் பார்த்தேனே..? இருந்ததே..? அப்படியானால்.. இப்போது நடந்து வரும்போதுதான் யாராவது அடித்திருக்க வேண்டும்..!!

பர்ஸ் நிறைய பணம்.. ஆடிட்டோரிய என்ட்ரன்ஸ் டிக்கெட்.. சைட் ஜிப்பிற்குள் அழகு நாயகத்தின் வைர மோதிரம்.. எல்லாவற்றையும் விட என்னுடைய டிரைவிங் லைசென்ஸ்..!! யாராவது அந்த பர்ஸை கொண்டு சென்று போலீசில் கொடுத்தால், அப்படியே லட்டு மாதிரி கவ்விக் கொள்வார்கள்..!! ச்ச்சே.. எவ்வளவு கேர்லசாக இருந்திருக்கிறேன்..?? தலையை பிடித்துக் கொண்டேன்..!!

படபடவென இதயம் துடிக்க.. கொஞ்சம் பொறுமையாக யோசிக்க ஆரம்பித்தேன். பர்ஸ் காணாமல் போனது பெரிய விஷயந்தான்.. ஆனால் பயப்பட தேவையில்லை என்று தோன்றியது. பர்ஸை எடுத்தவர்கள், போலீசில் சென்று அதை ஒப்படைக்க கூடிய வாய்ப்பு மிக மிக குறைவாக இருப்பதாகவே தோன்றியது. எடுத்தவர்கள் அதை அப்படியே வைத்துக் கொள்ளட்டும்.. போலீசில் மட்டும் ஒப்படைத்து விட கூடாது என்று கடவுளை வேண்டிக் கொண்டேன். கொஞ்சம் நிம்மதியாக இருந்தது.

அன்று இரவு எட்டுமணி..

அகல்யா தரையில் அமர்ந்தபடி டிவி பார்க்க, நான் அவள் மடியில் தலை வைத்து படுத்திருந்தேன். அவள் இதமாக என் தலை கோதி விட்டுக் கொண்டிருந்தாள். நான் இன்னும் ஏன் போலீஸ் வரவில்லை என்று யோசித்துக் கொண்டிருந்தேன். டிஸ்போஸ் செய்ய வேண்டிய ஐட்டங்களை எல்லாம் செய்தாயிற்று. இனி போலீஸ் விசாரணையை பதட்டம் இல்லாமல் எதிர் கொள்ள வேண்டும். காத்திருந்தேன்..!!

போலீஸ் என்னை ரொம்ப நேரம் காக்க வைக்கவில்லை. கொஞ்ச நேரத்திலேயே வந்து சேர்ந்தார்கள். எங்கிருந்து வருகிறோம் என்று அறிமுகம் செய்து கொண்டவர்கள், சுற்றி வளைக்காமல் நேரடியாகவே மேட்டருக்கு வந்தனர். அகல்யா என்ன நடக்கிறது என்று புரியாமல், மிரண்டு போய் பார்த்துக் கொண்டிருக்க, நான் அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதட்டமில்லாமல் பதிலளித்துக் கொண்டிருந்தேன்.

"மிஸ்டர் அழகு நாயகம் உங்க எம்.டி தான..?"

"எஸ்.. பழைய எம்.டி..!!"

"அவருக்கும் உங்களுக்கும் என்ன பிரச்னைன்னு கொஞ்சம் சொல்ல முடியுமா..?"

"பெருசாலாம் ஒன்னும் பிரச்னை இல்லை.. அக்கவுண்ட்ஸ்ல ஒரு சின்ன தப்பு பண்ணிட்டேன்.. அதுக்கு போய்.. அசிங்கமா திட்டிட்டாரு.. நானும் கை நீட்டிட்டேன்.. அவளோதான்..!! ஏன் சார் கேக்குறீங்க..?"

"சொல்றேன்..!! ம்ம்ம்... அவரை கொன்னுடுவேன்னு சொன்னீங்களா..?"

"அது.. அப்போ.. எதோ ஆத்திரத்துல சொன்னது.."

"கடைசியா அவர்கிட்ட எப்போ பேசுனீங்க..?"

"இன்னைக்கு மதியம் பேசினேன்.."

"என்ன பேசுனீங்க..?"

"மறுபடியும் வேலைக்கு சேர்த்துக்குங்கன்னு அவர்கிட்ட கெஞ்சினேன்.. அவரும் பாக்கலாம்னு சொன்னார்..!! ப்ளீஸ் ஸார்.. எதுக்கு இதெல்லாம் விசாரிக்கிறீங்கன்னு கொஞ்சம் சொல்லுங்களேன்..!!"

"அழகு நாயகம் இப்போ உயிரோட இல்ல மிஸ்டர் அசோக்.. அவரை யாரோ கொலை பண்ணிட்டாங்க..!!"

"வாட்..????????" நான் அதிர்வது போல நடிக்க, அகல்யா நிஜமாகவே அதிர்ந்தாள்.

"எஸ்..!! இன்னைக்கு மதியம் ரெண்டு மணில இருந்து நாலு மணி வரை.. நீங்க எங்க இருந்தீங்க..?"

"ம்ம்ம்ம்ம்ம்... பூந்தமல்லில ஒரு சைக்யாட்ரி சிம்போஸியம் நடந்தது.. அதை அட்டன்ட் பண்ணிட்டு இருந்தேன்.."

"எங்க நடந்தது அது..?"

"சென்ட் ஜார்ஜ் ஆடிட்டோரியம்..!!"

"என்ட்ரி எப்டி..? ரெஜிஸ்ட்ரேஷன் உண்டா..?"

"இல்ல.. இட்ஸ் ஓப்பன் டூ ஆல்.. யார் வேணா என்ட்ரன்ஸ் டிக்கெட் வாங்கிட்டு.. அட்டன்ட் பண்ணலாம்..!!"

"அந்த ஆடிட்டோரிய என்ட்ரன்ஸ் டிக்கெட் வச்சிருக்கீங்களா..?"

"ஸாரி ஸார்... வெளில வந்ததுமே.. தூக்கி போட்டுட்டேன்..!!"

"ஓஹோ..? ம்ம்ம்ம்... ஓகே மிஸ்டர் அசோக்.. நீங்க என்கூட கொஞ்சம் போலீஸ் ஸ்டேஷன் வரணும்..!! வர்றீங்களா..? " அவர் சொன்னதை கேட்டு நான் அதிர, அகல்யா பதறினாள்.

"ஸார்... என் ஹஸ்பண்டை சந்தேகப் படுறீங்களா..? கொலை பண்ற அளவுக்கு.. என் ஹஸ்பண்ட்.."

"இங்க பாருங்கம்மா.. பயப்படுறதுக்குலாம் ஒன்னும் இல்ல.. உங்க புருஷன் எந்த தப்பும் பண்ணலைன்னா.. நீங்க வொர்ரி பண்ணிக்க தேவையே இல்லை..!! சந்தேகத்தின் பேர்லதான் கூட்டிட்டு போறோம்.. விசாரணை முடிச்சுட்டு.." இப்போது நான் அவரை இடைமறித்து பேசினேன்.

"ஸார்.. நீங்க சந்தகப்படுறதுல அர்த்தமே இல்ல.. நான் அந்த டயத்துல.. அந்த சிம்போஸியம் அட்டன்ட் பண்ணிட்டு இருந்தேன்னு என்னால ப்ரூவ் பண்ண முடியும்.. என் பிரண்ட்டும் என் கூட அட்டன்ட் பண்ணினாரு..!!"

"ஓ.. இஸ் இட்..??? உங்க ப்ரண்ட் என்னவா இருக்காரு..?"

"ஹீ இஸ் எ டாக்டர்.. சைக்கியாட்ரிஸ்ட்..!!"

"ஓ..!!!!! ம்ம்ம்ம்... ஓகே.. அவருக்கு கால் பண்ணி வர சொல்லுங்க..!! அவர் வந்து சொன்னா.. நீங்க ஸ்டேஷன் வர வேண்டி இருக்காது..!!"

"ஓகே ஸார்.."

நான் சொல்லிவிட்டு என் செல்போனை எடுத்தேன். அன்புவின் நம்பருக்கு டயல் செய்தேன். செல்போனை காதுக்கு கொடுத்துவிட்டு, 'சீக்கிரம் எடுடா அன்பு...' என்று மனதுக்குள் சொன்னவாறு, கால் பிக் செய்யப்படும்வரை காத்திருந்தேன்.

*********************************************************************
Like Reply


Messages In This Thread
RE: screw driver ஸ்டோரீஸ் - by johnypowas - 16-02-2019, 10:47 AM



Users browsing this thread: 6 Guest(s)